என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓய்வு பெற்ற அதிகாரியிடம் ரூ.6.32 லட்சம் மோசடி செய்த மர்ம ஆசாமி  -கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார்
    X

    ஓய்வு பெற்ற அதிகாரியிடம் ரூ.6.32 லட்சம் மோசடி செய்த மர்ம ஆசாமி -கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார்

    • வங்கியில் இருந்து பேசுவதாக நம்பியதாக ராஜவேல் அந்த எண்களை மர்ம ஆசாமியிடம் கூறியுள்ளார்.
    • ராஜவேலுவின் வங்கி கணக்கில் இருந்து 6 லட்சத்து 32 ஆயிரத்து 665 ரூபாயை அந்த ஆசாமி அபேஸ் செய்துவிட்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன்ஷிப் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜவேல் (வயது 61). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜவேலவின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் வங்கியில் இருந்து பேசுவதாக கூறிய ஒரு ஆசாமி ராஜவேலின் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு ஆகியவற்றின் ரகசிய எண்களை கேட்டு வாங்கியுள்ளார். வங்கியில் இருந்து பேசுவதாக நம்பியதாக ராஜவேல் அந்த எண்களை மர்ம ஆசாமியிடம் கூறியுள்ளார்.

    இதையடுத்து ராஜவேலுவின் வங்கி கணக்கில் இருந்து 6 லட்சத்து 32 ஆயிரத்து 665 ரூபாயை அந்த ஆசாமி அபேஸ் செய்துவிட்டார். வங்கியில் இருந்து செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தி மூலம் பணம் பறிபோனதை அறிந்த ராஜவேல் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தாார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×