சீமான் மீது மாதர் சங்கம் புகார்- அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு

அருவறுக்கத்தக்க வகையில் மோசமாக பேசி உள்ளார்.சீமான் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
சீமான் மீது மாதர் சங்கம் புகார்- அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு
Published on

சென்னை:

அகில இந்திய மாதர் சங்கத்தின் மாநில தலைவர் வாலண்டினா, பொதுச்செயலாளர் ராதிகா ஆகியோர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யா பற்றி குறிப்பிட்டு பேசும்போது, பெண்கள் அமைப்புகள், முற்போக்கு அமைப்புகள், மாதர் சங்கங்கள் இப்பிரச்சனைக்கு குரல் கொடுக்காமல், எங்கே போய் படுத்து கிடக்கிறார்கள்? கஞ்சா, கொகைன் சாப்பிட்டு கிடக்கிறார்களா? அல்லது டாஸ்மாக்கில் குடித்துவிட்டு கிடக்கிறார்களா? என அருவறுக்கத்தக்க வகையில் மோசமாக பேசி உள்ளார்.

எனவே சீமான் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com