மரக்காணம் அருகே கல்லூரிக்கு சென்ற நர்சிங் மாணவி மாயம்

மரக்காணம் அருகே கல்லூரிக்கு சென்ற நர்சிங் மாணவி மாயமானார்.கல்லூரிக்கு சென்றும் உறவி னர்க ளிடம் விசாரித்த மகள் குறித்த விபரம் தெரியவில்லை
மரக்காணம் அருகே கல்லூரிக்கு சென்ற நர்சிங் மாணவி மாயம்
Published on

விழுப்புரம்:

மரக்காணம் அருகே உள்ள கூனிமேடு கிராம த்தைச் சேர்ந்தவர் குண சேகரன். இவரது மகள் ஆர்த்தி (வயது 18). இவர் புதுச்சேரி மாநிலம் வில்லி யனூரில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார். கல்லூரிக்கு காலை 7 மணிக்கு புறப்ப டும் இவர் மாலை 5.30 மணிக்குள் வீட்டிற்கு வந்து விடுவார்.

இந்நிலையில் கடந்த 3-ந் தேதி கல்லூரிக்கு சென்ற ஆர்த்தி இரவு 7 மணியாகியும் வீடு திரும்ப வில்லை. கல்லூரிக்கு சென்றும் உறவி னர்க ளிடம் விசாரித்த மகள் குறித்த விபரம் தெரியவில்லை. இதை யடுத்து குணசேகரன் அளித்த புகாரின் பேரில் மரக்காணம் சப்-இன்ஸ்பெக்டர் தீபன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com