காட்டுத்தீயில் சிக்கி தப்பி ஓடிய குட்டி மான்- வீடியோ வைரல்

வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பயனர்களின் நெஞ்சை உருக்கும் வகையில் உள்ளது.பயனர்கள் பலரும் தீவிபத்தில் சிக்கிய வன விலங்குகள் பற்றி ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினர்.
காட்டுத்தீயில் சிக்கி தப்பி ஓடிய குட்டி மான்- வீடியோ வைரல்
Published on: 

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் பகுதியில் ஹாலிவுட் இயக்குனர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் வசிக்கின்றனர். அங்கு சமீபத்தில் பயங்கரமான காட்டுத்தீ பற்றியது. இதில் ஆயிரக்கணக்கான ஏக்கர் வனப்பகுதிகள் எரிந்து நாசமாகின.

கட்டுக்கடங்காமல் பரவிய காட்டுத்தீயால் அந்த பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் லாஸ்ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயில் சிக்கிய மான் குட்டி ஒன்று தப்பி ஓடிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பயனர்களின் நெஞ்சை உருக்கும் வகையில் உள்ளது.

அதில், அல்டடெனா வழியாக ஒரு குட்டி மான் ஓடும் காட்சிகள் உள்ளது. இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் 30 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்ற நிலையில், பயனர்கள் பலரும் தீவிபத்தில் சிக்கிய வன விலங்குகள் பற்றி ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com