என் மலர்
இந்தியா

'சோசலிஸ்ட்', 'மதச்சார்பின்மை' வார்த்தைகளை அரசியலமைப்பு முகவுரையிலிருந்து நீக்க வேண்டும் - ஆர்எஸ்எஸ் தலைவர்
- இதைச் செய்தவர்கள் இன்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் நகலுடன் வலம் வருகின்றனர்.
- உங்கள் மூதாதையர்கள் இதைச் செய்தார்கள். இதற்காக நீங்கள் நாட்டிற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.
அரசியலமைப்பு முகப்புரையில் இருந்து 'சோசலிஸ்ட்', 'மதச்சார்பற்ற' (socialist and secular) என்ற வார்த்தைகளை நீக்க ஆர்.எஸ்.எஸ்.பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே வலியறுதியுள்ளார்.
நேற்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவசரநிலை காலத்தில் காங்கிரஸ் அரசால் முகப்புரையில் சேர்க்கப்பட்ட 'சோசலிஸ்ட்' மற்றும் 'மதச்சார்பற்ற' என்ற வார்த்தைகள் தொடர வேண்டுமா என்பது குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று ஹோசபலே வலியுறுத்தினார். இந்த வார்த்தைகள் 1976 ஆம் ஆண்டு 42வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மூலம் சேர்க்கப்பட்டன.
மேலும் அவசரநிலையை திணித்ததற்காக காங்கிரஸ் மன்னிப்பு கோர வேண்டும் என்று ஹோசபலே வலியுறுத்தினார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மறைமுகமாக குறிப்பிட்டு, "இதைச் செய்தவர்கள் இன்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் நகலுடன் வலம் வருகின்றனர். அவர்கள் இன்னும் மன்னிப்பு கேட்கவில்லை. உங்கள் மூதாதையர்கள் இதைச் செய்தார்கள். இதற்காக நீங்கள் நாட்டிற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று கூறினார்.
மத்திய பாஜக அரசு புதன்கிழமை, அவசரநிலை திணிக்கப்பட்டதன் 50வது ஆண்டு நாளான ஜூன் 25ஐ 'சம்விதான் ஹத்யா திவாஸ்' (அரசியலமைப்பு கொலை நாள்) ஆக அனுசரித்தது குறிப்பிடத்தக்கது.






