என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "military rule"
- ராணுவ இடைக்கால ஆட்சியில் பாகிஸ்தான் சார்புடைய ஜமாத் இ இஸ்லாமி அமைப்பின் ஆதிக்கம்
- ஹசீனா இந்தியாவைச் சார்ந்திருக்கும் வரைக்கும் இந்தியாவின் கைகளும் வங்காளதேச வெளியுறவு விவகாரங்களில் ஓங்கி இருந்தது
வங்காளதேச வன்முறை
வங்காள தேசத்தில் ஆட்சியில் இருந்த ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் தீவிர நிலையை எட்டியதை அடுத்து நேற்று அதன் உச்சமாக ஹசீனாவின் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்தனர். அதனைத்தொடர்ந்து ராணுவ விமானம் மூலம் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறினார்.
ஷேக் ஹசீனா பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறியதும், வங்காளதேச ராணுவம் ஆட்சியைக் கையில் எடுத்துக்கொண்டது. நாடு முழுவதும் போராட்டக்காரர்களை அமைதி காக்கும்படி ராணுவ தளபதி வகார்-உஸ்-ஜமான் தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்தியாவுக்கு எதிரான மனநிலை
எனவே ஆட்சி மாற்றத்துடன் காட்சிகள் மாறுவதும் தவிர்க்க முடியாததாகி உள்ளது. அமையவுள்ள ராணுவ ஆட்சியால் இதுவரை இருந்துவந்த இந்தியா உடனான வங்காள தேசத்தின் வெளியுறவுக் கொள்கைகளிலும் பெரிய அளவிலான மாற்றங்கள் நடக்கலாம் என்று தெரிகிறது.
இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார பந்தமும், பாதுகாப்பு தொடர்பான நல்லுறவும் ஷேக் ஹசீனா ஆட்சியில் வலுவடைந்தது. ஹசீனா இந்தியாவோடு அதிக நெருக்கம் காட்டுவதும், தற்போது நடந்துள்ள போராட்டத்திற்கான காரணங்களில் ஒன்று என்ற ஊகங்களையும் அரசியல் நோக்கர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். தற்போது ஹசீனாவுக்கு இந்தியா அடைக்கலம் அளித்துள்ளது வங்காளதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான மனநிலையையே ஏற்படுத்தியுள்ளது.
ராணுவத்தின் இடைக்கால அரசு
ராணுவத் தளபதி வகார்-உஸ்-ஜமான் தலைமையில் அமைய உள்ள இடைக்கால அரசானது எத்தகு தன்மையோடு செயல்படும் என்பதைக் கணிக்க முடியாததாக உள்ளது. வங்காள தேசம் தனக்கான அரசியல் பாதையை வருங்காலங்களில் எவ்வாறாக அமைக்க உள்ளது என்பதைப் பொறுத்தே இந்தியாவுக்கு அதன்மூலமாக வரும் சாதக பாதகங்களைக் கணிக்க முடியும். ஆனால் தற்போதைய நிலைமையோ அதிக பாதகங்கள் இருக்கும் என்பதையே உணர்த்துவதாக அமைந்துள்ளது.
ஹசீனாவின் இந்திய சார்பு
1997 முதல் 2001 வரை வங்காளதேச பிரதமராக இருந்த ஹசீனா அதன்பின் 8 ஆண்டுகள் கழித்து 2009 ஆம் ஆண்டு மீண்டும் பிரதமரானார். அன்றுதொட்டு தற்போது [2024 ஆகஸ்ட்]வரை பிரதமராக ஆட்சி செய்துள்ளார் ஹசீனா. வங்காள தேசத்தில் அதிக காலம் ஆட்சியில் இருந்த பிரதமரும் இவரே ஆவார். அதற்கு முக்கிய காரணம் இந்தியாவுடன் அவர் கொண்டிருந்த நல்லுறவே ஆகும். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகள் அதிகம் இல்லாமல் சமாளிக்கவும், ஸ்திரத்தன்மை கொண்ட ஆட்சியை நிலைநிறுத்தவும் இந்திய நல்லுறவு ஹசீனாவுக்கு கைகொடுத்தது. எனவே ஹசீனா இந்தியாவைச் சார்ந்திருக்கும் வரைக்கும் இந்தியாவின் கைகளும் வங்காளதேச வெளியுறவு விவகாரங்களில் ஓங்கி இருந்தது. ஆனால் தற்போதைய நிலைமை தலைகீழாக மாறியுள்ளதையே பார்க்கமுடிகிறது.
பொருளாதார பாதிப்பு
இந்தியாவின் வங்காளதேசத்தினுடனான வணிகத் தொடர்பும், வங்காளதேசத்தின் ஊடாக மேற்கொண்டுவந்த வணிகத் தொடர்புகளும் [ transit and shipment] தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. இந்த வணிக ஒப்பந்தங்களானது 2010 முதல் பேச்சுவார்த்தை மூலம் மெல்ல மெல்ல முன்னேறி 2015 ஆம் ஆண்டில் இந்தியா- வங்காள தேசத்திற்கிடையே கையெழுத்தானதாகும். எனவே தற்போது இந்த பெருமுயற்சிகள் அனைத்தும் புதிதாக அமையவுள்ள இடைக்கால அரசின் அரசியல் முடிவுகளையே சார்ந்துள்ளது.
ஜமாத் இ இஸ்லாமி
வங்காளதேசத்தில் இயங்கி வரும் ஜமாத் இ இஸ்லாமி அமைப்பானது தற்போதைய போராட்டங்களில் முக்கிய பங்காற்றியது. இந்த அமைப்பு பாகிஸ்தான் சார்புடையதாக பார்க்கப்படுகிறது. அமையவுள்ள புதிய இடைக்கால அரசிலும் ஜமாத் இ இஸ்லாமி அமைப்பின் ஆதிக்கம் இருக்கவே செய்யும். எனவே அவர்களின் பாகிஸ்தான் சார்பு இந்தியாவுக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய அபாயமும் உள்ளது.
சீன ஆதிக்கம்
இந்திய எல்லையில் சீனா ஏற்கனவே பல்வேறு அத்துமீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்திய எல்லை நாடான வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள இந்த பதற்றத்தையும் கூர்ந்து கவனித்து வருகிறது. அமையவுள்ள இடைக்கால அரசின் கொள்கைகள் கணிக்க முடியாத நிலையில், சீனா நிலைமையைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் சூழலும் எழுந்துள்ளது.
நழுவும் இந்தியாவின் பிடி
எனவே பாகிஸ்தான், நிலைத்தன்மையற்ற வங்காள தேசம், சீன சார்பு அதிபரைக் கொண்டுள்ள மாலத்தீவு என இந்தியாவைச் சுற்றிய எல்லைகளில் இந்தியாவின் பிடி நழுவிக்கொண்டிருப்பதையே பார்க்கமுடிகிறது என்பதே புவிசார் அரசியல் உணர்த்துகிறது.
- ஷேக் ஹசீனா லண்டன் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
- 1975-ம் ஆண்டு புரட்சியில் ஷேக் ஹசீனாவின் மொத்த குடும்பமே படுகொலை செய்யப்பட்டது.
பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971-ம் ஆண்டு நடந்த போரில் பங்கேற்ற வங்காளதேச சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த ஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருப்பதாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இந்தப் போராட்டத்தில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் தீர்ப்பு கிடைத்துவிட்ட போதிலும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி போராட்டம் தீவிரமடைந்தது.
இந்நிலையில், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா டாக்கா அரண்மனையை விட்டு பாதுகாப்பான இடத்துக்குச் சென்று விட்டார் என தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து ராணுவம் அங்கு ஆட்சியைக் கைப்பற்றியது.
நாட்டைவிட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா, திரிபுரா மாநிலம் அகர்தலாவுக்கு வருகை புரிந்துள்ளதாகவும் அங்கிருந்து லண்டன் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
வங்கதேசத்தில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றுவது ஒன்றும் இது முதல்முறையல்ல. இதற்கு முன்பே 2 முறை ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ராணுவம் காப்பாற்றிய அந்த சமயத்தில் 2 அதிபர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஷேக் ஹசீனாவின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் வங்கதேசத்தின் அதிபராக இருந்தபோது, 1975 ஆம் ஆண்டு நடந்த முதல் ராணுவப் புரட்சியின்போது படுகொலை செய்யப்பட்டார்.
அந்த புரட்சியின் போது ஷேக் ஹசீனாவும் அவரது தங்கை ஷேக் ரெஹானாவும் வெளிநாட்டில் இருந்ததால் உயிர் தப்பினர். அந்தப் புரட்சியின் போது மொத்தமாக ஷேக் ஹசீனாவின் மொத்த குடும்பமே படுகொலை செய்யப்பட்டது.
1981-ல் ராணுவப் புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்த ஜியாவுர் ரஹ்மான் ராணுவத்தினராலேயே படுகொலை செய்யப்பட்டார். அதே சமயம் பல முறை ராணுவத்தின் புரட்சி முயற்சிகள் தோல்வி அடைந்துள்ளன.
2009 ஆம் ஆண்டு ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ஏற்ற இரண்டே மாதத்தில் பங்களாதேஷ் ரைபிள் படையினர் பெரும் கலக்கம் செய்தனர் பெரும் சிரமத்திற்குப் பின்னர் அந்த கலகத்தை ராணுவம் அடக்கியது. கடந்த 2012-ம் ஆண்டும் ஹசீனாவுக்கு எதிராக ராணுவம் புரட்சி நடத்த முயன்றது குறிப்பிடத்தக்கது.
- மியான்மார் நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது.
- மியன்மார் நாட்டின் இந்த நடவடிக்கையால் பல தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
மியான்மரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டு 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனையடுத்து ராணுவ தளபதி மின் ஆங் ஹலைங் தலைமையிலான ஆட்சி அங்கு நடந்து வருகிறது.
இந்நிலையில், மியான்மர் நாட்டில் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்ததற்காக ஒரு கடைக்காரரை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த கடைக்காரரின் 3 செல்போன் கடைகளையும் அந்நாட்டு அரசு மூடியுள்ளது.
தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்த காரணத்திற்காக இதேபோல் 10 முதலாளிகளை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது. அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுப்பது நல்ல விஷயம் தானே, பின்னர் எதற்காக அவரை கைது செய்துள்ளார்கள் என்று கேள்வி எழுகிறது அல்லவா? அதற்கு ஒரு வித்தியாசமான காரணத்தை அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
மியான்மார் நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. பணவீக்கம் அதிகரித்தால் விலைவாசி விண்ணை தொடும். பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்தால் இந்நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது என்பதை மக்கள் நம்ப ஆரம்பிப்பார்கள். இது அரசுக்கு தலைகுனிவாகும். இது ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பை தூண்டும் என்று அந்நாட்டு அரசு நம்புகிறது.
மியன்மார் நாட்டின் இந்த நடவடிக்கையால் பல தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். விலைவாசி உயர்வுக்கு மத்தியில் வேலையும் இல்லாமல் அவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்