என் மலர்tooltip icon

    உலகம்

    அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள்.. முன்னாள் CIA அதிகாரி பகீர் தகவல்
    X

    அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள்.. முன்னாள் CIA அதிகாரி பகீர் தகவல்

    • 2001 முதல் 2008 வரை பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி செய்து வந்தார்.
    • அமெரிக்கா எப்போதும் சர்வாதிகார அரச தலைவர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறது.

    1999 இல் ராணுவ தளபதியாக இருந்த பர்வேஸ் முஷாரத் அப்போதைய நவாஸ் ஷெரீப் ஆட்சியை ராணுவ புரட்சி மூலம் கவிழ்த்து தன்னை ஆட்சியாளராக அறிவித்துக்கொண்டார். 2001 முதல் 2008 வரை பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி செய்து வந்தார்.

    இந்நிலையில் அவரது ஆட்சி காலத்தில் பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் சேமிப்பு கிடங்கு அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்ததாக அமெரிக்க உளவுத்துறை நிறுவனமான சிஐஏ -வின் முன்னாள் அதிகாரி ஜான் கிரியாகோ தெரிவித்துள்ளார்.

    15 ஆண்டுகள் சிஐஏவில் பணியாற்றிய ஜான் கிரியாகோ 2002 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் பணிபுரிந்த அனுபவங்களை செய்தி நிறுவனத்திடம் அண்மையில் பகிர்ந்து கொண்டார்.

    அப்போது பேசிய அவர், பர்வேஸ் முஷாரப்பும் அமெரிக்காவும் நெருங்கிய நட்புறவையும் ஒத்துழைப்பையும் கொண்டிருந்தார்கள். இராணுவ மற்றும் மேம்பாட்டு உதவி வடிவில் அமெரிக்கா மில்லியன் கணக்கான டாலர்களை செலுத்தி பர்வேஸ் முஷாரப்பின் ஒத்துழைப்பைப் பெற்றது. நாங்கள் வாரத்திற்கு பல முறை முஷாரப்பை சந்தித்தோம்.

    அமெரிக்கா இந்த அணு ஆயுதங்களை சுதந்திரமாக கையாள முஷாரப் அனுமதித்தார். பாகிஸ்தான் அரசாங்கத்துடனான எங்கள் உறவு மிகவும் அன்பானது. அமெரிக்கா எப்போதும் சர்வாதிகார அரச தலைவர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறது.

    அவர்கள் பொதுக் கருத்தைப் பற்றியோ அல்லது ஊடகங்களைப் பற்றியோ கவலைப்பட வேண்டியதில்லை. எனவே நாங்கள் அடிப்படையில் முஷாரப்பை விலைக்கு வாங்கினோம்" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×