என் மலர்

  நீங்கள் தேடியது "price rise"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஜி.எஸ்.டி., விலை உயர்வு, அக்னிபாத் குறித்து விவாதிக்க, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
  • சிவசேனா, காங்கிரஸ் உறுப்பினர்கள் கொடுத்த நோட்டீஸ் அடிப்படையில் விவாதம்.

  பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 18ந் தேதி தொடங்கியது. ஜிஎஸ்டி வரி விதிப்பு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, அக்னிபாத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் எழுப்பி வந்தன.

  இதனால் ஏற்பட்ட அமளி காரணமாக அவை நடவடிக்கைள் பாதிக்கப்பட்டன. அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி இரு அவைகளையும் சேர்ந்த 27 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

  இந்நிலையில் பாராளுமன்ற மக்களவையில் இன்று விலைவாசி உயர்வு தொடர்பாக விதி 193ன் கீழ் விவாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவசேனா எம்.பி. விநாயக் ராவத் மற்றும் காங்கிரஸ் எம்.பி.மணீஷ் திவாரி ஆகியோர் அளித்துள்ள இது தொடர்பான நோட்டீஸ் பெறப்பட்டுள்ளதன் அடிப்படையில் விவாதம் நடைபெறுகிறது.

  இந்நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத் மற்றும் பொடாட் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து 30 பேர் உயிரிழந்தது குறித்து மாநிலங்களவை நிகழ்ச்சிகளை ஒத்தி வைத்து விவாதிக்க கோரி, காங்கிரஸ் எம்.பி.சக்திசிங் கோகில் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

  இதேபோல் மத்திய அமலாக்கத்துறை வழக்கில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கைது செய்யப்பட்டுள்ள விவகாரத்தை பாராளுமன்றத்தில் எழுப்ப அக்கட்சி எம்.பி.க்கள் திட்டமிட்டுள்ளார்.

  மத்திய புலனாய்வு அமைப்புகளை அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாகவும், எதிர்க்கட்சி தலைவர்களின் நடவடிக்கைகளை இந்த அமைப்புகள் மூலம் தடுத்து நிறுத்தி வருவதாகவும், குற்றம் சாட்டியுள்ள சிவசேனா எம்.பி.பிரியங்கா சதுர்வேதி, இது குறித்து மாநிலங்களவையில் விவாதிக்க கோரி நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விலைவாசி உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்துகிறது.
  • ஆகஸ்டு 5-ம் தேதி நாடு முழுவதும் இந்தப் போராட்டம் நடைபெற உள்ளது.

  புதுடெல்லி:

  பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  இதையடுத்து, அவை நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக இதுவரை 25-க்கு மேற்பட்ட எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.

  இந்நிலையில், விலைவாசி உயர்வு, வேலையின்மை, பணவீக்கம் ஆகியவற்றைக் கண்டித்து ஆகஸ்டு 5-ம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

  மேலும், பிரதமர் இல்லத்தை முற்றுகையிடவும் முடிவு செய்துள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரான்ஸ் நாட்டு மக்களின் தொடர் போராட்டத்தின் எதிரொலியாக டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மீதான கூடுதல் வரியை 6 மாதங்களுக்கு ரத்து செய்வதாக பிரதமர் எடோவிட் பிலிப் அறிவித்துள்ளார். #FrenchPM #EdouardPhilippe #fueltax
  பாரிஸ்:

  பிரான்ஸ் நாட்டில் பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் அரசின் நடவடிக்கைகளுக்கான செலவினங்களுக்காக பெட்ரோல், டீசல் மீது அதிகமான வரி விதிக்கப்பட்டது.

  இந்த வரிவிதிப்பினால் ஏற்பட்ட டீசல் விலை உயர்வை எதிர்த்து பிரான்சில் கடந்த 3 வாரங்களாக பொதுமக்கள் மஞ்சள் நிறத்தில் மேலாடைகளை அணிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

  பாதுகாப்பு கருதி தலைநகர் பாரிசில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான சாம்ஸ் எலிசீசை போலீசார் மூடினர். மேலும் அங்குவந்த பொதுமக்களை சோதனை செய்தனர்.

  இதனால் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதை முன்கூட்டியே எதிர்பார்த்து பல கடைகள், வங்கிகள் மற்றும் ஓட்டல்கள் மூடப்பட்டன.

  இதற்கிடையே, போலீசார் மீது போராட்டக்காரர்கள் மஞ்சள் நிற பெயிண்டை வீசினர். அதனால் வன்முறை வெடித்தது. எனவே அவர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள்.  இதேபோல், பிரான்ஸ் முழுவதும் சுமார் 1,600 இடங்களில் இந்த போராட்டம் வெடித்தது. இதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சில இடங்களில் போராட்டக்காரர்கள் வன்முறையிலும் ஈடுப்பட்டு பொது சொத்துகளை நாசப்படுத்தினர். சில போராட்டக்காரர்கள் முகமூடிகளை அணிந்து கொண்டு போலீசாரின் தடுப்புகளை உடைத்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

  இந்நிலையில், நடுத்தர மக்களின் சுமையை குறைப்பதற்காக பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்ட எரிபொருட்கள் மீதான வரியை 6 மாதங்களுக்கு ரத்து செய்வதாக பிரதமர் எடோவர்ட் பிலிப் இன்று அறிவித்துள்ளார்.

  தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்களிடையே உரையாற்றிய எடோவர்ட் பிலிப், மக்களின் கோபத்தை பார்க்காமலோ, கேட்காமலோ இருக்க வேண்டுமானால் நாம் குருடாகவோ, செவிடாகவோ இருக்க வேண்டும். இந்த நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் தகுதி எத்தகையை வரிவிதிப்புக்கும் இருக்க கூடாது.

  எனவே, மக்களின் போராட்டத்துக்கு மதிப்பளித்து வரும் 6 மாதங்களுக்கு எரிபொருட்கள் மீதான கூடுதல் வரியை அரசு ரத்து செய்துள்ளது என அறிவித்துள்ளார். #FrenchPM #EdouardPhilippe #fueltax #fueltaxincrease #Parisprotests
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மக்கள் பிரச்சினை என்பதால் முழு அடைப்பு போராடத்துக்கு பா.ம.க. ஆதரவு அளிக்கும் என்று ஜி.கே.மணி கூறியுள்ளார். #FuelPrice #BharatBandh #GKMani

  சென்னை:

  பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை (10-ந்தேதி) பாரத் ‘பந்த்’க்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

  தமிழ்நாட்டில் தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ‘பந்த்’க்கு ஆதரவு தெரிவித்துள்ளன. பா.ம.க. எடுக்க வேண்டிய நிலைப்பாடு பற்றி கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மாநிலத் தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் ஆலோசனை நடத்தினார்கள். பின்னர் கட்சியின் நிலைப்பாடு பற்றி ஜி.கே.மணி கூறியதாவது:-

  பெட்ரோல்-டீசல் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் உள்பட அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது.


   

  இது மக்களை வெகுவாக பாதிக்கும் பிரச்சினை. பொதுவாகவே மக்கள் பிரச்சினை என்றால் முன்னணியில் நின்று குரல் கொடுப்பது பா.ம.க.

  எனவே மக்களுக்கான இந்த போராட்டத்தையும் ஆதரிக்க பா.ம.க. முடிவு செய்துள்ளது. நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தை வெளியில் இருந்து பா.ம.க. ஆதரிக்கிறது.

  இவ்வாறு ஜி.கே.மணி கூறினார். #FuelPrice #BharatBandh #GKMani

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாளை எதிர்கட்சிகள் நடத்தும் பந்த் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்க கூடாது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். #Radhakrishnan #FuelPrice #BharatBandh

  சென்னை:

  மத்தியில் 50 ஆண்டுகளாக ஆட்சி செய்து அனைத்து துறைகளையும் சீரழித்த காங்கிரசும் அதற்கு துணை போன தி.மு.க.வும் மக்களை ஏமாற்றுவதற்காக ‘பந்த்’ அறிவித்துள்ளன.

  மக்கள் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. பெட்ரோல்-டீசல் விலையை மனம்போல் உயர்த்துவோம் என்று ஆட்சியில் இருப்பவர்கள் நினைப்பார்களா? எங்களுக்கும் இந்த விலை உயர்வில் விருப்பம் இல்லை தான். ஏன் விலை ஏறுகிறது? இந்த சிக்கலுக்கு யார் காரணம் என்பதை யோசிக்க வேண்டும்.

  மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரசும், தி.மு.க.வும் தேர்தல் ஆதாயத்துக்காக எண்ணெய் நிறுவனங்களை கடனில் தள்ளினார்கள். லட்சக்கணக்கான கோடி ரூபாய் கடனில் சிக்கி தத்தளித்தன. அந்த கடனை அடைக்க வேண்டாமா? அவர்கள் செய்த தவறுகளை திருத்தி வருகிறோம். அதனால் சில சிரமங்களை மக்களும் ஏற்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

  பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்கிறார்கள். மத்திய அரசும் அதைத்தானே விரும்புகிறது. ஆனால் மாநில அரசுகளின் நிலை என்ன?

   


  ஜி.எஸ்.டி. கவுன்சிலில் அனைத்து மாநில நிதி அமைச்சர்களும் இடம் பெற்றுள்ளார்கள். அந்த கவுன்சில்தான் வரி நிர்ணயம் செய்கிறது. ஜி.எஸ்.டிக்குள் பெட்ரோலிய பொருட்களை கொண்டுவருவதை ஏற்பார்களா?

  50 வருடமாக மக்களை ஏமாற்றியே ஆட்சி செய்த காங்கிரஸ், தி.மு.க.வின் ஏமாற்று வேலைதான் இந்த ‘பந்த்’ நாடகமும்.

  எங்கள் கொள்கை நாட்டில் தூய்மையான, நேர்மையான நிர்வாகம் வேண்டும். கடனில் சிக்கி கிடக்கும் நிறுவனங்களை மீட்டு மக்களுக்கு சிறப்பான சேவை செய்ய வைக்க வேண்டும். அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம்.

  உண்மை நிலையை உணர்ந்து எதிர்க் கட்சிகளின் ‘பந்த்’ நாடகத்தை தமிழக மக்கள் முறியடிக்க வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறினார். #Radhakrishnan #FuelPrice #BharatBandh

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெட்ரோல்,டீசல் விலை உயர்வு எதிரொலியாக பாம்பன் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். #fishermenstrike #FuelPrice

  ராமேசுவரம்:

  பெட்ரோல், டீசல் விலை உயர்வு கடந்த 10 நாட்களாக மிகவும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதனால் அனைத்து தரப்பினரும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

  கடலில் மீன் பிடிக்கச் செல்லும் விசைப்படகு மீனவர்களுக்கு 1800 லிட்டர் டீசலுக்குத்தான் மானியம் வழங்கப்படுகிறது. அதன் பிறகு தேவைப்படுபவர்கள் கூடுதல் விலை கொடுத்து தான் டீசல் வாங்க வேண்டும். கூடுதல் விலை கொடுக்க வேண்டியதிருப்பதால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  டீசல் விலையை உடனே குறைக்க வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனைச் சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. 105 விசைப்படகுகளைச் சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். #fishermenstrike #FuelPrice

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. #FuelPrice #BharatBandh #NCP
  புதுடெல்லி:

  பெட்ரோல், டீசல் விலையை பெட்ரோலிய நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் உயரவில்லை. ஆனாலும், இந்தியாவில் பெட்ரோல்- டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.
   
  இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு  51 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.83.13 ஆகவும், டீசல் விலை 56 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.76.17 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. விரைவில் இவற்றின் விலை 100 ரூபாயை தாண்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 71 ரூபாயை தாண்டியுள்ளதும் பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

  பெட்ரோல்- டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதாலும், இந்திய பணத்தின் மதிப்பு வீழ்ச்சி அடைவதாலும், அதை எதிர்க்கும் வகையில் வரும் 10-ம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ளது.

  இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

  இதுதொடர்பாக அந்த கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை மற்றும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து நடத்தப்படும் முழு அடைப்பு போராட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். நீங்கள் தரும் ஆதரவால் போராட்டம் வெற்றி பெற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. #FuelPrice #BharatBandh #NCP
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் நடைபெறவுள்ள போராடத்துக்கு திமுக ஆதரவு அளிக்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #FuelPrice #BharatBandh #DMK #Stalin
  சென்னை:

  பெட்ரோல், டீசல் விலையை பெட்ரோலிய நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் உயரவில்லை. ஆனாலும், இந்தியாவில் பெட்ரோல்- டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.

  தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 83 ரூபாயையும், ஒரு லிட்டர் டீசல் 76 ரூபாயையும் தாண்டி இருக்கின்றன. விரைவில் இவற்றின் விலை 100 ரூபாயை தாண்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு  51 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.83.13 ஆகவும், டீசல் விலை 56 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.76.17 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

  சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 65 ரூபாய் என இருந்து வந்த நிலையில் இப்போது 71 ரூபாயை தாண்டி இருக்கிறது. இதுவும் பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

  தொடர்ந்து பெட்ரோல்- டீசல் விலை உயர்த்தப்பட்டு வருவதாலும், இந்திய பணத்தின் மதிப்பு வீழ்ச்சி அடைவதாலும், அதை எதிர்க்கும் வகையில் பெரிய அளவில் நாடு தழுவிய போராட்டம் நடத்துவதற்கு காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.  அதிகரித்து வரும் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் வரும் 10-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

  இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு  திமுக ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், பந்த் வெற்றியடைய திமுக அனைத்து வழிகளிலும் ஒத்துழைக்கும் என்றும் தெரிவித்துள்ளார். #FuelPrice #BharatBandh #DMK #Stalin
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
  சென்னை:

  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதன்காரணமாக அவ்வப்போது பெட்ரோல்-டீசல் விலையில் ஏற்றம், இறக்கம் இருந்து வருகிறது.

  இருந்தபோதிலும் கடந்த மாதம் 24-ந்தேதி முதல் மே 13-ந்தேதி நள்ளிரவு வரை 19 நாட்கள் பெட்ரோல்-டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்து வந்தது. கர்நாடக தேர்தலையொட்டி பெட்ரோல்-டீசல் விலை மாற்றம் செய்யப்படாமல் இருந்ததாக கூறப்பட்டது.

  இதை உறுதி செய்யும்வகையில் கர்நாடக தேர்தலுக்கு பின்னர், பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. கர்நாடக தேர்தல் முடிவடைந்த நிலையில் 13-ந்தேதி நள்ளிரவு முதல் பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டதாக பெட்ரோல்-டீசல் விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

  அதாவது, 13-ந்தேதி நள்ளிரவுக்கு முன்னதாக பல நாட்களாக சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.77.39-ம், டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.69.52-ம் ஆக இருந்தது. ஆனால், 13-ந்தேதி நள்ளிரவு பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 0.22 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.77.61 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதேபோன்று டீசல் விலை ஒரு லிட்டருக்கு 0.27 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.69.79 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

  14-ந்தேதி நள்ளிரவு பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 0.16 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.77.77 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதேபோன்று டீசல் விலை ஒரு லிட்டருக்கு 0.23 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.70.02 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

  கடந்த ஏப்ரல் மாதத்தை பொறுத்தமட்டில் 24-ந்தேதிக்கு பின்னர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை குறைந்தபட்சம் ரூ.76.48 ஆக இருந்தது. அதிகபட்சம் ரூ.77.43 ஆக இருந்தது.

  இதன்படி பார்த்தால் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக பெட்ரோல் விலை 0.85 காசுகள் மட்டுமே உயர்ந்துள்ளது. அதேபோன்று ஏப்ரல் மாதத்தில் ஒரு லிட்டர் டீசல் விலை குறைந்தபட்சம் ரூ.68.12 ஆக இருந்தது. அதிகபட்சம் ரூ.77.43 ஆக இருந்தது. இதன்படி ஒரு மாதத்தில் அதிகபட்சமாக டீசல் விலை 1.44 காசுகள் மட்டுமே உயர்ந்துள்ளது.

  ஆனால் கடந்த 2 நாட்களில் மட்டும் பெட்ரோல் விலை 0.38 காசுகளும், டீசல் விலை 0.50 காசுகளும் உயர்ந்துள்ளது. பொதுவாக ஓரிரு நாட்களில் சராசரியாக 0.02 காசுகள் முதல் 0.10 காசுகள் வரை விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருக்கும் என்றும், கடந்த 2 நாட்களாக வழக்கத்தை விட கூடுதலாக விலை ஏற்றம் செய்யப்படுவதாகவும், இதுபோன்ற விலை ஏற்றம் இன்னும் ஒருவாரத்துக்கு இருக்கலாம் என்றும் பெட்ரோல்-டீசல் விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

  பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.#tamilnews 
  ×