என் மலர்
நீங்கள் தேடியது "Bananas"
- பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளில் பல்வேறு வகையான வாழைகளை பயிர் செய்துள்ளனர்.
- வாழைத்தார்களை வாங்கி செல்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து வாழைத்தர்களை வாங்கி செல்கின்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளான வெங்கரை, ஓலப்பாளையம், குச்சிபாளையம், பாலப்பட்டி, மோகனூர், குப்புச்சிபாளையம், பொத்தனூர், பரமத்தி வேலூர், அனிச்சம் பாளையம், நன்செய் இடையாறு, பாண்டமங்கலம் வெங்கரை, பிலிக்கல் பாளையம், ஆனங்கூர், ஜேடர்பாளையம், கொத்த மங்கலம், சிறுநல்லிக் கோவில், தி.கவுண்டம் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பூவன், பச்சநாடன், ரஸ்தாலி, கற்பூரவள்ளி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வகையான வாழைகளை பயிர் செய்துள்ளனர்.
வாழைத்தார்
வாழைத்தார் விளைந்த வுடன் கூலி ஆட்கள் மூலம் வெட்டி உள்ளூர் பகுதி களுக்கு வரும் வியாபாரி களுக்கும், பரமத்தி வேலூ ரில் செயல்பட்டு வரும் தினசரி வாழைத்தார் ஏல மார்க்கெட்டிற்க்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். வாழைத்தார்களை வாங்கி செல்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து வாழைத்தர்களை வாங்கி செல்கின்றனர்.
வாங்கிய வாழைத்தார் களை கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங் களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப் பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.450-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.350-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.250-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.250-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைத்தார் ஒன்று ரூ.500-க்கும் ஏலம் போனது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.350-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைத்தார் ஒன்று ரூ.700-க்கு விற்பனையானது.
- விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பூவன், பச்சநாடன், கற்பூர வள்ளி, ரஸ்தாலி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வாழை களை பயிர் செய்துள்ளனர்.
- வரத்து குறைவால் வாழைத்தார்கள் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், பாலப்பட்டி, மோகனூர், பொத்தனூர், பாண்ட மங்கலம், வெங்கரை, அண்ணா நகர், பிலிக்கல் பாளையம், ஆனங்கூர், ஜேடர்பாளையம், கொத்த மங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பூவன், பச்சநாடன், கற்பூர வள்ளி, ரஸ்தாலி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வாழை களை பயிர் செய்துள்ளனர்.
வாழைத்தார்களை வெட்டி உள்ளூர் பகுதி களுக்கு வரும் வியாபாரி களுக்கும், பரமத்தி வேலூர் கரூர் பழைய பை-பாஸ் சாலையில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
வாழைத்தார்களை வாங்கிச் செல்வதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியா பாரிகள் வந்திருந்து தங்க ளுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு வாழைத்தார்களை வாங்கி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்க ளுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த வாரம் பூவன் வாழைத்தார் ஒன்றுக்கு ரூ.400-க்கும், ரஸ்தாளி வாழைத்தார் ரூ.250-க்கும், பச்சநாடன் வாழைத்தார் ரூ.200-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.250-க்கும், மொந்தன் வாழைத்தார் ரூ.500-க்கும் விற்பனையானது.
நேற்று பூவன் வாழைத்தார் ஒன்றுக்கு ரூ.350-க்கும், ரஸ்தாளி வாழைத்தார் ரூ.350-க்கும், பச்சநாடன் வாழைத்தார் ரூ.300-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.400-க்கும், மொந்தன் வாழைத்தார் ரூ.700-க்கும் வாங்கிச் சென்றனர். வரத்து குறைவால் வாழைத்தார்கள் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்தன.
- அரசு தொடக்கப்பள்ளியில் கட்டிடத்தின் மேற்கூரையில் 200-க்கும் மேற்பட்ட ஓடுகள் தூக்கி வீசப்பட்டன.
திருப்பூர் :
திருப்பூரை அடுத்த பட்டம்பாளையம், காட்டுப்பாளையம், பருத்திக்காட்டுப்பாளையம் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் பட்டம்பாளையத்தில் ஒரு தென்னை மரம் முறிந்து விழுந்தது. ஒரு பனை மரம் வேரோடு சாய்ந்தது. இதுபோல் பருத்திக்காட்டுப்பாளையம் பகுதியில் பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்தன. அதுபோல் சுற்றுப்புற பகுதிகளில் வாழை மரங்களும் சேதமானதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.
சேவூர் அருகே பொங்கலூர் ஊராட்சியில் பகுதியில் சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்தது. வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருந்தது. இந்நிலையில் கடந்த ஒரு சில நாட்கள் மழை அவ்வப்போது பெய்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை திடீரென சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதனால் பொங்கலூர் ஊராட்சி பகுதியில் உள்ள கிராமங்களில் தோட்டங்களில் வாழை மரங்கள் குலை தள்ளி அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் 5000-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தது.
மேலும் பொங்கலூர் புது காலனியில் மின்கம்பம் ஒன்று சாய்ந்தது. மேலும் அரசு தொடக்கப்பள்ளியில் கட்டிடத்தின் மேற்கூரையில் 200 -க்கும் மேற்பட்ட ஓடுகள் தூக்கி வீசப்பட்டன. இதை தொடர்ந்து வருவாய்த்துறையினர் வாழை மரங்களை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். தற்போது சேதமடைந்துள்ள வாழை மரங்களுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் எனவிவசாயிகள் தெரிவித்தனர்.
+2
- ஈரோடு மாநகர் பகுதியில் 9 மணி அளவில் காற்றின் வேகம் அதிக அளவில் இருந்தது.
- பெருந்துறை பகுதியில் நேற்று பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வந்தது. குறிப்பாக அக்னி நட்சத்திரம் வெயில் நிறைவடைந்ததும் வெயிலின் தாக்கம் குறையும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
கடந்த ஒரு வாரமாக ஈரோடு மாவட்டத்தில் 100 டிகிரி வெயில் பதிவாகி வந்தது. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது. அனல் காற்றுடன், புழுக்கமும் நிலவியதால் வாகன ஓட்டிகள், வீட்டில் குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்தது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கி கிடந்தனர். முக்கியச் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
இந்நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து சூறாவளி காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. ஈரோடு மாநகர் பகுதியில் 9 மணி அளவில் காற்றின் வேகம் அதிக அளவில் இருந்தது.
அப்போது இடி மின்னல் பயங்கரமாக இருந்தது. பின்னர் சிறிது நேரம் சாரல் மழை பெய்தது. பலத்த காற்றால் விளம்பர பேனர்கள் பறந்து சென்றன. இதேப்போல் மாவட்டத்தில் அதிகபட்சமாக பெருந்துறையில் 45 மி.மீ மழை பெய்தது. பவானி, சென்னிமலை, அம்மாபேட்டை போன்ற பகுதிகளிலும் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
ஈரோட்டில் இருந்து பவானி லட்சுமி நகர் வரை காற்று கடுமையாக வீசியதால் அந்த சமயம் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்குவதில் கடும் அவதி அடைந்தனர். சென்னி மலையில் இரவு 10 மணி முதல் தொடர்ந்து ஒரு மணி நேரம் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
பெருந்துறை பகுதியில் நேற்று பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் பெருந்துறை அடுத்த வாய்க்கால் மேடு பகுதியைச் சேர்ந்த குழந்தைசாமி, கந்தசாமி ஆகியோருக்கு சொந்தமான ரூ.10 லட்சம் மதிப்பிலான வாழைகள் சேதமடைந்தது. இதே போல் அதே பகுதியில் சின்னப்பன் என்பவர் 20-க்கும் மேற்பட்ட வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டு உள்ளார். நேற்று வீசிய சூறாவளி காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 15 வீடுகளின் மேல் இருந்த ஆஸ்பெட்டாஸ் ஷீட்டுகள் பறந்து சென்றன. மேற்கூரைகள் அனைத்தும் தூக்கி வீசப்பட்டு காட்சி அளிக்கிறது. இதேப்போல் பவானி, அம்மாபேட்டை, அந்தியூர் பகுதிகளிலும் இரவு ஒரு மணி நேரம் இடி , மின்னலுடன் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. சூறாவளி காற்றுடன் மண்ணும் வாரி இறைத்து வந்ததால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். எனினும் இந்த எதிர்பாராத மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
பெருந்துறை - 45, பவானி - 31.60, அம்மாபேட்டை - 30, சென்னிமலை - 25.60, ஈரோடு-2.
- பல 100 ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி ஆண்டுதோறும் நடக்கிறது.
- பயிர்கள் பாதிக்கப்பட்டு விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கின்றனர்.
திருப்பூர் :
திருப்பூர், கோவை மாவட்டங்களில் விவசாயம் பரவலாக நடந்து வருகிறது. காய்கறி பயிர்கள் மட்டுமின்றி தென்னை, வாழை, மக்காச்சோளம் உள்ளிட்ட நீண்ட கால பயிர்களும் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்த இரண்டு மாவட்டங்களில், பல 100 ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி ஆண்டுதோறும் நடக்கிறது. உற்பத்தியாகும் வாழைகள், வியாபாரிகள் மூலம் கேரள மாநிலத்துக்கு விற்பனைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. கனமழை, வறட்சி, பூச்சி நோய் தாக்குதல், இயற்கையாக பரவும் தீ விபத்து உட்பட பல்வேறு காரணங்களால், பயிர்கள் பாதிக்கப்பட்டு விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கின்றனர்.குறிப்பாக வாழை பயிரிடும் விவசாயிகள், கனமழை, சூறைக்காற்று ஆகியவற்றின் காரணமாக பெருத்த நஷ்டத்தை சந்திக்கின்றனர்.
குறிப்பிட்ட சில பயிர்களுக்கு மட்டுமே அரசு காப்பீடு திட்டத்தை வழங்குகிறது. இதனால் விவசாயிகள், பேரிடர் மற்றும் இயற்கை சீற்றங்கள் காரணமாக ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தப்பித்து கொள்ள முடியும். ஆனால் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களுக்கு மட்டுமே இந்த காப்பீடு திட்டம் பொருந்தும் என்பதால், இதர கிராமங்களில் வாழை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இது பொருந்தாது.இதனால் இழப்பினை சந்திக்கும் வாழை விவசாயிகள் செய்வதறியாமல் பரிதவிக்கின்றனர். ஆண்டு தோறும் பேரிடர் காரணமாக வாழைகள் கடுமையாக சேதமடைகின்றன.
சமீபத்தில் திருப்பூர், கோவை மாவட்டங்களில் வீசிய சூறைக்காற்று மற்றும் கன மழையால் பல 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் அடியோடு சாய்ந்து விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. எனவே அனைத்து தரப்பு விவசாயிகளும் பயன்பெறும் வகையில் காப்பீடு திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. இந்தநிலையில் திருப்பூர் மாவட்டத்தில் காற்றுக்கு வாழை மரங்கள் முறிவதற்கான வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை மையத்தின் கோவை வேளாண் காலநிலை ஆராய்ச்சி நிலையம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலை சார்பில் திருப்பூர் மாவட்டத்தின் காலநிலை விவரம் வழங்கி வருகிறது. அதன்படி வரும் நாட்களில் மாவட்டத்தின் காலநிலை, 35 முதல் 37 டிகிரி செல்சியஸாக இருக்கும். சராசரியாக காற்றின் வேகம் மணிக்கு 4 முதல், 8 கி.மீ., வேகத்தில், பெரும்பாலும் கிழக்கு திசையில் இருந்து, தென் கிழக்கு திசை வரை பதிவாகும்.
காற்றுக்கு 5 மாதம் வயதுடைய வாழை மரங்கள் சாய்ந்து விழும் வாய்ப்புள்ளதால் மரங்களுக்கு முட்டுக்கொடுக்க வேண்டும். பரவலாக வாழையில் குருத்து அழுகல் நோய் தென்படுகிறது. இதை கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் தண்ணீரில் 20 கிராம் அளவுக்கு பிளீச்சிங் பவுடர் கலந்து, மரத்தின் அருகே ஊற்ற வேண்டும். நோய் தாக்குவதற்கு முன் இந்த மருந்து செலுத்தினால் நோய் பரவாமல் பாதுகாக்க முடியும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- இந்நிலையில் கடந்த வாரத்தை விட, இந்த வாரம் வாழைத்தார்களின் விலை அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தள்ளனர்.
- நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 1500 வாழைத்தார்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார் தாலுகா பாண்டமங்கலம், பொத்த னுார், நன்செய்இடையாறு, குப்பிச்சிபாளையம், மோ கனுார், பரமத்திவேலுார், அண்ணாநகர், பிலிக்கல்பா ளையம், ஆனங்கூர், ஜேடர்பாளையம், கொத்த மங்கலம், சிறுநல்லி கோவில், அய்யம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் விவசாயிகள் பூவன், பச்சநாடன், கற்பூரவல்லி, ரஸ்தாளி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வகையான வாழைகளை பயிரிட்டுள்ளனர்.
வாழைத்தார்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்திவேலுாரில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
இங்கு ஏலம் எடுக்கப்ப டும் வாழைத்தார்களை, தமிழ்நாட்டில் உள்ள நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை, நீலகிரி, கரூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த வாரத்தை விட, இந்த வாரம் வாழைத்தார்களின் விலை அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தள்ளனர். நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 1500 வாழைத்தார்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.500-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் ரூ.350-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் ரூ.300-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.400-க்கும், மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.5 க்கும் விற்பனையானது.
வரத்து குறைவு மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வீடுகளில் கனி வைத்து வழிபடுவர், கோவில் விசேஷங்கள் தொடர்ந்து வருவதால் வாழைத்தார் விலை உயர்ந்துள்ளதாக வியா பாரிகள் தெரிவித்தனர்.
- ஒரு பழத்தை ரூ. 5க்கு வாங்கிவிட முடியும்.
- வாழைப்பழங்கள் சாப்பிட்ட பிறகு தொண்டையில் எரிச்சல், வயிறு கோளாறு போன்றவை ஏற்படுவதாக கூறப்படுகிறது.
திருப்பூர் :
முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் பொதுமக்கள் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றாகும். அனைத்து முக்கிய சுபநிக ழ்ச்சிகள், மருத்துவத்தில் வாழைப்பழத்துக்கு முக்கிய இடமுண்டு. பொதுவாக அனைத்து பழங்களுமே சத்து நிறைந்ததுதான். ஆனால் மற்றவற்றை விட இதன் விலையை ஒப்பிடும்போது மிக மிக குறைவு. ஒரு பழத்தை ரூ. 5க்கு வாங்கிவிட முடியும். மேலும் இதில் அதிக சத்துக்கள் அடங்கியுள்ளது. இது எல்லா காலங்களி லும், எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூ டியது. அதனாலேயே எல்லோரும் விரும்பி சாப்பிடுகிறார்கள். சில மாதங்களாக திருப்பூர் நகரில் விற்கப்படும் வாழைப்பழங்கள் அத்தனை ருசியாக இல்லை எனவும் வாழைப்பழங்கள் சாப்பிட்ட பிறகு தொண்டையில் எரிச்சல், வயிறு கோளாறு போன்றவை ஏற்படுவதாக கூறப்படுகிறது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்:-
விவசாயிகள் தங்களது தோட்டங்களில் விளைவிக்க ப்படும் வாழைத்தார்களை நகரத்தில் கொண்டு சென்று விற்க வேண்டும் என்பதற்காக பழுப்பதற்கு முன் 10நாளைக்கு முன்பே வெட்டி விடுகிறார்கள். அதனை விவசாயிகளி டமிருந்து வாங்கும் மொத்த வியாபாரிகள் தங்களது குடோனுக்கு கொண்டு சென்று இருப்பு வைக்கி ன்றனர். மேலும் விரைந்து பழுக்க வைக்க போபாலின் என்ற ரசாயனத்தை நீரில் கலந்து தெளித்து விடுகிறார்கள். தெளித்த சில மணி நேரங்களில் பழங்கள் பழுத்து விடுகின்றன. முதலில் இந்த முறையில் தான் மோரீஸ் பழங்களை பழுக்க வைத்துக் கொண்டிரு ந்தனர். தற்போது நாட்டு பழ வகைகளையும் பழுக்க வைக்கின்றனர். இப்படி பழுக்க வைப்பதால் மருத்துவ குணம் கெட்டுப்போ வதோடு அதன் தனித்தன்மை யையும் இழந்துவிடுகிறது. ரசாயனம் கலக்கப்படும் பழங்கள் 7 நாட்கள் வரை கெடாமல் இருக்கின்றன. பழமும் புதிது போலவே இருப்பதால் நாமும் எளிதில் ஏமாந்து விடுகிறோம்.
இந்த பழங்கள் நம்முடைய சருமத்தில் தடிப்புகள் மற்றும் அரிப்புகளை ஏற்படுத்துமே தவிர நன்மையை தராது. மேலும் வயிற்றுக்குள் செல்லும் இந்த ரசாயனம் வயிற்றுப்புண், சைனஸ், ஆஸ்துமா, செரிமான கோளாறு, சிறுநீரக கோ ளாறு போன்றவைகளையும் ஏற்படுத்தும். மார்க்கெட்கள், மற்றும் பழ குடோன்களில் உணவுத்துறை அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு இது போன்ற செயலில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- பல ஆயிரம் ஏக்கர்களில் வாழை விவசாயம் பிரதான தொழிலாக செய்யப்பட்டு வருகிறது.
- கடந்த 2 தினங்களாக பலத்த சூறைக்காற்று வீசியது.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள இரும்பறை, இலுப்பநத்தம் ஊராட்சி களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர்களில் வாழை விவசாயம் பிரதான தொழிலாக செய்யப்பட்டு வருகிறது.
குறிப்பாக நேந்திரன், கதளி, பூவன், ரஸ்தாலி, ரோபஸ்டா உள்ளிட்ட பல்வேறு வகை வாழை இனங்களை பயிரிட்டு விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சிறுமுகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சிட்டே பாளையம், இரும்பறை, அம்மன் புதூர், பால்காரன் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 தினங்களாக பலத்த சூறைக்காற்று வீசியது.
இதன் காரணமாக இரும்பறை, இலுப்பநத்தம் ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பயிரிடப் பட்டிருந்த சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்து நாசமடைந்துள்ளன.
சூறாவளிக்காற்றால் சேதமடைந்த வாழைகள் அறுவடைக்கு தயாராக இருந்தவையாகும். இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து மோதூர் பகுதியை சேர்ந்த விவசாயி கந்தசாமி கூறியதாவது:-
விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து 2 லட்ச ரூபாய் செலவு செய்து 2000 வாழைகளை பயிரிட்டு விவசாயம் செய்து வந்தேன். கடந்த 2தினங்களாக வீசிய சூறாவளி காற்றால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சேதம் அடைந்து விட்டது. இதனால் தாங்கள் பெருத்த நஷ்டத்தை சந்தித்துள்ளோம் எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து தங்களது வாழ்வாதாரத்தை காக்க உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- கரூரில் வாழைத்தார் விலை உயர்ந்துள்ளது
- வரத்து குறைவு காரணமாக விற்பனை
கரூர்,
நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் பூவன் உள்ளிட்ட பல்வேறு வகையான வாழைகளை விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர் செய்துள்ளனர். பின்னர் விளைந்தவுடன் பறித்து, உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். கடந்த வாரம் பூவன் வாழைத்தார் ஒன்று ரூ.350-க்கு விற்றது தற்போது ரூ.400-க்கும், ரஸ்தாளி ரூ.250-க்கு விற்றது ரூ. 300-க்கும், பச்சைநாடன் ரூ.200-க்கு விற்றது ரூ.250-க்கும், மொந்தன் வாழைத்தார் ரூ.400-க்கு விற்றது ரூ.500-க்கும் ஏலம் போனது. வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- வாழைத்தார்களின் விலை உயர்வடைந்துள்ள தால் வாழை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன்வாழைத்தார் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.350-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் ரூ.250-க்கும், பச்சைநாடன் ரூ.200-க்கும், கற்பூரவள்ளி ரூ.350-க்கும் ,மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.6-க்கும் ஏலம் போனது.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளான வெங்கரை, குச்சிபாளையம், பொத்தனூர், பரமத்தி வேலூர், அண்ணாநகர்,
பிலிகல்பாளையம், கு.அய்யம்பாளையம், ஆனங்கூர், வடகரை யாத்தூர் கொத்தமங்கலம், அனிச்சம்பாளையம், நன்செய்இடையாறு, பாலப்பட்டி மற்றும் மோக னூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பூவன், பச்ச நாடன், கற்பூரவல்லி, ரஸ்தாலி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வகை யான வாழைகளை விவசா யிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர்செய்துள்ள னர்.
வாழைத்தார் முதிர்ச்சி அடைந்தவுடன் கூலி ஆட்கள் மூலம் வாழைத்தார் களை வெட்டி உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்ற னர். மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு வாழைத்தார் களை வாங்கி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு ,கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்க ளுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பி வருகின்றனர்.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன்வாழைத்தார் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.350-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் ரூ.250-க்கும், பச்சைநாடன் ரூ.200-க்கும், கற்பூரவள்ளி ரூ.350-க்கும் ,மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.6-க்கும் ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.400-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் ரூ.300-க்கும், பச்சைநாடன் அதிகபட்சமாக ரூ.250-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.300-க்கும் , மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.4-க்கு ஏலம் போனது. வாழைத்தார்களின் விலை உயர்வடைந்துள்ள தால் வாழை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.