search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுமுகையில் 40 ஆயிரம் வாழைகள் முறிந்து சேதம்
    X

    சிறுமுகையில் 40 ஆயிரம் வாழைகள் முறிந்து சேதம்

    • பல ஆயிரம் ஏக்கர்களில் வாழை விவசாயம் பிரதான தொழிலாக செய்யப்பட்டு வருகிறது.
    • கடந்த 2 தினங்களாக பலத்த சூறைக்காற்று வீசியது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள இரும்பறை, இலுப்பநத்தம் ஊராட்சி களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர்களில் வாழை விவசாயம் பிரதான தொழிலாக செய்யப்பட்டு வருகிறது.

    குறிப்பாக நேந்திரன், கதளி, பூவன், ரஸ்தாலி, ரோபஸ்டா உள்ளிட்ட பல்வேறு வகை வாழை இனங்களை பயிரிட்டு விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சிறுமுகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சிட்டே பாளையம், இரும்பறை, அம்மன் புதூர், பால்காரன் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 தினங்களாக பலத்த சூறைக்காற்று வீசியது.

    இதன் காரணமாக இரும்பறை, இலுப்பநத்தம் ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பயிரிடப் பட்டிருந்த சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்து நாசமடைந்துள்ளன.

    சூறாவளிக்காற்றால் சேதமடைந்த வாழைகள் அறுவடைக்கு தயாராக இருந்தவையாகும். இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து மோதூர் பகுதியை சேர்ந்த விவசாயி கந்தசாமி கூறியதாவது:-

    விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து 2 லட்ச ரூபாய் செலவு செய்து 2000 வாழைகளை பயிரிட்டு விவசாயம் செய்து வந்தேன். கடந்த 2தினங்களாக வீசிய சூறாவளி காற்றால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சேதம் அடைந்து விட்டது. இதனால் தாங்கள் பெருத்த நஷ்டத்தை சந்தித்துள்ளோம் எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து தங்களது வாழ்வாதாரத்தை காக்க உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×