search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kalakadu"

    • சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள் கோவிலில் முருகப்பெருமான் பட்டின பிரவேச விழா கோலாகலத்துடன் நடந்தது.
    • முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை அம்மன்களுடன் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

    களக்காடு:

    களக்காட்டில் பிரசித்திப் பெற்ற சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள் கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவின் தொடர் நிகழ்ச்சியான முருகப்பெருமான் பட்டின பிரவேச விழா கோலாகலத்துடன் நடந்தது. இதையொட்டி முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து முருகப்பெரு மான் சிறப்பு அலங்கா ரத்தில் காட்சி அளித்தார்.

    அதன்பின் முருகப்பெரு மான், வள்ளி, தெய்வானை அம்மன்களுடன் சப்பரத்தில் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க, வான வேடிக்கையுடன் ரதவீதிகளில் வீதி உலா வந்தார். சப்பரம் பல வண்ண மின் விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ரதவீதிகளில் திரண்ட பக்தர்கள் முருகப்பெருமானுக்கு சுருள் வைத்து வழிபட்டனர்.

    • காட்டில் நம்பாடுவானை வழிமறித்த பிரம்ம ராட்ஷசன் அவரை உண்ண போவதாக கூறி உள்ளான்.
    • நம்பாடுவான் தான் பாடிய கைசிகம் என்ற பாட்டின் பலனை ராட்ஷசனுக்கு கொடுத்து அவருக்கு சாபவிமோசனம் அளித்தார்.

    களக்காடு:

    திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், கைசிக விருத்தாந்த தலமாகவும் திகழ்கிறது.

    பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் கார்த்திகை மாதம் நடைபெறும் கைசிக ஏகாதசி விழா முக்கியமானதாகும். முன் காலத்தில் கார்த்திகை மாத சுக்ல பட்ச ஏகாதசி அன்று இரவில் நம்பாடுவான் என்பவர் நம்பி பெருமாளை கவி பாடி தரிசனம் செய்ய சென்ற போது, காட்டில் அவரை வழிமறித்த பிரம்ம ராட்ஷசன் அவரை உண்ண போவதாக கூறி உள்ளான்.

    இதைக்கேட்ட நம்பாடுவான் நம்பியை நினைத்து விரதம் மேற்கொண்டுள்ளதால் நம்பியை தரிசனம் செய்த பின் உனக்கு இரையாக நான் தயார் என்று கூறினார். ராட்ஷசனும் நீண்ட நேரத்திற்கு பின் அவரை அனுப்பினான். நம்பாடுவான் நம்பியை தரிசனம் செய்த பின் காட்டிற்கு வந்து ராட்ஷசனிடம் இனி என்னை உணவாக்கிக் கொள் என்றார்.

    அப்போது ராட்ஷசன் தனக்கு பசியில்லை என்று கூறினான். நம்பாடுவான் தான் பாடிய கைசிகம் என்ற பாட்டின் பலனை ராட்ஷசனுக்கு கொடுத்து அவருக்கு சாபவிமோசனம் அளித்தார். அந்த நாள்தான் கைசிக ஏகாதசி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்தாண்டு விழா நேற்று கோலாகலத்துடன் நடந்தது. இதையொட்டி மாலை 5 மணிக்கு திருவாராதனம் நிகழ்ச்சிக்கு பிறகு இரவில் பெருமாள் வாகனத்தில் எழுந்தருளி கைசிக மண்டபத்திற்கு சென்றார்.

    அதனைதொடர்ந்து டி.வி.எஸ். நிறுவன குழுமங்கள் சார்பில், நாட்டிய கலைஞர்கள் கைசிக புராண நாடகத்தை நடத்தினர்.இரவு விடிய, விடிய நாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • ராஜகோபால் அதிகாலை 5 மணிக்கு மாணவியை பானாங்குளம் பஸ் நிறுத்தத்தில் இருந்து வள்ளியூர் செல்லும் பஸ்சில் ஏற்றி அனுப்பி உள்ளார்.
    • அதன்பின் மாணவி வீடு திரும்பவில்லை. இதனால் பதறிய ராஜகோபால் பல்வேறு இடங்களில் தேடியும் மாணவி பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள முதலைகுளம், நடுத் தெருவை சேர்ந்தவர் ராஜ கோபால். இவரது மகள் வள்ளியூர் அருகே உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 18-ந்தேதி கல்லூரியில் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள அழைப்ப தாக கூறியுள்ளார். இதை யடுத்து ராஜகோபால் அதி காலை 5 மணிக்கு மாணவியை பானாங்குளம் பஸ் நிறுத்தத்தில் இருந்து வள்ளியூர் செல்லும் பஸ்சில் ஏற்றி அனுப்பி உள்ளார்.

    அதன்பின் மாணவி வீடு திரும்பவில்லை. இதனால் பதறிய ராஜகோபால் பல்வேறு இடங்களில் தேடி யும் மாணவி பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இதனை தொடர்ந்து அவர் இது குறித்து மூன்ற டைப்பு போலீ சில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    • ஆதிநாராயணனுக்கும், அவரது மனைவி விமலாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர்.
    • சம்பவத்தன்று விமலா, அவரது மகன் கார்த்திக் ஆகியோர் அன்னசுந்தரத்திடம் சென்று வீட்டை எழுதித் தருமாறு கேட்டுள்ளனர்.

     களக்காடு:

    ஏர்வாடி அருகே உள்ள வேப்பன்குளம் மேலூர், அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நம்பி மனைவி அன்னசுந்தரம் (வயது 70). இவரது மகன் ஆதி நாராயணன். ஆதிநாராய ணனுக்கும், அவரது மனைவி விமலா விற்கும் (38) கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர்.

    சம்பவத்தன்று விமலா, அவரது மகன் கார்த்திக் (20) ஆகியோர் அன்ன சுந்தரத்திடம் சென்று வீட்டை எழுதித் தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு அன்னசுந்தரம் மறுத்ததாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த விமலா, கார்த்திக் ஆகியோர் சேர்ந்து அன்னசுந்தரத்தை கம்பால் தாக்கினர். இதனால் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி ஏர்வாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி விமலாவையும், அவரது மகன் கார்த்திக் கையும் தேடி வருகின்றனர்.

    • மாதவன் வீட்டிற்கு செல்லும் வழிப்பாதையை அதே தெருவை சேர்ந்த ஆனந்த் கல் போட்டு அடைத்ததாக கூறப்படுகிறது.
    • இதனை மாதவனின் மனைவி கனகராஜம் தட்டிக் கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    களக்காடு:

    திருக்குறுங்குடி அடுத்துள்ள சுந்தர பாண்டியபுரம், தெற்கு தெருவை சேர்ந்தவர் மாதவன். இவரது வீட்டிற்கு செல்லும் வழிப்பாதையை அதே தெருவை சேர்ந்த வேல்பாண்டி மகன் ஆனந்த் (22) கல் போட்டு அடைத்ததாக கூறப்படுகிறது.

    இதனை மாதவனின் மனைவி கனகராஜம் தட்டிக் கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஆனந்த், கனகராஜத்தை தாக்கினாராம். மேலும் அவரது கணவர் மாதவனை அவதூறாக பேசி கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஆனந்த் அதே பகுதியை சேர்ந்த மகாலிங்கம் மகன் மணிகண்டன், அருணாசலம் மகன் மனோகரன் ஆகியோர் சேர்ந்து தன்னை தாக்கியதாக திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்துள்ளார்.

    இதுகுறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் தெற்கு ரதவீதியை சேர்ந்தவர் செந்தில்வேல். இவர் வாழைத்தார் வியாபாரம் செய்து வருகிறார்.
    • இவரது மனைவி கவுரி. களக்காடு நகராட்சி கவுன்சிலராக உள்ளார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் தெற்கு ரதவீதியை சேர்ந்தவர் செந்தில்வேல்.

    கவுன்சிலர்

    இவர் வாழைத்தார் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி கவுரி. களக்காடு நகராட்சி கவுன்சிலராக உள்ளார்.

    இவர்களுக்கு சொந்த மான தோட்டம் சிதம்பரபுரம் ஊருக்கு அருகே உள்ள சத்திரங்காட்டில் உள்ளது, அதில் அவர்கள் வாழைகள் பயிர் செய்துள்ளனர்.

    சம்பவத்தன்று இரவில் மர்ம நபர்கள் தோட்டத்தில் வேலிகளை உடைத்து சேதப்படுத்தி விட்டு, தோட்டத்திற்குள் நுழைந்து அங்கு பயிர் செய்யப் பட்டிருந்த 13 வாழைகளை வெட்டி அழித்துள்ளனர்.

    மறுநாள் காலையில் தோட்டத்திற்கு சென்ற கவுரி வாழைகள் அழிக்கப் பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வாழைகளை வெட்டி அழித்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • களக்காடு பகுதியை பொருத்தவரை தென் மேற்கு பருவமழை சரிவர பெய்யவில்லை. இதனால் குளங்கள் நிரம்பவில்லை. பருவமழை கை கொடுக்கா ததால் விவசாய பணிகளை மேற்கொள்வதில் தடை ஏற்பட்டதால் விவசாயிகள் கவலையடைந்தனர்.
    • களக்காடு பகுதியில் கடந்த சில நாட்க ளாக வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. மழை தொடர்ந்து நீடிப்ப தால் ஆறு, கால்வாய்களில் தண்ணீர் வரத்து ஏற்பட்டு உள்ளது.

    களக்காடு:

    களக்காடு பகுதியை பொருத்தவரை தென் மேற்கு பருவமழை சரிவர பெய்யவில்லை. இதனால் குளங்கள் நிரம்பவில்லை. பருவமழை கை கொடுக்கா ததால் விவசாய பணிகளை மேற்கொள்வதில் தடை ஏற்பட்டதால் விவசாயிகள் கவலையடைந்தனர்.

    தண்ணீர் வரத்து

    இந்நிலையில் களக்காடு பகுதியில் கடந்த சில நாட்க ளாக வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. மழை தொடர்ந்து நீடிப்ப தால் ஆறு, கால்வாய்களில் தண்ணீர் வரத்து ஏற்பட்டு உள்ளது.

    இதற்கிடையே நேற்று இரவில் விடிய, விடிய கனமழை கொட்டியது. மேற்கு தொடர்ச்சி மலையி லும் மழை பெய்தது. நெல்லை மாவட்டத்தில் மூலைக்கரைப்பட்டியில் அதிகபட்சமாக 140 மில்லி மீட்டரும், அதற்கடுத்தபடி யாக களக்காட்டில் 65 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.

    மழையின் காரணமாக களக்காட்டில் ஓடும் நாங்கு நேரியான் கால்வாயில் திடீர் வெள்ளம் பாய்ந்தோடி யது. வெள்ளத்தால் களக்காடு-சிதம்பரபுரம் தரை பாலத்தில் அடைப்பு ஏற்பட்டு, பாலம் தண்ணீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டது.

    இதையடுத்து நீர்வளத் துறையினரும், நகராட்சி ஊழியர்களும் ஜே.சி.பி.எந்திரத்தின் மூலம், பாலத்தில் ஏற்பட்டிருந்த அடைப்புகளை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    இதுபோல கோவில்பத்து, கருவேலங்குளம் பாலங்களிலும் அடைப்புகள் அகற்றப்பட்டது. மேலும் பச்சையாறு, உப்பாற்றிலும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மலையடிவார கால்வாய்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

    சிதம்பரபுரத்தில் உள்ள கால்வாய்களில் தூர்வாரப் படாததால், கால்வாய்களில் தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டு, இலவடி அணை யின் வழியாக தண்ணீர் வீணாக வெளியேறுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

    கால்வாய்களில் வரும் தண்ணீர் குளங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீர்வளத்துறையினர் கால்வாய், ஆறுகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். களக்காடு தலையணை யில் தண்ணீர் வரத்து அதிகரிப்பால் கடந்த 7-ந் தேதி முதல் சுற்றுலா பயணி கள் குளிக்க தடை விதிக்கப் பட்டுள்ளது.

    தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்த வண்ணம் இருப்பதால் குளிக்க தடை நீடிக்கப் பட்டுள்ளது. அதே நேரத்தில் தலையணையை சுற்றி பார்க்க அனுமதி வழங்கப் படும் என்று வனத்துறை யினர் அறிவித்துள்ளனர்.

    • நெல்லை மாவட்ட உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நாங்குநேரி அருகே உள்ள அம்பலம் பஸ் நிறுத்தத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • இதில் ஆட்டோவில் 9 சாக்குகளில் 360 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது.

    களக்காடு:

    நெல்லை மாவட்ட உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நாங்குநேரி அருகே உள்ள அம்பலம் பஸ் நிறுத்தத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் ஆட்டோவில் 9 சாக்குகளில் 360 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து ரேஷன் அரிசி கடத்தி வந்த பொன்னாகுடி சமத்துவபுரத்தை சேர்ந்த சசிகுமார் (27), அவரது தம்பி ரஞ்சித்குமார் (26) ஆகியோரை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன் படுத்தப்பட்ட ஆட்டோவையும், ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.

    • குளத்தில் சிலர் ஜே.சி.பி எந்திரங்கள் மூலம் மண் அள்ளிக் கொண்டிருந்தனர்.
    • தப்பி ஓடியவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    களக்காடு:

    களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் கோவிலம்மாள்புரம் வடமநேரி குளத்தில் ரோந்து சென்றனர்.

    அப்போது குளத்தில் சிலர் ஜே.சி.பி எந்திரங்கள் மூலம் மண் அள்ளிக் கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓடினர். இதைப்பார்த்த போலீசார் தப்பி ஓடியவர்களை மடக்கி பிடித்தனர்.

    அவர்களிடம் விசாரித்ததில் அவர்கள் சிதம்பர புரத்தை சேர்ந்த பாலையா மகன் செல்வ குமார் (வயது 20), வீராங்குளத்தை சேர்ந்த சண்முக வேல் மகன் ஸ்ரீரெங்கமூர்த்தி (26), சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த விவேகநாதன் மகன் பாலதுளசிமணி (34), செங்கோட்டையை சேர்ந்த கிருஷ்ணன் மகன் மாரிசெல்வம் (50), நடுச்சாலைப்புதூரை சேர்ந்த கணேசன் மகன் அஜிஸ் (26) என்பதும், அவர்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டியும் மண் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து 5 பேரையும் கைது செய்த போலீசார் 2 ஜே.சி.பி எந்திரங்களையும், 2 டிராக்டர்களையும் பறிமுதல் செய்தனர்.

    • கோவையை சேர்ந்தவர் செந்தூர். இவருக்கு சொந்தமான தோட்டம் களக்காடு அருகே பத்மநேரியில் உள்ளது.
    • இந்த தோட்டத்தில் பத்மநேரி கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த கணபதிராமன் (வயது 33) மேற்பார்வையாளராக உள்ளார்.

    களக்காடு:

    கோவையை சேர்ந்தவர் செந்தூர். இவருக்கு சொந்தமான தோட்டம் களக்காடு அருகே பத்மநேரியில் உள்ளது. இந்த தோட்டத்தில் பத்மநேரி கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த கணபதிராமன் (வயது 33) மேற்பார்வையாளராக உள்ளார். சம்பவத்தன்று தோட்டக்குடியை சேர்ந்த சுடலைக்கண்ணு, பத்மநேரியை சேர்ந்த பிச்சையா, வானுமாமலை, பாவநாசம் என்ற இசக்கிமுத்து மற்றும் 5 பேர் உள்பட 9 பேர் சேர்ந்து செந்தூரிடம் தகராறு செய்ததாக தெரிகிறது.

    இதைப்பார்த்த கணபதிராமன் தட்டிக்கேட்டார். இதில் ஏற்பட்ட தகராறில் சுடலைக்கண்னு உள்பட 9 பேரும் சேர்ந்து, கணபதிராமனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இதுதொடர்பாக சுடலைக்கண்னு உள்பட 9 பேரை தேடி வருகின்றனர்.

    • விழாவையொட்டி வரதராஜபெருமாள், வெங்கடாஜலபதி, தேவியர்கள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.
    • திருவீதி உலா நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    களக்காடு:

    களக்காடு வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு கருட சேவை விழா நடந்தது. இதையொட்டி மதியம் வரதராஜபெருமாள், வெங்கடாஜலபதி, தேவியர்கள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இரவில் சிறப்பு அலங்கார தீபாராதனைகள் நடத்தப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து வரதராஜபெருமாள், வெங்கடாஜலபதி சுவாமிகள் தனித் தனி கருட வாகனங்களில் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க திருவீதி உலா வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழா மண்டகப்படிதாரரான களக்காடு போலீசார் செய்திருந்தனர்.

    • களக்காடு அருகே உள்ள ஜெ.ஜெ.நகர் தெற்கு தெருவை சேர்ந்தவர் அப்துல் வஹாப் மகன் அக்பர் அலி (வயது 19). சம்பவத்தன்று இவர் தனது வீட்டு முன் நின்று கொண்டிருந்தார்.
    • அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த செல்லத்துரை மகன் சுரேஷ் (22) அக்பர் அலியை அவதூறாக பேசினார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள ஜெ.ஜெ.நகர் தெற்கு தெருவை சேர்ந்தவர் அப்துல் வஹாப் மகன் அக்பர் அலி (வயது 19). சம்பவத்தன்று இவர் தனது வீட்டு முன் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த செல்லத்துரை மகன் சுரேஷ் (22) அக்பர் அலியை அவதூறாக பேசினார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சுரேஷ், அக்பர் அலியை கல்லால் தாக்கினார்.

    இதனால் காயமடைந்த அவர் களக்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சுரேசை தேடி வருகின்றனர்.

    ×