களக்காடு அருகே தந்தையை தாக்கிய மகனுக்கு வலைவீச்சு

களக்காடு அருகே உள்ள மேலகாடுவெட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி வள்ளிக்கண்ணு (வயது65).இவரது மகன் பூல்பாண்டி. டிரைவர்.வள்ளிக்கண்ணு பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த பூல்பாண்டி அவரை அவதூறாக பேசி தாக்கினார்.
களக்காடு அருகே தந்தையை தாக்கிய மகனுக்கு வலைவீச்சு
Published on

களக்காடு:

களக்காடு அருகே உள்ள மேலகாடுவெட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி வள்ளிக்கண்ணு (வயது65).இவரது மகன் பூல்பாண்டி. டிரைவராக உள்ளார்.

பூல்பாண்டிக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால் அவருக்கும், அவரது மனைவி செல்வ அரசிக்கும் தகராறு ஏற்பட்டது.

இதனால் செல்வ அரசி கணவரை விட்டு பிரிந்து தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். சம்பவத்தன்று வள்ளிக்கண்ணு கணேசன் என்பவருடன் பைக்கில் களக்காடு வந்து கொண்டிருந்தார். ஜெ.ஜெ.நகர் விலக்கு அருகே வந்த போது அங்கு பூல்பாண்டி நின்று கொண்டிருந்தார்.

இதைப்பார்த்த வள்ளிக்கண்ணு, பூல்பாண்டியிடம் சென்று வேலைக்கு செல்லாமல் இங்கு என்ன செய்கிறாய்? எனக் கேட்டுள்ளார். அதற்கு பூல்பாண்டி மது அருந்த பணம் தருமாறு கேட்டுள்ளார். வள்ளிக்கண்ணு பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த பூல்பாண்டி அவரை அவதூறாக பேசி தாக்கினார்.

மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி பூல்பாண்டியை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com