என் மலர்
நீங்கள் தேடியது "little girl"
- மணப்பெண்ணுக்கு உரிய திருமண வயது ஆகவில்லை.
- சிறுமிக்கு குழந்தைகள் திருமணம் குறித்த விழிப்புணர்வு கவுன்சிலிங் அளிக்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை அருகே சாலியமங்கலம் கீழ ரெயில்வே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், கரூர் மாவட்டம் சுக்காம்பட்டியை சேர்ந்த 22 வயது வாலிபருக்கும் தஞ்சையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இன்று காலை திருமண நடக்க இருந்தது.
மணப்பெண்ணுக்கு உரிய திருமண வயது ஆகவில்லை என்பதால் திருமணத்தை நிறுத்த கோரி மாவட்ட சமூக அலுவலகத்துக்கு புகார் சென்றது.
இதையடுத்து தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் படி மாவட்ட சமூக நல அலுவலகம் ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி விமலா மற்றும் குழுவினர் சம்பந்தப்பட்ட திருமண மண்டபத்திற்கு விரைந்து சென்றனர்.
மேலும் தஞ்சை அனைத்து மகளிர் போலீசாரும் பாதுகாப்பிற்கு சென்றனர்.
தொடர்ந்து சிறுமியிடம் குழந்தைகள் நல குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து திருமணத்தை தடுத்து நிறுத்தி சிறுமியை மீட்டு மாவட்ட குழந்தைகள் நல குழுவினரிடம் ஒப்படைத்தனர்.
அங்கு சிறுமிக்கு குழந்தைகள் திருமணம் குறித்த விழிப்புணர்வு கவுன்சிலிங் அளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- விருதுநகர் மாவட்டத்தில் சிறுமி-இளம்பெண் உள்பட 3 பேர் மாயமானார்கள்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை ரோடு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி தமிழ்செல்வி(28). கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் வீட்டில் இருந்த தமிழ்செல்வி திடீரென மாயமானார். எங்கு சென்றார் என தெரியவில்லை. பல இடங்க ளில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.
இதையடுத்து நாகராஜ் கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரியாபட்டி அருகே மந்திரியோடை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் பிளஸ்-2 முடித்து விட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இந்நிலையில் அந்த சிறுமி வீட்டில் இருந்து மாயமானார். பல இடங்களில் தேடிப்பார்த்தும், விசாரித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதை யடுத்து அவரது தாயார் ஆவியூர் போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வருகின்றனர்.
சாத்தூர் பாரதிநகரை சேர்ந்தவர் மேட்டுராஜா(43), பிளாஸ்டிக் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது மனைவி கிருஷ்ணவேணி. வியாபார நஷ்டம் காரணமாக மேட்டுராஜா பலரிடம் கடன் வாங்கி குடும்பத்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்ததால் மீண்டும் கடன் வாங்க முடிவு செய்தார்.
ஆனால் இதற்கு கிருஷ்ணவேணி சம்மதிக்கவில்லை. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் வெளியே சென்ற மேட்டுராஜா மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் காணமுடியா ததால், கிருஷ்ணவேணி சாத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நவீன்குமாரை கைது செய்த போலீசார், அவரை திருப்பூா் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனா்.
- 16 வயது சிறுமியை ஆசை வாா்த்தை கூறி, கடந்த 2 மாதங்களுக்கு முன் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.
ஊத்துக்குளி:
ஊத்துக்குளி பகுதியை சோ்ந்தவா் நவீன்குமாா் (வயது 22). இவா் 16 வயது சிறுமியை ஆசை வாா்த்தை கூறி, கடந்த 2 மாதங்களுக்கு முன் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.இது குறித்து சைல்டு லைனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னா் மாவட்ட சமூக நல அலுவலா் சிவகாமி, காங்கயம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை தொடா்ந்து நவீன்குமாரை கைது செய்த போலீசார், அவரை திருப்பூா் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனா்.
- மணமகனும் தாலியை பெற்றுக் கொண்டு மணமகள் கழுத்தில் கட்ட தயாரானார்.
- சைல்டு லைன் அதிகாரிகளுக்கு குறைந்த வயதான எனக்கு தனது பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைப்பதாக தகவல் தெரிவித்தார்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த பாண்டி கிராமத்தை சேர்ந்த 30 இளைஞர் ஒருவருக்கும் அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த அவரது உறவினர் மகள் 17 வயது சிறுமி ஒருவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்த நிலையில் பெரியார்களால் முடிவு செய்யப்பட்ட நாளான நேற்று பாண்டி கடை தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் திருமணம் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது.
அதன்படி காலை 6.30 மணிக்கு மணமேடைக்கு மணமக்கள் இருவரும் வந்திருந்தனர். புரோகிதர் மந்திரங்கள் ஓதி தாலியை மணமகனிடம் எடுத்துக் கொடுத்தார்.
மணமகனும் தாலியை பெற்றுக் கொண்டு மணமகள் கழுத்தில் கட்ட தயாரானார்.
அப்பொழுது மணப்பெண் தாலி கட்டுவதை தடுத்து நிறுத்தினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகன் அப்படியே திகைத்து நின்றார். இதனால் மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அப்பொழுது மணமகள் தான் வைத்திருந்த செல்போன் மூலம் சைல்டு லைன் அதிகாரிகளுக்கு குறைந்த வயதான எனக்கு தனது பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைப்பதாக தகவல் தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் சைல்டு லைன் அதிகாரிகள் முத்துப்பேட்டை மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதனைடுத்து அங்கு வந்த காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் வரலட்சுமி திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
அதன் பிறகு அங்கு வந்த சைல்டு லைன் அதிகாரிகள் சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்து இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- ராதாபுரம் தாலுகா வடக்கன்குளத்தை சேர்ந்த தொழிலாளியின் மகள் 17 வயது சிறுமி 12-ம் வகுப்பு வரை படித்துள்ளார்.
- கடந்த 10-ந்தேதி வீட்டில் இருந்த சிறுமி மீண்டும் மாயமானார்
களக்காடு:
ராதாபுரம் தாலுகா வடக்கன்குளத்தை சேர்ந்த தொழிலாளியின் மகள் 17 வயது சிறுமி 12-ம் வகுப்பு வரை படித்துள்ளார். இந்நிலையில் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன் மாயமானர். இதுபற்றி பணகுடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து தொழிலாளி தனது மகளை மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள மேல அரியகுளத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் ஒப்படைத்தனர்.
இதற்கிடையே கடந்த 10-ந்தேதி வீட்டில் இருந்த சிறுமி மீண்டும் மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர் பல்வேறு இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர் மூலைக்கரைப்பட்டி போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு போலீசார் செய்து விசாரணை நடத்தி மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.
- இரு வாரங்களுக்கு முன், திருமணம் செய்யலாம் என்று கூறி, சிறுமியை அழைத்து சென்று உறவினர் வீட்டில் தங்க வைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.
- புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட குணாலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் குணால் (வயது 22). இவர் அலங்கியத்தை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பழகி வந்தார்.இரு வாரங்களுக்கு முன், திருமணம் செய்யலாம் என்று கூறி, சிறுமியை அழைத்து சென்று உறவினர் வீட்டில் தங்க வைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் தாராபுரம் அனைத்து மகளிர் போலீசார் புகார் செய்தனர்.புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட குணாலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- மாணவியை தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
- பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியால் சிக்கினார்
கோவை:
கோவை அருகே உள்ள கோவில்பாளைத்தை சேர்ந்த 14 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 10-ந் தேதி மாணவி படிக்கும் பள்ளியில் பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சந்திரலேகா தலைமையில் பாலியல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அப்போது 8-ம் வகுப்பு மாணவி தான் உறவினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறினார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் மாணவியை தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் கணபதிபுதூரை சேர்ந்த உறவினர் பாலசுப்பி ரமணியம் (வயது 50) என்பவர் அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வருவார். அவர் பெற்றோர் இல்லாத நேரத்தில் மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார்.
இது குறித்து போலீசார் மாணவியின் தாய்க்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியத்தை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ெஜயிலில் அடைத்தனர்.
- தாய்க்கு உதவி செய்ய சென்ற மதுரை சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்
- போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மதுரை
மதுரை யாகப்பா நகரைச் சேர்ந்த ஒரு பெண், தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில், ஒரு புகார் மனு கொடுத்து உள்ளார். அதில் எனக்கு கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. இதற்காக காரைக்குடி, பள்ளத்தூரில் உள்ள உறவினர் ராஜபாண்டி என்பவரின் வீட்டில் தங்கி இருந்தேன். அப்போது என்னை பராமரிப்பதற்காக 14 வயது மகள் வந்திருந்தார்.
இந்த நிலையில் ராஜபாண்டி (வயது 40). இவர் பொய்யான வாக்குறுதிகளை கூறி, எனது மகளை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதன் காரணமாக என் மகள் இப்போது கர்ப்பமாக உள்ளார். எனவே போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதாதேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது சம்பவம் நடந்தது, காரைக்குடி பகுதி என்பதால் இந்த வழக்கை காரைக்குடிக்கு மாற்றுவது என்று போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
- போலீஸ் நிலையம் எதிரே உள்ள துணிக்கடைக்கு சென்றுள்ளனர்.
- உரிய ஆவணங்களை கொடுத்து பணத்தை பெற்று செல்லலாம்.
பல்லடம்:
பல்லடம் பச்சாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ்(வயது 42). இவரது மனைவி நித்தியலட்சுமி(38). இவர்களது மகள் தர்ஷினி(13). இவர் பல்லடத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில்7 ம் வகுப்பு படித்து வருகிறார்.இந்நிலையில் நேற்று மதியம் தனது தாய் நித்திய லட்சுமி மற்றும் உறவுக்கார பெண் பிரியா ஆகியோருடன் துணி எடுக்க வேண்டி பல்லடத்தில் போலீஸ் நிலையம் எதிரே உள்ள துணிக்கடைக்கு சென்றுள்ளனர்.
அப்போது ரோட்டில் கேட்பாரற்று கிடந்த ரூ.40,000 பணத்தை கண்ட சிறுமி தர்ஷினி அதனை எடுத்து தனது தாயிடம் கொடுத்துள்ளார். பின்னர் தாய், மகளும் துணிக்கடையின் எதிரே உள்ள பல்லடம் போலீஸ் நிலையத்திற்கு சென்று கண்டெடுத்த ரூ.40,000 ரொக்க பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து பள்ளி சிறுமியின் நேர்மையான செயலை கண்டு போலீசார் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் பாராட்டி வெகுமதி அளித்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், சாலையில் இருந்து ரூ.40 ஆயிரம் பணத்தை தவறவிட்டவர்கள் போலீஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு உரிய ஆவணங்களை கொடுத்து பணத்தை பெற்று செல்லலாம் என்று அறிவித்துள்ளனர்.