கல்லணை கால்வாயில் மிதந்து வந்த பெண்-சிறுமி உடல்கள்

பெண்ணின் இடுப்பில் துப்பட்டாவால் அந்த சிறுமி கட்டப்பட்டுள்ளது பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லணை கால்வாயில் மீட்கப்பட்ட பெண், சிறுமி உடல்கள்.
கல்லணை கால்வாயில் மீட்கப்பட்ட பெண், சிறுமி உடல்கள்.
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை அருகே உள்ள தெக்கூர் கிராமம் கல்லணை கால்வாயில் இன்று காலை 30 வயது மதிக்கதக்க பெண் மற்றும் சிறுமியின் சடலங்கள் மிதந்து வந்தன.

இதனை பார்த்த பொதுமக்கள் இரு உடல்களையும் மீட்டனர்.

உடனடியாக தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

பெண்ணின் இடுப்பில் துப்பட்டாவால் அந்த சிறுமி கட்டப்பட்டுள்ளது. இவர்கள் யார்? இருவரும் தாய், மகளா ? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? எப்படி இறந்தனர் போன்ற விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.

இதையடுத்து அவர்களது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த பெண், இடுப்பில் சிறுமியை கட்டிக்கொண்டு தற்கொலை செய்தாரா ? அல்லது யாரேனும் கொலை செய்து வீசினரா ? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com