search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "laborer"

    • சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டினம் அருகே உள்ள குள்ளம்பட்டி பிரிவு சாலை பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று முன்தினம் துண்டிக்கப்பட்ட நிலையில் ரத்தம் சொட்ட, சொட்ட ஒரு ஆண் தலை தனியாக கிடந்தது
    • கொலை செய்யப்பட்டவர் வாழப்பாடியை அடுத்த நடுப்பட்டிைய சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளி குமார்( 43) என்பதும், அவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள், ஒரு மகன் உள்ளதும் தெரிய வந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டினம் அருகே உள்ள குள்ளம்பட்டி பிரிவு சாலை பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று முன்தினம் துண்டிக்கப்பட்ட நிலையில் ரத்தம் சொட்ட, சொட்ட ஒரு ஆண் தலை தனியாக கிடந்தது. இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து காரிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் தலையை கைப்பற்றியதுடன் உடலையும், கொலையாளியையும் தேடினர். தொடர்ந்து தலை வீசப்பட்ட பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார் குள்ளம்பட்டி பள்ளக்காட்டை சேர்ந்த பிரபல ரவுடியான திருமலை (24) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    கொலை செய்ததை ஒப்புக்கொண்ட அவர் உடலை அங்குள்ள நாட்டாமங்கலம் ஏரிக்கரையில் வீசியதாக தெரிவித்தார். அதன்படி அங்கு சென்ற போலீசார் அவரது உடலை மீட்டனர். கொலை செய்யப்பட்டவர் வாழப்பாடியை அடுத்த நடுப்பட்டிைய சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளி குமார்( 43) என்பதும், அவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள், ஒரு மகன் உள்ளதும் தெரிய வந்தது.

    திருமலை கொடுத்த தகவலின்பேரில் அவரது பைக் மற்றும் கொலை செய்ய பயன்படுத்திய கத்தியையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் திருமலை கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது - பிரபல ரவுடியான திருமலை நேற்று முன்தினம் பைக்கில் வாழப்பாடி முத்தம்பட்டி சென்றார். அங்கு விவசாய தோட்ட பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்த முத்தம் பட்டியை சேர்ந்த மாணிக்கம் மனைவி ஜோதி 45 என்பவரை மிரட்டி ஒன்றரை பவுன் நகையை பறித்தார்.

    அங்கிருந்து நடுப்பட்டி வழியாக வந்த போது சாலையில் நடந்து வந்த குமார் மீது மோதுவது போல சென்று தகராறு செய்தார். பின்னர் இரு வரும் சமரசம் ஆகிய நிலையில் தன்னுடன் வந்தால் மது வாங்கி தருவதாக கூறி குமாரை தனது பைக்கில் ஏற்றிக் கொண்டு நீர்முள்ளிக் குட்டை சிவசக்தி நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது பாட்டில் வாங்கினர்.

    பின்னர் இருவரும் அக்ரஹாரம் நாட்டாமங்கலம் ஏரிக்கரைக்கு வந்து மது அருந்தினர். அப்போது 2 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரம் அடைந்த திருமலை, குமாரை தலையில் கல்லால் தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர் வீட்டிற்கு சென்று கத்தியை எடுத்து வந்து தலையை அறுத்து குள்ளம்பட்டி பிரிவு சாலையில் வீசி விட்டு சென்றதும், அங்குள்ள சி.சி.டி.சி. காமிரா பதிவால போலீசாரிடம் சிக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்துஅவரை கோர்ட்டில் ஆஜர் படுத்திய போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். கொலை செய்யப்பட்ட குமாரின் உடல் இன்று பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதனால் ஆஸ்பத்திரியில் உறவினர்கள் திரண்டு உள்ளதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    ைகதான பிரபல ரவுடி ஏற்கனவே 2 கொலைகள் செய்துள்ள நிலையில் தற்போது சிறிய பிரச்சினையில் ஒருவரரை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதால் அந்த பகுதியில் பெரும் பீதி நிலவி வருகிறது. மேலும் அந்த பகுதி மக்கள் அச்சத்துடனே நடமாடும்நிலை உள்ளது.

    • பலத்த காயமடைந்த சாக்கப்பாவை பொது மக்கள் மற்றும் வனத்துறையினர் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    • சான மாவு வனப்பகுதியில் 5 காட்டு யானைகளும் சுற்றித் திரிவதால் பொது மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள கெலமங்கலம் அடுத்த விருப்பாச்சி நகரை சேர்ந்தவர் சாக்கப்பா (வயது45).

    இவரது மனைவி திம்மக்கா. கூலி வேலை செய்து வரும் சாக்கப்பாவுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். சாக்கப்பா இன்று விருப்பாச்சி நகரிலிருந்து சினிகிரிப்பள்ளி கிராமத்திற்கு கூலி வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றை காட்டு யானை சாக்கப்பாவை தாக்கி உள்ளது.

    இதில் அவருக்கு வலது காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பி உள்ளார்.

    பலத்த காயமடைந்த சாக்கப்பாவை பொது மக்கள் மற்றும் வனத்துறையினர் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இது குறித்து ஓசூர் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சினிகிரிப் பள்ளி பகுதியில் ஒற்றை காட்டு யானையும் சான மாவு வனப்பகுதியில் 5 காட்டு யானைகளும் சுற்றித் திரிவதால் பொது மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆசூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்
    • சென்னை மடிப்பாக்கத்தில் தங்கி கட்டிட பணி செய்தனர்

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி அடுத்த ஆசூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர் (வயது 34). இவரது உறவினர் சுமதி (32). இருவரும் சென்னை மடிப்பாக்கத்தில் தங்கி கட்டிட பணி செய்து வருகின்றனர்.

    தீபாவளி பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்தனர். நேற்று அதிகாலை 2 மணியளவில் விக்கிரவாண்டி தனியார் கல்லுாரி அருகே வந்த போது, மற்றொரு மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த மர்ம ஆசாமி சுமதி கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் செயினை அறுத்துக் கொண்டு தப்பிவிட்டார். இது பற்றி விக்கிரவாண்டி போலீசில் சுமதி கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் காத்தமுத்து மற்றும் போலீசார் வழக்கு பதிந்து முகமூடி கொள்ளையனை தேடி வருகின்றனர்.

    • ஒரே ஒரு மின்விளக்கு, ஒரு மின் விசிறி, டி.வி. ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்தி வரும் பழனியின் வீட்டு மின் கட்டணமாக ரூ.26,850 வந்திருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது.
    • மின் கட்டணத்தை உடனடியாக செலுத்த வேண்டும் என்றும் இல்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் மின்வாரிய ஊழியர்கள் பழனியிடம் தெரிவித்துள்ளனர்.

    காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள வையாவூர் கிராமத்தில் அரசு தொகுப்பு வீட்டில் வசித்து வருபவர் பழனி. விவசாய கூலி தொழிலாளியான இவர் தனது தாய், மனைவி, 2 மகள்களுடன் வசித்து வருகிறார்.

    ஒரே ஒரு மின்விளக்கு, ஒரு மின் விசிறி, டி.வி. ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்தி வரும் பழனியின் வீட்டு மின் கட்டணமாக ரூ.26,850 வந்திருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது.

    இந்த மின் கட்டணத்தை உடனடியாக செலுத்த வேண்டும் என்றும் இல்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் மின்வாரிய ஊழியர்கள் பழனியிடம் தெரிவித்துள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பழனி காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வியை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    எங்கள் வீட்டில் குறைந்த அளவிலேயே மின்சாரத்தை பயன்படுத்தி வருகிறோம். இருப்பினும் மின் கட்டணம் அதிகமாக வந்து கொண்டே இருக்கிறது. ஏற்கனவே ரூ.5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை மின்கட்டணம் வந்து உள்ளது.

    அப்போது முறையிட்டும் மின்வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து மின் மீட்டரை மாற்றித் தரக்கோரி முறையிட்டேன். ஆனால் எந்த பலனும் இல்லை. இந்த நிலையில்தான் எப்போதும் இல்லாத வகையில் மிகவும் அதிகமாக ரூ.26,850 மின் கட்டணம் வந்துள்ளது.

    இவ்வளவு மின் கட்ட ணத்தை என்னால் செலுத்த இயலாது. அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் எனது மகள்கள் படிக்க முடியாமல் தவிக்கும் நிலையும் ஏற்படுகிறது.

    எனவே அதிக அளவிலான மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த விவகாரம் தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது கூலி தொழிலாளி பழனியின் வீட்டுக்கு நேரில் சென்று விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

    • நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சி அய்யன் கோவில் தெருவை சேர்ந்த ராமையா மகன் வானுமாமலை என்ற கட்ட வானுமாமலை (வயது30). கூலி தொழிலாளி.
    • சம்பவத்தன்று இரவில் வானுமாமலை தனது வீட்டு முன்புள்ள திண்ணையில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் அவரது உடலில் தீ வைத்து விட்டு தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சி அய்யன் கோவில் தெருவை சேர்ந்த ராமையா மகன் வானுமாமலை என்ற கட்ட வானுமாமலை (வயது30). கூலி தொழிலாளி யான இவர் மாடுகள் வளர்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவில் வானுமாமலை தனது வீட்டு முன்புள்ள திண்ணையில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் அவரது உடலில் தீ வைத்து விட்டு தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.

    சிறிது நேரத்தில் உடலில் வெப்பம் தாங்காமல் விழித்த வானுமாமலை உடலில் தீ எரிவதை கண்டு சத்தம் போ ட்டார். உடனடியாக அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சை க்காக நாங்குநேரி அரசு மருத்து வமனையில் அனுமதித்தனர்.

    அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுபற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தொழிலாளி மீது தீ வைத்து அவரை உயிரோடு எரித்து கொலை செய்ய முயற்சி செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • வெளியூருக்கு அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.
    • 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.

    திருப்பூர்

    திருப்பூா், செல்லம் நகரை சோ்ந்தவா் ரவி (வயது 48). பின்னலாடை நிறுவன தொழிலாளியான இவா், அதே பகுதியைச் சோ்ந்த 8 ம் வகுப்பு படிக்கும் மாணவியை கடந்த 2022 அக்டோபா் 25 ந்தேதி வெளியூருக்கு அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

    இது குறித்து தெற்கு மகளிா் காவல் நிலையத்தில் சிறுமி தாயாா் புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீசாா் போகசோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து ரவியை கைது செய்து சிறையில் அடைத்தனா். இது தொடா்பான வழக்கு திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    இந்த வழக்கின் மீதான விசாரணை நிறைவடைந்து நீதிபதி பாலு தீா்ப்பளித்தாா். இதில் ரவிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.

    இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜமீலா பானு ஆஜரானாா்.

    • 2 நாட்களாக சிறை வைத்து கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார்
    • போலீசார் சிறுமியை மீட்டு கிருஷ்ணனை கைது செய்தனர்

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள அங்களக் குறிச்சியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆழியாரை சேர்ந்த கூலித் தொழிலாளி கிருஷ்ணன் (வயது 22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர் அடிக்கடி மாணவியுடன் செல்போன் மூலமாக பேசி வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த சிறுமி நீண்ட நேரமாக செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். இதனை அவரது தந்தை கண்டித்தார். பின்னர் வீட்டிற்கு வெளியே இருந்த சிறுமியை கிருஷ்ணன் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார். சிறுமியை அவர் மோட்டார் சைக்கிளில் செல்லாம்பா ளையம் பிரிவுக்கு அழைத்து சென்றார்.

    பின்னர் மோட்டார் சைக்கிளை அங்கே நிறுத்தி விட்டு சிறுமியுடன் திண்டுக் கல்லில் உள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். ஆனால் அவர் அடைக்கலம் கொடுக்க மறுத்து விட்டார்.

    இதனைடுத்து கிருஷ் ணன் சிறுமியுடன் ஆனை மலை எட்டித்துறை யில் உள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து அவர் சிறுமியை 2 நாட்களாக சிறை வைத்து கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார்.

    சிறுமி மாயமானது குறித்து அவரது பெற்றோர் ஆழியாறு போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமி கிருஷ்ணனுடன் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் சிறுமியை மீட்டனர்.

    அவரை கைது செய்த கிருஷ்ணனை கைது செய்தனர். அவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஏலக்காய் தோட்டத்தில் இருந்த வீட்டில் தங்கி இருந்தார்.
    • படுக்கை அறையில் தூங்கி கொண்டிருந்தபோது அவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் இடுக்கியைச் சேர்ந்தவர் சன்னி தாமஸ். இவர் அங்குள்ள ஏலக்காய் தோட்டத்தில் இருந்த வீட்டில் தங்கி இருந்தார். இந்நிலையில் அவர் வீட்டின் படுக்கை அறையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டு பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். படுக்கை அறையில் தூங்கி கொண்டிருந்தபோது அவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

    இது தொடர்பாக 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தூத்துக்குடி- திருச்செந்தூர் மெயின்ரோடு பகுதியில் உள்ள கல்லூரி அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு மதுபோதையில் வந்த மர்ம நபர்கள் கிங்ஸ்வின்னிடம் தகராறு செய்து அவதூறாக பேசி அவரை அரிவாளால் தாக்கினர்.
    • உடனே அவரை வெட்டிய 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கால்டுவெல் காலனி பகுதியை சேர்ந்தவர் கிங்ஸ்வின். (வயது 30). தொழிலாளி.

    மர்ம நபர்கள்

    இவர் தூத்துக்குடி- திருச்செந்தூர் மெயின்ரோடு பகுதியில் உள்ள கல்லூரி அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு மதுபோதையில் வந்த மர்ம நபர்கள் கிங்ஸ்வின்னிடம் தகராறு செய்து அவதூறாக பேசி அவரை அரிவாளால் தாக்கினர். இதில் அவருக்கு கையில் வெட்டுபட்டு வலியால் அலறினார். உடனே அவரை வெட்டிய 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    வழக்குப்பதிவு

    இது குறித்து கிங்ஸ்வின் அளித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கங்கைநாதபாண்டியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்ட னர்.

    கொலை மிரட்டல்

    இதில் தூத்துக்குடி அழகேசபுரம் சோலையப்பன் என்ற அபினாஷ் (19) மற்றும் தூத்துக்குடி சத்யாநகரை சேர்ந்த சூரியபிரகாஷ் (20) ஆகிய இருவரும் கிங்ஸ்வின்னிடம் தகராறு செய்து அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 15 ஆண்டுகளாக வீட்டில் மின் இணைப்புக்காக கூலித் தொழிலாளி போராடுகிறார்
    • 15 ஆண்டுகளுக்கு முன்பு சகோதரர் ஜெயக்குமாருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக ராமானுஜம் வீட்டில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
    ஆலங்குடி,


    புதுக்கோட்ட மாவட்டம் ஆலங்குடி தேரோடும் கீழவீதியை சேர்ந்தவர் ராமானு ஜம் (வயது 44) கூலித் தொழிலாளி. இவருக்கு உமா ராணி (35) என்ற மனைவி , கலையரசன் (13) தீனதயாளன் (12) என்ற 2 மகன்கள் உள்ளனர். மகன்கள் அரசு பள்ளியில் 8 மற்றும் 7-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இதில் தீனதயாளனுக்கு மூளைக்கு செல்லும் நரம்பில ரத்தக் கசிவு ஏற்பட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சில லட்சங்களை செலவழித்து விட்டு இப்போது பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    மாதந்தோறும் மகனின் சிகிச்சைக்கு மட்டும் ரூ. 6 ஆயிரம் செலவாகிறது. கூலித் தொழிலில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் பெரும் மருத்துவமனை செலவுக்கு சென்று விடுகிறது. இதற்கிடையே 15 ஆண்டுகளுக்கு முன்பு சகோதரர் ஜெயக்குமாருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக ராமானுஜம் வீட்டில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பின்னர் மின் இணைப்பு கோரி மின்வாரிய அலுவ லகத்தை ராமானுஜம் நாடி யுள்ளார். தாசில்தாரிடம் தடையின்மை சான்று பெற்று விண்ணப்பிக்குமாறு மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஆனால் தாலுகா அலுவலகத்தில் மனு செய்த ராமானுஜத்துக்கு விடிவு பிறக்கவில்லை. ராமானுஜம் குடியிருக்கும் பகுதி குளத்துவாரி புறம்போக்கு என்பதால் புதிய மின் இணைப்பு வழங்க அதிகாரிகள் மறுத்து வருவதாக தெரிகிறது. இதற்கிடையே ராமானுஜம் கடந்த மார்ச் மாதம் அந்த பகுதியில் உள்ள சிவன் கோவில் கும்பாபிஷேக பணிகளை பார்வையிட வந்த அமைச்சர் மெய்யநாதனிடம் தனது கஷ்டநிலையை விவரித்துள்ளார். ஆனால் இதுவரை மின் இணைப்பு கிடைக்கவில்லை.

    இது குறித்து ராமானுஜம் கூறுகையில் :- நான் குடியிருக்கும் பகுதியில் 25க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. என் வீடு தவிர்த்து அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. என் அண்ணனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக புதிய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்து நடையாய் நடக்கின்றேன். ஆனால் இந்த ஏழையை யாரும் கண்டு கொள்ளவில்லை. இரவு நேரங்களில் உடல்நிலை சரியில்லாத மகனை வைத்துக் கொண்டு தூக்கமின்றி தவிக்கிறோம்.

    என்னை மட்டும் புறக்கணிப்பது ஏன் என்று தெரிய வில்லை. கடந்த வாரம் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சென்று கலெக்டரிடமும் மனு அளித்து விட்டு வந்தேன். எங்கள் வாழ்வில் எப்போது இருள் நீங்கி வெளிச்சம் பிறக்கும் என்று தெரியவில்லை. இருப்பினும் நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்றார்.

    • 90 அடி ஆழம் உள்ள கிணற்றில் பழைய கான்கிரீட்டை சீரமைக்கும் பணியை சக தொழிலாளர்களுடன் ஈடுபட்டிருந்தார்.
    • மண்ணுக்குள் மகாராஜன் சிக்கிக் கொண்டார். இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    குமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியை சேர்ந்தவர் மகா ராஜன்(வயது55). இவர் கடந்த 20 ஆண்டுகளாக கேரள மாநிலம் வெங்கானூர் நெல்லியறதலை பகுதியில் வசித்து கூலி வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 5 நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்சத்தில் முக்கோல பிச்சோட்டு கோணம் பகுதியை சேர்ந்த சுகுமாரன் என்பவர் வீட்டில் 90 அடி ஆழம் உள்ள கிணற்றில் பழைய கான்கிரீட்டை சீரமைக்கும் பணியை சக தொழிலாளர்களுடன் ஈடுபட்டிருந்தார்.

    இடிவு மண்ணை அகற்றி விட்டு, பழைய குழாயை வெளியே எடுப்பதற்காக கிணற்றின் அடிப்பகுதியில் நேற்று முன்தினம் மகாராஜன் இறங்கினார். அவருக்கு சற்று மேலே இருந்த இடத்தில் மணிகண்டன் என்பவர் நின்று கொண்டிருந்தார். அப்போது கிணற்றின் இடைப்பகுதியில் மண் இளக்கமும், தண்ணீர் சலசலப்பும் இருந்ததை கிணற்றின் மேலே நின்றவர்கள் உணர்ந்தனர்.

    இதனால் கிணற்றுக்குள் இருந்த இருவரையும் மேலே வரும்படி கூறினர். இதையடுத்து மகாராஜன் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் கயிறை பிடித்து கிணற்றின் மேல் பகுதிக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது கிணற்றுக்குள் மண்சரிவு ஏற்பட்டது.

    மண்ணுக்குள் மகாராஜன் சிக்கிக் கொண்டார். இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விழிஞ்சம், சாக்கை தீயணைப்பு நிலைய வீரர்களும், போலீசாரும் விரைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது மீண்டும் மண் சரிவு செய்யப்பட்டது.இதனால் மீட்பு குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். மண் சரிவு ஏற்பட்ட கிணற்றில் கிணறு தரை மட்டத்தில் இருந்து 45 அடி ஆழம் வரை கிணற்றின் உள் விட்டம் 4 அடி ஆகும். அதற்கு கீழ் 45 அடி ஆழம் வரை உள் வட்டம் 3 அடியாகும். கிணற்றின் அடிப்பகுதியில் 20 அடி உயரத்தில் மண் சரிந்து விழுந்துள்ளது.

    அதில் மகாராஜன் சிக்கி இருக்கலாம் என கருதப்பட்டு மீட்பு பணி துரிதப்பட்டுத்தப்பட்டது. நேற்று 2-வது நாளாக மீட்பு பணி தொடர்ந்தது. மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் ஈடுபட்டனர். கிணற்றுக்குள் உள்ள தண்ணீர் மற்றும் சகதியை அகற்றப்பட்டு தொழிலாளி மகாராஜனை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அவரை மீட்கும் பணி இன்று 3-வது நாளாக நீடித்தது. அவர் மண்சரிவில் சிக்கி இன்று காலையுடன் 48 மணி நேரத்திற்கு மேல் ஆனதால் அவரது கதி என்ன ஆனது? என்று அனைவர் மத்தியிலும் கவலை ஏற்பட்டது. இருந்த போதிலும் மீட்பு குழுவினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது மகாராஜன் கிணற்றுக்குள் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடலை மீட்பு படையினர் கயிறு மூலம் கிணற்றுக்கு மேலே கொண்டு வந்தனர். 50 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மகாராஜன் பிணமாக மீட்கப்பட்டது அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மட்டுமின்றி மீட்பு குழுவினரையும் சோகத்தில் ஆழ்த்தியது. 

    • முரளிபாபு கூலித் தொழிலாளி திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
    • மனமுடைந்த முரளிபாபு வீட்டிலிருந்த மின் விசிறியில் தூக்கு மாட்டிக்கொண்டு இறந்து போனார்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை அடுத்த பாலி கிராமத்தை சேர்ந்தவர் முரளிபாபு (வயது 38). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். முரளிபாபுவிற்கும் அவரது மனைவி அஷ்டலட்சுமிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் அஷ்டலட்சுமி கோபித்துக் கொண்டு அவரது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    இதனால் மனமுடைந்த முரளிபாபு குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். வீட்டிலிருந்த மின் விசிறியில் தூக்கு மாட்டிக்கொண்டு இறந்து போனார். இது குறித்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். முரளிபாபுவின் உடலை கைப்பற்றி உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×