அம்மன் கோவில் தேர் சக்கரத்தில் சிக்கிய தொழிலாளி சாவு

சேந்தமங்கலம் அருகே பழையபாளையம் கிரா மத்தில் கடந்த சில நாட்க ளுக்கு முன்பு பகவதி அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. சேலம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிவகுமா ருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
அம்மன் கோவில் தேர் சக்கரத்தில் சிக்கிய தொழிலாளி சாவு
Published on

நாமக்கல்:

சேந்தமங்கலம் அருகே பழையபாளையம் கிரா மத்தில் கடந்த சில நாட்க ளுக்கு முன்பு பகவதி அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சிவ குமார் (வயது 46) என்பவரும் தேரோட்டத்தில் கலந்து கொண்டு தேரை இழுத்தார். அப்போது அவர் எதிர்பாரா தவிதமாக தேரில் சிக்கி பலத்த காயம் அடைந்தார். இதை கண்டு அதிர்ச்சிய டைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக சிவகுமாரை மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் மேல்சிகிச்சைக் காக சேலம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிவகுமா ருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாப மாக இறந்தார். இது குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பலியான சிவகுமாருக்கு சுதா (42) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com