என் மலர்

  நீங்கள் தேடியது "suspicious death"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தபோது ஒருவர் வீட்டினுள் படுத்து உறங்குவது போல போலீசாருக்கு தெரியவந்தது.
  • சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்கு பதிந்து கோட்டக்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  விழுப்புரம்:

  வானூர் அருகே சின்ன கோட்டக்குப்பம் கிராமத்தில் உள்ள ஒத்தவாடை வீதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து நேற்று மாலை நேரத்தில் துர்நாற்றம் அதாவது பிணவாடை வீசியது. இதுகுறித்து அந்த வீதியில் வசிக்கும் பொதுமக்கள் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தபோது ஒருவர் வீட்டினுள் படுத்து உறங்குவது போல போலீசாருக்கு தெரியவந்தது. விசாரணையில் அவரது ரகுபதி (வயது 50) என்றும், இவருக்கு திருமணம் ஆகவில்லை என தெரியவந்தது. ஆகவே இவர் அவரது அக்கா வீட்டில் வசித்து வந்தார்.

  இவருக்கு ரத்த கொதிப்பு, சக்கரை போன்ற நோய்கள் உள்ளதாகவும், இதற்காக இவர் மருந்து உட்கொண்டு வருவதாகவும், இவரை கவனித்து பராமரிக்க யாரும் இல்லை என்றும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அந்த வீதியில் வசிக்கும் பொதுமக்களின் உதவியுடன் வீட்டின் கதவை உடைந்து போலீசார் வீட்டிற்குள் சென்றனர். அங்கே ரகுபதி இறந்து கிடந்தார். இதையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உடல் நிலை சரியின்றி இறந்தாரா அல்லது மருந்து ஏதாவது குடித்து விட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் கொலை செய்திருப்பார்களா என்ற பல்வேறு கோணங்களில் சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்கு பதிந்து கோட்டக்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வேலவன் சாத்தான்குளத்தில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை பார்த்து வந்தார்.
  • பஸ் நிலைய கழிவறையில் வேலவன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

  நாசரேத்:

  தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் ஜெயபாண்டியன் தெருவை சேர்ந்தவர் வேலவன் (வயது62). இவர் சாத்தான்குளத்தில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை பார்த்து வந்தார்.

  இன்று காலை அவர் வேலைக்கு செல்வதற்காக நாசரேத் பஸ் நிலையத்திற்கு சென்றார். இந்நிலையில் பஸ் நிலையத்தில் உள்ள கழிவறையில் வேலவன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதைப்பார்த்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

  சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் பட்டாணி, சப்-இன்ஸ்பெக்டர் ராய்ஸ்டன் மற்றும் போலீசார் சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வேலவன் எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ×