நாசரேத் பஸ் நிலைய கழிவறையில் தொழிலாளி மர்மச்சாவு

வேலவன் சாத்தான்குளத்தில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை பார்த்து வந்தார். பஸ் நிலைய கழிவறையில் வேலவன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
நாசரேத் பஸ் நிலைய கழிவறையில்  தொழிலாளி மர்மச்சாவு
Published on

நாசரேத்:

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் ஜெயபாண்டியன் தெருவை சேர்ந்தவர் வேலவன் (வயது62). இவர் சாத்தான்குளத்தில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை பார்த்து வந்தார்.

இன்று காலை அவர் வேலைக்கு செல்வதற்காக நாசரேத் பஸ் நிலையத்திற்கு சென்றார். இந்நிலையில் பஸ் நிலையத்தில் உள்ள கழிவறையில் வேலவன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதைப்பார்த்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் பட்டாணி, சப்-இன்ஸ்பெக்டர் ராய்ஸ்டன் மற்றும் போலீசார் சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வேலவன் எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com