தூத்துக்குடியில் உடலில் காயங்களுடன் தொழிலாளி மர்மச்சாவு

மணிகண்டன் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.பிரேத பரிசோதனைக்காக மணிகண்டன் உடலை போலீசார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தூத்துக்குடியில் உடலில் காயங்களுடன் தொழிலாளி மர்மச்சாவு
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது42). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று வழக்கம் போல் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் அவரை தேடி பார்த்தபோது கதிர்வேல்நகர் பகுதியில் அவர் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.

தகவல் அறிந்த சிப்காட் போலீசார் அங்கு விரைந்து சென்று மர்மமான முறையில் இறந்துகிடந்த மணிகண்டன் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் எவ்வாறு இறந்தார் என்பது குறித்து இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com