தூத்துக்குடியில் தொழிலாளியை கல்லால் தாக்கி கொல்ல முயன்ற நண்பர்கள்

கருப்பசாமி நேற்று மாலை தனது நண்பர்களுடன் திரேஸ்புரம் பகுதியில் மது குடித்துக்கொண்டிருந்தார்.அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் தொழிலாளியை கல்லால் தாக்கி கொல்ல முயன்ற நண்பர்கள்
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி திரேஸ்புரம் அருகே உள்ள மேட்டுப்பட்டி உமையம்மாள்புரத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 25). கூலித்தொழிலாளி.

இவர் நேற்று மாலை தனது நண்பர்களுடன் திரேஸ்புரம் பகுதியில் மது குடித்துக்கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த நண்பர்கள் கருப்பசாமியை அடித்து தாக்கினர். பின்னர் அங்கிருந்த கற்களை எடுத்து அவர் மீது சராமரியாக வீசி தாக்கினர்

பின்னர் அங்கிருந்து அவர்கள் தப்பி சென்று விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த கருப்பசாமியை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பான புகாரின் பேரில் வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com