search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வாழைத்தார் விலை உயர்வு
    X

    தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வாழைத்தார் விலை உயர்வு

    • இந்நிலையில் கடந்த வாரத்தை விட, இந்த வாரம் வாழைத்தார்களின் விலை அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தள்ளனர்.
    • நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 1500 வாழைத்தார்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார் தாலுகா பாண்டமங்கலம், பொத்த னுார், நன்செய்இடையாறு, குப்பிச்சிபாளையம், மோ கனுார், பரமத்திவேலுார், அண்ணாநகர், பிலிக்கல்பா ளையம், ஆனங்கூர், ஜேடர்பாளையம், கொத்த மங்கலம், சிறுநல்லி கோவில், அய்யம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் விவசாயிகள் பூவன், பச்சநாடன், கற்பூரவல்லி, ரஸ்தாளி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வகையான வாழைகளை பயிரிட்டுள்ளனர்.

    வாழைத்தார்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்திவேலுாரில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

    இங்கு ஏலம் எடுக்கப்ப டும் வாழைத்தார்களை, தமிழ்நாட்டில் உள்ள நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை, நீலகிரி, கரூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த வாரத்தை விட, இந்த வாரம் வாழைத்தார்களின் விலை அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தள்ளனர். நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 1500 வாழைத்தார்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.500-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் ரூ.350-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் ரூ.300-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.400-க்கும், மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.5 க்கும் விற்பனையானது.

    வரத்து குறைவு மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வீடுகளில் கனி வைத்து வழிபடுவர், கோவில் விசேஷங்கள் தொடர்ந்து வருவதால் வாழைத்தார் விலை உயர்ந்துள்ளதாக வியா பாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×