search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொள்ளாச்சி மார்க்கெட்டில் வரத்து குறைவால் வாழைத்தார்கள் கூடுதல் விலைக்கு விற்பனை
    X

    பொள்ளாச்சி மார்க்கெட்டில் வரத்து குறைவால் வாழைத்தார்கள் கூடுதல் விலைக்கு விற்பனை

    • வெளி மாவட்டங்களில் இருந்தும் வாழைத்தார்கள் விற்பனைக்காக அதிகளவு கொண்டு வரப்படுகிறது.
    • கடந்த 2 வாரத்துக்கு மேலாக பனிப்பொழிவு அதிகரிப்பு மற்றும் மழையால் வாழைத்தார்களின் அறுவடை பாதிக்கப்பட்டது.

    பொள்ளாச்சி

    பொள்ளாச்சி பகுதியில் பனிப் பொழிவு அதிகரிப்பால் வாழைத்தார் அறுவடை பாதிக்கப்பட்டு மார்க்கெட்டுக்கு வரத்து குறைவால் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்த னர்.

    பொள்ளாச்சி காந்தி தினசரி மார்க்கெட்டுக்கு, சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து மட்டுமின்றி, வெளி மாவட்டங்களில் இருந்தும் வாழைத்தார்கள் விற்பனைக்காக அதிகளவு கொண்டு வரப்படுகிறது. கடந்த மாதம் முகூர்த்த நாட்கள் அதிகம் இருந்ததால் வாழைத்தார் வரத்து அதிகமாக இருந்ததுடன் கூடுதல் விலைக்கு விற்பனையானது.

    இந்நிலையில் கடந்த 2 வாரத்துக்கு மேலாக பனிப்பொழிவு அதிகரிப்பு மற்றும் மழையால் வாழைத்தார்களின் அறுவடை பாதிக்கப்பட்டு. மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படும் வாழைத்தார்களின்வரத்து குறைந்தது. இதில் நேற்று சுற்றுவட்டார பகுதியிலிருந்து மட்டுமின்றி, தூத்துக்குடி மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் வாழைத்தார் வரத்து குறைவானது. வரத்து குறைவாக இருந்தாலும், தற்போது கார்த்திகை மாதம் என்பதால் கேரள வியாபாரிகள் அதிகம் வந்திருந்தனர்.

    இதனால், கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. இதில் செவ்வாழை ஒரு கிலோ ரூ.50 வரையிலும், சாம்ராணி ரூ.38-க்கும். பூவந்தார் 35-க்கும், மோரீஸ் 35-க்கும், ரஸ்தாளி 40-க்கும், நேந்திரன் 35-க்கும், என கடந்த மாதத்தைவிட ஒவ்வொரு வாழைத்தாருக்கும் ரூ.5 முதல் ரூ.8 வரை என கூடுதல் விலைக்கு போனது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×