search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
    X

    அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்

    • தி.மு.க. அரசை கண்டித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை திருஞானம் தலைமை தாங்கினார்.

    தஞ்சாவூர்:

    சொத்து வரி, மின் கட்டணம், பால் ஆகியவற்றின் விலை உயர்வை உடனடியாக குறைக்க வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தி.மு.க. அரசை கண்டித்தும் தஞ்சை ரயில் நிலையம் முன்பு இன்று அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை திருஞானம் தலைமை தாங்கினார்.

    அம்மா பேரவை இணை செயலாளர் ஆர்.காந்தி முன்னிலை வகித்தார். மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் புண்ணியமூர்த்தி வரவேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை களை வலியுறுத்தியும், தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் மாவட்ட எம்.ஜிஆர் மன்ற இணை செயலாளர் ராஜமாணிக்கம், நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் சரவணன், முன்னாள் மேயர் சாவித்ரி கோபால், முன்னாள் நகர செயலாளர் பஞ்சாபிகேசன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஜாபர், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் நாகராஜன், முன்னாள் கவுன்சிலர் பூபதி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தம்பி என்ற ரத்தினசோமசுந்தரம், மாணவரணி முருகேசன், அம்மா பேரவை துணைச் செயலாளர் பாலை ரவி , எம்.ஜி.ஆர் மன்ற ஒன்றிய பொருளாளர் தம்பிதுரை, கிழக்கு ஒன்றிய செயலாளர் நாகத்தி கலியமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் கவிதா கலியமூர்த்தி, அண்ணா தொழிற்சங்க அரசு போக்குவரத்து கழக பொதுச் செயலாளர் திருநீலகண்டன், 51-வது வட்ட செயலாளர் மனோகரன், கவுன்சிலர்கள் கோபால், தட்சிணாமூர்த்தி, காந்திமதி, நீலகிரி ஊராட்சி மாவட்ட பிரதிநிதி சண்முகசுந்தரம், நிர்வாகிகள் தங்க கண்ணன், ஐயப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×