என் மலர்
நீங்கள் தேடியது "பள்ளி விடுமுறை"
- சென்னையிலும், வட தமிழகத்திலும் மழை பெய்யும் என கடந்த சில நாள்களாகவே வானிலை ஆய்வு மையம் எச்சரித்து வந்தது.
- சூழலுக்கு ஏற்ப பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்கும் அதிகாரம் மீண்டும் கல்வித்துறைக்கே மாற்றப்பட வேண்டும்.
பாமக தலைவர் அன்புமணி ராம்தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொட்டும் மழையில் விடுமுறை அளிக்காமல் பள்ளிக்குழந்தைகளை பரிதவிக்க விடுவதா?முடிவெடுக்கும் அதிகாரம் கல்வித்துறைக்கே வேண்டும்!
சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் இன்று காலை முதல் கடுமையான மழை பெய்து வரும் நிலையில், பள்ளிக்கூடங்களும், கல்லூரிகளும் இன்று வழக்கம் போல நடத்தப்பட்டதால் மாணவச் செல்வங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல பள்ளிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் நனைந்தபடியே வீடு திரும்பியுள்ளனர். மாணவர்களின் துயரத்திற்கு தமிழக ஆட்சியாளர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்.
டித்வா புயல் காரணமாக சென்னையிலும், வட தமிழகத்திலும் மழை பெய்யும் என கடந்த சில நாள்களாகவே வானிலை ஆய்வு மையம் எச்சரித்து வந்தது. இன்று காலை 7 மணியளவில் டித்வா புயல் சென்னைக்கு 60 கி.மீ தொலைவில் இருப்பதாகவும், அதனால் சென்னையில் மழை அதிகரிக்கும் என்றும் வானிலை மையம் கூறியிருந்தது. அதனடிப்படையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருக்க வேண்டும். அதை அரசு செய்யாததால் தான் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.
மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அதிகாரம் முந்தைய திமுக ஆட்சியில் மாவட்ட ஆட்சியர்களுக்கு மாற்றப்பட்டது தான் அனைத்துக் குழப்பங்களுக்கும் காரணம் ஆகும். சூழலுக்கு ஏற்ப பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்கும் அதிகாரம் மீண்டும் கல்வித்துறைக்கே மாற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
- 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது.
- 11, 12 ஆம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு தொடர்ந்து நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெறும் நிலையில் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு நடைபெறும் பள்ளுகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளி பள்ளி தலைமை ஆசிரியர் முடிவெடுக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
11, 12 ஆம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு தொடர்ந்து நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- கடலோர மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
- புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 6ம் தேதிவரை மழை நீடிக்கும் என தெரிவித்துள்ளது.
புதுச்சேரி:
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், புதுவையில் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியுள்ளதால் கடலோர மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் 6ம் தேதிவரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தொடர்மழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை விடப்படுவதாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
- கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை.
- புதுச்சேரி, காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியுள்ளதால் கடலோர மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் லலிதா விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதேபோல் கனமழை எதிரொலியால் கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இதேபோல் விழுப்புரம் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
- நாளை திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு
- 15 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
வங்கக் கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைய உள்ளதால், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 14-ந்தேதி வரை 5 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கன மழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக விடுமுறை தொடர்பான அறிவிப்பை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ளார்.
- நாளை திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு
- பள்ளி, கல்லூரிகள் விடுமுறை தொடர்பாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
சென்னை:
வங்கக் கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து வருவதால் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்து வருகிறது.
நாளை திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கன மழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
- சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு
- பள்ளி, கல்லூரிகள் விடுமுறை தொடர்பாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
சென்னை:
வங்கக் கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து வருவதால் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்து வருகிறது. கனமழை எச்சரிக்கை காரணமாக, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, வேலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலையில் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கன மழை பெய்தது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. சென்னையில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பப்பட்டுள்ளது.
- தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் மட்டும் விடுமுறை.
- விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
வடகிழக்கு பருவமழையையொட்டி தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தூத்துக்குடி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதன் எதிரொலியால், மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தொடர்ந்து, தேனி மாவட்டத்திலும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- காற்றழுத்த தாழ்வு மண்டலம் மட்டக்களப்பு - திரிகோணமலை இடையே கரையை கடந்தது
- நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இன்று மழை பெய்தது.
திருவாரூர்:
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மிக கனமழையும், குமரி, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி திருவாரூர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் 3-ம் தேதி (நாளை) விடுமுறை அளித்து மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் உத்தரவிட்டுள்ளார்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையின் மட்டக்களப்பு - திரிகோணமலை இடையே கரையை கடந்ததாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மழை பெய்தது.
- மாசிமக திருவிழாவை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான செய்முறை பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்.
புதுச்சேரி:
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் 7ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
மாசிமக திருவிழாவை முன்னிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மேலும், 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான செய்முறை பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
- புதுவையில் வைரஸ் தொற்று பரவி குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்
- வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த புதுவை அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
புதுச்சேரி:
புதுவையில் வைரஸ் காய்ச்சல் பரவல் காரணமாக 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நாளை (16-ந்தேதி) முதல் 11 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக புதுவை சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்தவுடன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் வைரஸ் தொற்று பரவி குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களிலும் ஆரம்ப பள்ளி முதல் 8-ம் வகுப்பு வரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை (வியாழக்கிழமை)முதல் 26-ந் தேதி வரை 11 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த புதுவை அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ஐந்து மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
- 56,020 பேர் துணைத்தேர்வு எழுத இருக்கிறார்கள்
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்றிரவில் இருந்து தற்போது வரை மழை பெய்து வருகிறது. இன்று காலை 10 மணி வரை மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இன்று பிளஸ் 2 துணைத்தேர்வு நடைபெறுவதாக இருந்தது. இந்தத் தேர்வை 56,020 மாணவர்கள் எழுத இருக்கிறார்கள். மழை பெய்து வருவதாலும், ஐந்து மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாலும் தேர்வு நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்தது.
ஆனால், தேர்வு எக்காரணம் கொண்டும் ஒத்திவைக்கப்பட மாட்டாது. திட்டமிட்டபடி இன்று தேர்வு நடைபெறும் என தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.






