என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில் பயணிகள்"

    • ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
    • முதற்கட்டமாக 10 ரெயில்களில் மட்டும் இத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

    தெற்கு ரெயில்வேயில் ஏசி அல்லாத பெட்டிகளில் பயணிப்போர் கட்டணம் செலுத்தி படுக்கை விரிப்புகளை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஏசி அல்லாத பெட்டிகளில் பயணிப்போர் கட்டணம் செலுத்தி படுக்கை விரிப்புகளை பயன்படுத்தும் வசதி ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    அதன்படி, தலையணை-ரூ.30, பெட்ஷீட்-20 பெறலாம் எனவும், ரூ.50 கொடுத்து உறையுடன் கூடிய தலையணை, பெட்ஷீட் பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது, ஜனவரி 1ம் தேதி முதல் தென்னக ரெயில்வேயில் முதற்கட்டமாக 10 ரெயில்களில் மட்டும் இத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    குறிப்பாக, நீலகிரி, மங்களூர், மன்னார்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், திருவனந்தபுரம் விரைவு ரெயில்களில் வரும் ஜனவரி 1ம் தேத முதல் திட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திட்டம் குறித்து பல பயணிகளுக்கு இன்றளவும் தெரிவதில்லை.
    • முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் வந்து நிற்கும் இடத்தில் வைத்து பயணிகளுக்கு நேரடியாக உணவு வழங்குகின்றன.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டம், ஐ.ஆர்.சி.டி.சி.யுடன் இணைந்து முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக கடந்த 2023-ம் ஆண்டு ரூ.20-க்கு 'சிக்கன உணவு' என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த 'சிக்கன உணவு' திட்டத்தின் நோக்கம் பயணிகளுக்கு சத்தான மற்றும் குறைந்த விலை உணவுகளை வழங்குவதாகும். இத்திட்டம் குறித்து பல பயணிகளுக்கு இன்றளவும் தெரிவதில்லை.

    எனவே, சென்னை சென்டிரல், எழும்பூர், செங்கல்பட்டு, அரக்கோணம், காட்பாடி ஆகிய ரெயில் நிலையங்களில் சிக்கன உணவு விற்பனை மையங்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், 27 ரெயில் நிலையங்களில் 64 சிக்கன உணவு கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த மையங்கள் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் வந்து நிற்கும் இடத்தில் வைத்து பயணிகளுக்கு நேரடியாக உணவு வழங்குகின்றன.

    இந்த கடைகளில் 200 கிராம் எடையுள்ள எலுமிச்சை சாதம், தயிர் சாதம், புளி சாதம், பருப்பு கிச்சடி மற்றும் பூரி-கிழங்கு போன்ற அரிசி வகை உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மைசூர் காலனி ரெயில் நிலையம் வந்த மோனோ ரெயில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பாதி வழியின் நின்றது.
    • விபத்து குறித்து மோனோ ரெயில் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    மகாராஷ்டிரா தலைநகர் மும்பை மற்றும் புறநகரில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. இன்று காலையிலும் மழை வெளுத்து வாங்கியது.

    கொட்டித் தீர்த்த கனமழையால் மும்பை நகரமே வெள்ளக்காடாக மாறி உள்ளது. சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

    இதற்கிடையே, மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மைசூர் காலனி ரெயில் நிலையம் வந்த மோனோ ரெயில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பாதி வழியின் நின்றது. இதனால் ரெயில் பயணித்த பயணிகள் அச்சம் அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். ரெயிலில் சிக்கி இருந்தவர்களை நீள ஏணிகளின் மூலம்  மீட்கும் பணிகள் நடந்தன. இந்நிலையில் சுமார் 4 மணி நேர போராட்டத்தின் பின் சிக்கியிருந்த 582 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.  

    விபத்து குறித்து மோனோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள முதற்கட்ட அறிக்கையில், "வழக்கத்தைவிட ரயிலில் பயணிகள் கூட்டம் அதிகரித்ததால் ரெயிலின் எடை 109 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. இது ரெயிலின் இயல்பான எடை தாங்கும் திறனாக நிர்ணயிக்கப்பட்டுள்ள 104 மெட்ரிக் டன் அளவைவிட அதிகம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு 2½ கோடி போலி கணக்குகளை ரெயில்வே முடக்கியது.
    • டிக்கெட் முன்பதிவுக்கு இனி மேல் ஆதார் மூலம் ஓ.டி.பி. முறை கொண்டு வரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    சென்னை:

    பெரும்பாலான பயணிகள் நீண்டதூர பயணத்துக்கு ரெயில் போக்குவரத்தையே பெரிதும் விரும்புகின்றனர். குறைந்த கட்டணம், பயணம் செய்வதில் கூடுதல் வசதி உள்ளிட்டவற்றால் ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இதற்கிடையே சமீபகாலமாக ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் தொடர்ந்து சிக்கல்கள் நீடித்து வருகிறது. வழக்கமான முன்பதிவு டிக்கெட்டுகள் தொடங்கிய சில நாட்க ளிலேயே முடிந்து காத்திருப்போர் பட்டியலுக்கு சென்று விடுகிறது.

    மேலும் தட்கல் டிக்கெட் முன்பதிவிலும் பயணிகள் முன்பதிவு செய்வதற்கு முன்பே சில நிமிடங்களில் முடிந்து விடுகிறது. இடைத்தரகர்களின் குறுக்கீட்டால் உண்மையான பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு 2½ கோடி போலி கணக்குகளை ரெயில்வே முடக்கியது. மேலும் டிக்கெட் முன்பதிவுக்கு இனி மேல் ஆதார் மூலம் ஓ.டி.பி. முறை கொண்டு வரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இது விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது.

    இந்த நிலையில் ரெயில்வே தங்குமிடங்கள், பயணம் உள்ளிட்டவற்றிற்கு போலி ஆதார் அட்டைகள் பயன்படுத்தப்படுவதாக ரெயில்வே அமைச்சகத்துக்கு தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்தவண்ணம் இருந்தது.

    இதைத்தொடர்ந்து ஆள் மாறாட்டம், ஆதார் அட்டையை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் ரெயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகள் மற்றும் ரெயில்வே தங்குமிடங்கள் உள்ளிட்டவற்றில் ரெயில் டிக்கெட் சரிபார்ப்பு அலுவலர்கள் பயணிகளின் ஆதார் அட்டையை கவனமாக சரிபார்க்க ரெயில்வே அமைச்சம் உத்தரவிட்டு உள்ளது.

    பயணிகளின் ஆதார் அட்டையை "எம்ஆதார்" எனப்படும் ரியல்டைம் அப்ளிகேஷனை பயன்படுத்தி சரிபார்க்க வேண்டும் வேண்டும், அடையாள அட்டை சரிபார்ப்பு வழிமுறையை வலுப்படுத்துவது அவசியம் என்று அனைத்து ரெயில்வே மண்டலங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    தற்போது ரெயில் பயணத்தின்போது டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்பவர்கள் ஆதார் மட்டும் இன்றி ஏதேனும் ஒரு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை பரிசோதகர்களிடம் காண்பிக்கலாம். இனிவரும் நாட்களில் ரெயில் பயணத்தின் போது ஆதார் அட்டை கட்டாயம் ஆகும் என்று தெரிகிறது.

    • 2ம் வகுப்பு ஏசி பெட்டிகளில் இருக்கை காலியாக இருந்தால் கூடுதல் கட்டணமின்றி ஒதுக்கீடு.
    • உட்கார்ந்து பயணம் செய்யும் முன்பதிவு ரெயில்களிலும் ஆட்டோ அப்கிரடேஷன் சலுகை அமலுக்கு வருகிறது.

    ஆட்டோ அப்கிரேடஷன் முறையில் ரெயில் பயணிகளுக்கு கூடுதல் கலுகையை ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

    காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு 2ம் வகுப்பு ஏசி பெட்டிகளில் இருக்கை காலியாக இருந்தால் கூடுதல் கட்டணமின்றி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    படுக்கை வசதி இல்லாத பகல் நேர உட்கார்ந்து பயணம் செய்யும் முன்பதிவு ரெயில்களிலும் ஆட்டோ அப்கிரடேஷன் சலுகை அமலுக்கு வருகிறது.

    • பலுசிஸ்தானைப் பிரிப்பதற்கு முயற்சிக்கும் பிரிவினைவாதக் குழுவான பலுச் விடுதலைப் படையின் மஜீத் படைப்பிரிவால் இந்த கடத்தல் அரங்கேறியது.
    • 346 பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர் மற்றும் 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பெஷாவர் செல்லும் பயணிகள் ரெயில் கடந்த மார்ச் 11 (செவ்வாய்க்கிழமை) கடத்தப்பட்டது. 400க்கும் மேற்பட்ட பயணிகளை, பெரும்பாலும் பாதுகாப்புப் பணியாளர்களை ஏற்றிச் சென்ற ஜாபர் எக்ஸ்பிரஸ், சிபி நகரம் வழியாகச் சென்றபோது இந்த கடத்தல் நிகழ்ந்தது.

    பாகிஸ்தானில் இருந்து பலுசிஸ்தானைப் பிரிப்பதற்கு முயற்சிக்கும் பிரிவினைவாதக் குழுவான பலுச் விடுதலைப் படையின் மஜீத் படைப்பிரிவால் இந்த கடத்தல் அரங்கேறியது. 24 மணி நேரத்திற்கு பின் பாகிஸ்தான் ராணுவம் எடுத்த நடவடிக்கையில் ரெயில் பயணிகள் மீட்கப்பட்டனர்.

    இந்த நடவடிக்கையின் போது 346 பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர் மற்றும் 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    இதற்கிடையே இந்த ரெயில் கடத்தலில் ஈடுபட்ட பலுச் விடுதலைப் படைக்கு பின்னால் இந்தியா உள்ளதாக பாகிஸ்தானின் மூத்த அதிகாரி ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்தியா பயங்கரவாதத்தை ஆதரிப்பதாகவும் அதன் அண்டை நாடுகளை சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் அவர் பேசியிருந்தார்.

    இந்நிலையில் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "பாகிஸ்தானின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நாங்கள் கடுமையாக நிராகரிக்கிறோம்.

    உலகளாவிய பயங்கரவாதத்தின் மையம் எங்கே இருக்கிறது என்பது முழு உலகிற்கும் தெரியும். பாகிஸ்தான் அதன் சொந்த உள்நாட்டு பிரச்சினைகள் மற்றும் தோல்விகளுக்கான பழியை மற்றவர்கள் மீது சுமத்துவதற்குப் பதிலாக தாங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை உள்நோக்கிப் பார்க்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயிலை பயங்கரவாதிகள் வழிமறித்து கடத்தினர்.
    • ராணுவத்தை சேர்ந்த 28 வீரர்கள் உயிரிழந்தனர்.

    பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் கடத்திய பயணிகள் ரெயிலில் சிக்கியிருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடத்தப்பட்ட ரெயிலில் இருந்து பயணிகளை மீட்கும் பணியின் போது பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த 28 வீரர்கள் உயிரிழந்ததாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

    முன்னதாக பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம், குவெட்டாவில் இருந்து கைபர் பதுன்கவா மாகாணத்தின் பெஷாவர் பகுதிக்கு சென்று கொண்டிருந்த ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயிலை பயங்கரவாதிகள் வழிமறித்து கடத்தினர்.

    பாகிஸ்தானிடமிருந்து பலுசிஸ்தானுக்கு சுதந்திரம் கோரும் பலுச் விடுதலை இராணுவம் (BLA) என்ற பிரிவினைவாத அமைப்பு இந்த கடத்தலை அரங்கேற்றியது. ரெயில் பிரு குன்றி மலைப்பகுதியின் அருகில் உள்ள சுரங்கப்பாதையில் சென்றுக் கொண்டிருந்த போது ஆயுதம் ஏந்திய நபர்கள் ரெயிலை வழிமறித்தனர்.

    இதையடுத்து ரெயிலில் இருந்த பயணிகளை மீட்கும் பணியில் பாதுகாப்பு படையினர் மற்றும் அந்நாட்டு ராணுவத்தினர் ஈடுபட்டு இருந்தனர். அதன்படி ரெயிலில் சிக்கி பணயக்கைதிகளாக வைக்கப்பட்ட பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர்.

    "இந்த நடவடிக்கையின் போது 346 பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர் மற்றும் 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்," என்று ஒரு ராணுவ அதிகாரி ஏ.எஃப்.பி. (AFP) நிறுவனத்திடம் தெரிவித்தார்.

    இந்தத் சம்பவத்துக்கு பலூச் விடுதலைப் படை (BLA) உரிமை கோரியது. தண்டவாளத்தில் வெடிப்பு நிகழ்ந்து, மலைகளில் மறைந்திருந்த இடங்களில் இருந்து டஜன் கணக்கான துப்பாக்கி ஏந்தியவர்கள் வெளியே வருவது போன்ற வீடியோவை அது வெளியிட்டது.

    • ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயிலை பயங்கரவாதிகள் வழிமறித்து கடத்தினர்.
    • சுரங்கப்பாதையில் சென்றுக் கொண்டிருந்த போது ஆயுதம் ஏந்திய நபர்கள் வழிமறித்தனர்.

    பாகிஸ்தானில் பயணிகள் ரெயில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம், குவெட்டாவில் இருந்து கைபர் பதுன்கவா மாகாணத்தின் பெஷாவர் பகுதிக்கு சென்று கொண்டிருந்த ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயிலை பயங்கரவாதிகள் வழிமறித்து கடத்தினர்.

    பாகிஸ்தானிடமிருந்து பலுசிஸ்தானுக்கு சுதந்திரம் கோரும் பலுச் விடுதலை இராணுவம் (BLA) என்ற பிரிவினைவாத அமைப்பு இந்த கடத்தலை அரங்கேற்றியது. ரெயில் பிரு குன்றி மலைப்பகுதியின் அருகில் உள்ள சுரங்கப்பாதையில் சென்றுக் கொண்டிருந்த போது ஆயுதம் ஏந்திய நபர்கள் ரெயிலை வழிமறித்தனர்.

    ரெயிலை கடத்திய பயங்கரவாதிகளில் 16 பேரை இதுவரை கொன்றுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பயணிகளில் 104 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

    முன்னதாக, பலுசிஸ்தான் செய்தித் தொடர்பாளர் ஷாஹித் ரிண்ட் கூறும் போது, "பாதுகாப்புப் படையினர் 104 பயணிகளை (58 ஆண்கள், 31 பெண்கள் மற்றும் 15 குழந்தைகள்) - ஒரு பெட்டியிலிருந்து மீட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.

    ரெயிலில் சுமார் 400 பயணிகள் இருந்தனர். இதனால் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. பெஷாவர் செல்லும் பயணிகள் ரயிலில் தீவிர துப்பாக்கிச் சூடு நடந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில் மீட்புக் குழுக்கள் அனுப்பப்பி வைக்கப்பட்டுள்ளதாக ரிண்ட் கூறியுள்ளார்.

    • ரெயில் நிலையங்களின் மேம்பாடு குறித்தும் ரெயில் சங்க பிரதிநிதிகளுடன் விஜய் வசந்த் எம்.பி. ஆலோசனை மேற்கொண்டார்.
    • டவுண் ரெயில் நிலையத்தில் பரசுராம் ரெயில் 1 நிமிடம் நின்று செல்ல வழிவகை செய்தல், ரெயில் நிலையம் அருகே பேருந்து நிலைய வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய ரெயில்வே சேவைகள் குறித்தும் ரெயில் நிலையங்களின் மேம்பாடு குறித்தும் ரெயில் சங்க பிரதிநிதிகளுடன் விஜய் வசந்த் எம்.பி. ஆலோசனை மேற்கொண்டார்.

    இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், புதிய ரெயில்களைக் குமரி மாவட்டத்திற்கு கொண்டு வருதல் சில ரெயில்கள் குறிப்பிட்ட சில ரெயில் நிலையங்களில் நின்று செல்ல ஏதுவாக வழிவகை செய்தல் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து ஆலோசனை மேற் கொள்ளப்பட்டது.

    குறிப்பாக தாம்பரம்-நாகர்கோவில் ரெயிலை தினசரி ரெயிலாக இயக்கு தல், ஷார்மினார் விரைவு ரெயிலை கன்னியாகுமரி வரை நீடித்தல், வார கடைசி யில் வேளாங்கண்ணி செல்ல கன்னியாகுமரி வழித்தடத்தில் ரெயில் இயக்குதல், மதுரை-திருவனந்தபுரம் இடையே மெமோ ரெயில் இயக்குதல், டவுண் ரெயில் நிலையத்தில் பரசுராம்  ரெயில் 1 நிமிடம் நின்று செல்ல வழிவகை செய்தல், ரெயில் நிலையம் அருகே பேருந்து நிலைய வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

    இதனைக் கேட்டறிந்த விஜய் வசந்த் எம்.பி. இந்த கோரிக்கைகள் குறித்து ரெயில்வே அதிகாரி களிடம் நேரடியாக கோரிக்கை கள் வைத்து விரைந்து நடவ டிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மேலும் வரக் கூடிய நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இது குறித்து பேசுவேன் என ரெயில் பயணிகள் சங்கத்திடம் கூறினார்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருவனந்தபுரம் கோட்ட ரெயில்வே ஆலோ சனை குழு உறுப்பினர் சூசைராஜ், மதுரை கோட்ட ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் சிவக்குமார், ரெயில் பயணிகள் சங்கத்தை சேர்ந்த ஸ்ரீ ராம், கன்னியாகுமரி நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் முருகதாஸ் உள்ளிட்ட சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • முன்பதிவு செய்து பயணிக்கிற பயணிகள் பிரிவில் இந்த கால கட்டத்தில் 53 கோடியே 65 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.
    • ஏப்ரல் 1 தொடங்கி நவம்பர் 30, 2022 வரையில் முன்பதிவில்லா பயணிகள் பிரிவில் மொத்தம் 352 கோடியே 73 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

    புதுடெல்லி:

    நமது நாட்டில் கொரோனா பெருந்தொற்று முற்றிலுமாய் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ரெயில் பயணிகள் போக்குவரத்து துறை சூடுபிடித்துள்ளது.

    குறிப்பாக கடந்த 8 மாத காலத்தில் ரெயில் பயணிகள் எண்ணிக்கையில் நல்ல வளர்ச்சி காணப்பட்டுள்ளது.

    இதை ரெயில்வே விடுத்துள்ள அறிக்கை காட்டுகிறது.

    இந்த அறிக்கையில் கூறி உள்ள முக்கிய விஷயங்கள்:-

    * ஏப்ரல்-1 தொடங்கி நவம்பர் 30, 2022 வரையிலான கால கட்டத்தில் ரெயில் பயணிகள் எண்ணிக்கை 76 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. இந்த காலகட்டத்தில் பயணிகள் பிரிவில் ரெயில்வேயின் வருமானம் ரூ.43 ஆயிரத்து 324 கோடி ஆகும். கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரெயில்வே பயணிகள் பிரிவு வருமானம் ரூ.24 ஆயிரத்து 631 கோடிதான்.

    * முன்பதிவு செய்து பயணிக்கிற பயணிகள் பிரிவில் இந்த கால கட்டத்தில் 53 கோடியே 65 லட்சம் பேர் பயணித்துள்ளனர். கடந்த ஆண்டின் இதே கால கட்டத்தில் முன் பதிவு செய்து பயணித்த பயணிகள் எண்ணிக்கை 48 கோடியே 60 லட்சம் ஆகும்.

    * முன்பதிவு பயணிகள் பிரிவில் மேற்கூறிய 8 மாத கால வருமானம் ரூ.34 ஆயிரத்து 303 கோடி ஆகும். கடந்த ஆண்டு இது ரூ.22 ஆயிரத்து 904 கோடி ஆகும். இது 50 சதவீதம் அதிகரிப்பு ஆகும்.

    * ஏப்ரல் 1 தொடங்கி நவம்பர் 30, 2022 வரையில் முன்பதிவில்லா பயணிகள் பிரிவில் மொத்தம் 352 கோடியே 73 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 138 கோடியே 13 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இந்த ஆண்டில் 155 சதவீதம் வளர்ச்சி காணப்பட்டுள்ளது.

    * முன்பதிவில்லா பயணிகள் பிரிவில் கடந்த 8 மாத காலத்தில் வருமானம் ரூ.9 ஆயிரத்து 21 கோடி. கடந்த ஆண்டு இது ரூ.1,728 கோடிதான். அந்த வகையில் இந்த வருமானம் 422 சதவீதம் அதிகரித்துள்ளது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • சோழவந்தான் வட்டார ரெயில் பயணிகள் நல சங்க கூட்டம் நடந்தது.
    • ரெயில் பயண கட்டணங்களை பழைய கட்டணத்திற்கு குறைக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சோழவந்தான்

    சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோவிலில் வட்டார ரெயில் பயணிகள் நல சங்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது. முன்னாள் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கதிரேசன், தங்கராஜ் முன்னிலை வகித்தனர். அய்யனார் வரவேற்றார். சோழவந்தான் ரெயில் நிலையத்தில் ஏற்கனவே நின்று சென்ற ரெயில்களும், புதிதாக ரெயில்கள் நின்று செல்வதற்கும் பாண்டியன், பொதிகை, அந்தியோதயா, திருப்பதி எக்ஸ்பிரஸ் , மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் இரு மார்க்கங்களிலும் சோழவந்தான் ரெயில் நிலையத்தில் தலா ஒரு நிமிடம் நின்று செல்ல வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கொரோனோ காலத்தில் உயர்த்தப்பட்ட ரெயில் பயண கட்டணங்களை பழைய கட்டணத்திற்கு குறைக்க வேண்டும் என்றும் மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவராக கிருஷ்ணன், துணைத் தலைவராக கண்ணன், செயலாளராக அய்யனார் பொருளாளராக சரவணன், துணைச் செயலாளர்கள் சுப்பிரமணியன், ஆனந்தகுமார், பாலசுப்ரமணியன், முத்துகாமாட்சி, முனியம்மாள் ஆகியோரும் சட்ட ஆலோசர்களாக ராஜேந்திரன், ஜோதிராஜ் மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முத்துப்பாண்டி நன்றி கூறினார்.

    • ஒரு சில ரெயில்கள் மட்டுமே நின்று செல்கின்றன. இதனால் இங்கிருந்து செல்லும் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
    • மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் திருச்செந்தூர், ராக்போர்ட் ரெயில்கள் நிற்க வேண்டும்.

    மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் சென்னை மற்றும் புறநகர் பகுதிக்கு கல்லூரி மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் என சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.

    இங்கிருந்து போதிய ரெயில்கள் இல்லை. ஒரு சில ரெயில்கள் மட்டுமே நின்று செல்கின்றன. இதனால் இங்கிருந்து செல்லும் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் திருச்செந்தூர், ராக்போர்ட் ரெயில்கள் நிற்க வேண்டும், சென்னையில் இருந்து செங்கல்பட்டு வரை வரும் யூனிட் ரெயிலை மேல்மருவத்தூர் வரை காலை மாலை இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை மதுராந்தகம் ரெயில் நிலையம் அருகே திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ×