search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி-வேளாங்கண்ணிக்கு ரெயில் இயக்க நடவடிக்கை - ரெயில் பயணிகள் சங்கத்தினரிடம் விஜய்வசந்த் எம்.பி. உறுதி
    X

    கன்னியாகுமரி-வேளாங்கண்ணிக்கு ரெயில் இயக்க நடவடிக்கை - ரெயில் பயணிகள் சங்கத்தினரிடம் விஜய்வசந்த் எம்.பி. உறுதி

    • ரெயில் நிலையங்களின் மேம்பாடு குறித்தும் ரெயில் சங்க பிரதிநிதிகளுடன் விஜய் வசந்த் எம்.பி. ஆலோசனை மேற்கொண்டார்.
    • டவுண் ரெயில் நிலையத்தில் பரசுராம் ரெயில் 1 நிமிடம் நின்று செல்ல வழிவகை செய்தல், ரெயில் நிலையம் அருகே பேருந்து நிலைய வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய ரெயில்வே சேவைகள் குறித்தும் ரெயில் நிலையங்களின் மேம்பாடு குறித்தும் ரெயில் சங்க பிரதிநிதிகளுடன் விஜய் வசந்த் எம்.பி. ஆலோசனை மேற்கொண்டார்.

    இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், புதிய ரெயில்களைக் குமரி மாவட்டத்திற்கு கொண்டு வருதல் சில ரெயில்கள் குறிப்பிட்ட சில ரெயில் நிலையங்களில் நின்று செல்ல ஏதுவாக வழிவகை செய்தல் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து ஆலோசனை மேற் கொள்ளப்பட்டது.

    குறிப்பாக தாம்பரம்-நாகர்கோவில் ரெயிலை தினசரி ரெயிலாக இயக்கு தல், ஷார்மினார் விரைவு ரெயிலை கன்னியாகுமரி வரை நீடித்தல், வார கடைசி யில் வேளாங்கண்ணி செல்ல கன்னியாகுமரி வழித்தடத்தில் ரெயில் இயக்குதல், மதுரை-திருவனந்தபுரம் இடையே மெமோ ரெயில் இயக்குதல், டவுண் ரெயில் நிலையத்தில் பரசுராம் ரெயில் 1 நிமிடம் நின்று செல்ல வழிவகை செய்தல், ரெயில் நிலையம் அருகே பேருந்து நிலைய வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

    இதனைக் கேட்டறிந்த விஜய் வசந்த் எம்.பி. இந்த கோரிக்கைகள் குறித்து ரெயில்வே அதிகாரி களிடம் நேரடியாக கோரிக்கை கள் வைத்து விரைந்து நடவ டிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மேலும் வரக் கூடிய நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இது குறித்து பேசுவேன் என ரெயில் பயணிகள் சங்கத்திடம் கூறினார்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருவனந்தபுரம் கோட்ட ரெயில்வே ஆலோ சனை குழு உறுப்பினர் சூசைராஜ், மதுரை கோட்ட ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் சிவக்குமார், ரெயில் பயணிகள் சங்கத்தை சேர்ந்த ஸ்ரீ ராம், கன்னியாகுமரி நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் முருகதாஸ் உள்ளிட்ட சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×