என் மலர்
நீங்கள் தேடியது "Train passengers"
- நீண்ட தூர பயணிகளின் வசதிக்காக இந்த நவீன வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
- இலவச வை-பை, குடிநீர் வசதி, பாலூட்டும் அறை வசதிகள் உள்ளன.
தாம்பரம் ரெயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக கட்டண குளிர்சாதன காத்திருப்பு அறை திறக்கப்பட்டுள்ளது.
தென்னக ரெயில்வேயின் முக்கிய சந்திப்பாக விளங்கும் தாம்பரம் ரெயில் நிலையத்தில், நீண்ட தூர பயணிகளின் வசதிக்காக இந்த நவீன வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
இது, முழுமையாக குளிர்சாதனம் செய்யப்பட்ட நவீனமான உள் அலங்காரம் கொண்ட அறையாகும். சொகுசான சோபா செட்கள் மற்றும் சாய்வு இருக்கைகள் கொண்டவை. பெண்கள் மற்றும் ஆண்களுக்கென தனித்தனியான நவீன கழிப்பறை வசதிகள்.
மொபைல் சார்ஜிங் பாயிண்டுகள், இலவச வை-பை, குடிநீர் வசதி, பாலூட்டும் அறை வசதிகள் உள்ளன.
24 மணி நேரமும் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கட்டண ஏசி காத்திருப்பு அறைகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படுகிறது.
அதன்படி, ஒரு மணி நேரத்திற்கு தலா ரூ.35 வசூலிக்கப்படுகிறது. இதற்கு முன் கூட்டியே பதிவு செய்யத் தேவையில்லை. நேரடியாகச் சென்று கட்டணம் செலுத்திப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
உறுதி செய்யப்பட்ட அல்லது RAC டிக்கெட் வைத்துள்ள பயணிகள் தங்களது பயண வகுப்பு எதுவாக இருந்தாலும், இந்தக் கட்டணத்தைச் செலுத்தி இங்குக் காத்திருக்கலாம் என ரெயில்வே நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
- ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
- முதற்கட்டமாக 10 ரெயில்களில் மட்டும் இத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
தெற்கு ரெயில்வேயில் ஏசி அல்லாத பெட்டிகளில் பயணிப்போர் கட்டணம் செலுத்தி படுக்கை விரிப்புகளை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏசி அல்லாத பெட்டிகளில் பயணிப்போர் கட்டணம் செலுத்தி படுக்கை விரிப்புகளை பயன்படுத்தும் வசதி ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
அதன்படி, தலையணை-ரூ.30, பெட்ஷீட்-20 பெறலாம் எனவும், ரூ.50 கொடுத்து உறையுடன் கூடிய தலையணை, பெட்ஷீட் பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது, ஜனவரி 1ம் தேதி முதல் தென்னக ரெயில்வேயில் முதற்கட்டமாக 10 ரெயில்களில் மட்டும் இத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
குறிப்பாக, நீலகிரி, மங்களூர், மன்னார்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், திருவனந்தபுரம் விரைவு ரெயில்களில் வரும் ஜனவரி 1ம் தேத முதல் திட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- திட்டம் குறித்து பல பயணிகளுக்கு இன்றளவும் தெரிவதில்லை.
- முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் வந்து நிற்கும் இடத்தில் வைத்து பயணிகளுக்கு நேரடியாக உணவு வழங்குகின்றன.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டம், ஐ.ஆர்.சி.டி.சி.யுடன் இணைந்து முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக கடந்த 2023-ம் ஆண்டு ரூ.20-க்கு 'சிக்கன உணவு' என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த 'சிக்கன உணவு' திட்டத்தின் நோக்கம் பயணிகளுக்கு சத்தான மற்றும் குறைந்த விலை உணவுகளை வழங்குவதாகும். இத்திட்டம் குறித்து பல பயணிகளுக்கு இன்றளவும் தெரிவதில்லை.
எனவே, சென்னை சென்டிரல், எழும்பூர், செங்கல்பட்டு, அரக்கோணம், காட்பாடி ஆகிய ரெயில் நிலையங்களில் சிக்கன உணவு விற்பனை மையங்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், 27 ரெயில் நிலையங்களில் 64 சிக்கன உணவு கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த மையங்கள் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் வந்து நிற்கும் இடத்தில் வைத்து பயணிகளுக்கு நேரடியாக உணவு வழங்குகின்றன.
இந்த கடைகளில் 200 கிராம் எடையுள்ள எலுமிச்சை சாதம், தயிர் சாதம், புளி சாதம், பருப்பு கிச்சடி மற்றும் பூரி-கிழங்கு போன்ற அரிசி வகை உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு 2½ கோடி போலி கணக்குகளை ரெயில்வே முடக்கியது.
- டிக்கெட் முன்பதிவுக்கு இனி மேல் ஆதார் மூலம் ஓ.டி.பி. முறை கொண்டு வரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
சென்னை:
பெரும்பாலான பயணிகள் நீண்டதூர பயணத்துக்கு ரெயில் போக்குவரத்தையே பெரிதும் விரும்புகின்றனர். குறைந்த கட்டணம், பயணம் செய்வதில் கூடுதல் வசதி உள்ளிட்டவற்றால் ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே சமீபகாலமாக ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் தொடர்ந்து சிக்கல்கள் நீடித்து வருகிறது. வழக்கமான முன்பதிவு டிக்கெட்டுகள் தொடங்கிய சில நாட்க ளிலேயே முடிந்து காத்திருப்போர் பட்டியலுக்கு சென்று விடுகிறது.
மேலும் தட்கல் டிக்கெட் முன்பதிவிலும் பயணிகள் முன்பதிவு செய்வதற்கு முன்பே சில நிமிடங்களில் முடிந்து விடுகிறது. இடைத்தரகர்களின் குறுக்கீட்டால் உண்மையான பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு 2½ கோடி போலி கணக்குகளை ரெயில்வே முடக்கியது. மேலும் டிக்கெட் முன்பதிவுக்கு இனி மேல் ஆதார் மூலம் ஓ.டி.பி. முறை கொண்டு வரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இது விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது.
இந்த நிலையில் ரெயில்வே தங்குமிடங்கள், பயணம் உள்ளிட்டவற்றிற்கு போலி ஆதார் அட்டைகள் பயன்படுத்தப்படுவதாக ரெயில்வே அமைச்சகத்துக்கு தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்தவண்ணம் இருந்தது.
இதைத்தொடர்ந்து ஆள் மாறாட்டம், ஆதார் அட்டையை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் ரெயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகள் மற்றும் ரெயில்வே தங்குமிடங்கள் உள்ளிட்டவற்றில் ரெயில் டிக்கெட் சரிபார்ப்பு அலுவலர்கள் பயணிகளின் ஆதார் அட்டையை கவனமாக சரிபார்க்க ரெயில்வே அமைச்சம் உத்தரவிட்டு உள்ளது.
பயணிகளின் ஆதார் அட்டையை "எம்ஆதார்" எனப்படும் ரியல்டைம் அப்ளிகேஷனை பயன்படுத்தி சரிபார்க்க வேண்டும் வேண்டும், அடையாள அட்டை சரிபார்ப்பு வழிமுறையை வலுப்படுத்துவது அவசியம் என்று அனைத்து ரெயில்வே மண்டலங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
தற்போது ரெயில் பயணத்தின்போது டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்பவர்கள் ஆதார் மட்டும் இன்றி ஏதேனும் ஒரு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை பரிசோதகர்களிடம் காண்பிக்கலாம். இனிவரும் நாட்களில் ரெயில் பயணத்தின் போது ஆதார் அட்டை கட்டாயம் ஆகும் என்று தெரிகிறது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து மதியழகன், சங்கரன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
- இதனையடுத்து 2 பேரிடம் இருந்து 17 விலை உயர்த்த செல்போன்கள் மீட்கப்பட்டன.
ஈரோடு:
ஈரோடு ரெயில்வே போலீசார் ஈரோடு ரெயில் நிலையத்தின் 1-வது பிளாட்பார்மில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது ஒருவர் சந்தேகத்துக்கிடமான வகையில் அங்கு இங்குமாக திரிந்து கொண்டிருந்தார். அவரை பிடித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, வாளவந்தி நாட்டை சேர்ந்த மதியழகன்(40) என்பது தெரிய வந்தது. மதியழகன் ரெயில் பயணிகளை குறிவைத்து செல்போன்களை திருடி வந்தது தெரிய வந்தது.
அவர் அளித்த தகவலின் பேரில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியை சேர்ந்த சங்கரன் (26) என்பவரை போலீசார் பிடித்தனர். இதனையடுத்து 2 பேரிடம் இருந்து 17 விலை உயர்த்த செல்போன்கள் மீட்கப்பட்டன.
இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து மதியழகன், சங்கரன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த–ப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
- ஒரு சில ரெயில்கள் மட்டுமே நின்று செல்கின்றன. இதனால் இங்கிருந்து செல்லும் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
- மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் திருச்செந்தூர், ராக்போர்ட் ரெயில்கள் நிற்க வேண்டும்.
மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் சென்னை மற்றும் புறநகர் பகுதிக்கு கல்லூரி மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் என சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.
இங்கிருந்து போதிய ரெயில்கள் இல்லை. ஒரு சில ரெயில்கள் மட்டுமே நின்று செல்கின்றன. இதனால் இங்கிருந்து செல்லும் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் திருச்செந்தூர், ராக்போர்ட் ரெயில்கள் நிற்க வேண்டும், சென்னையில் இருந்து செங்கல்பட்டு வரை வரும் யூனிட் ரெயிலை மேல்மருவத்தூர் வரை காலை மாலை இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை மதுராந்தகம் ரெயில் நிலையம் அருகே திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- ராம்புரம் கிராமம் அருகே என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தினார். ரெயில் நின்றவுடன் அதில் இருந்த பயணிகள் உயிர் பயத்தில் கீழே இறங்கி அலறியடித்து ஓடினர்.
- ரெயில் என்ஜின் டிரைவர் மற்றும் போலீசார் புகை வந்த ரெயில் பெட்டியை சோதனை செய்தனர்.
திருப்பதி:
நிஜாமுதீனிலிருந்து திருவனந்தபுரத்திற்கு சுவர்ண் ஜெயந்தி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.
இந்த ரெயில் வடமாநிலங்களில் இருந்து காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக திருவனந்தபுரம் செல்கிறது. நிஜாமுதீனிலிருந்து நேற்று புறப்பட்டு வந்தது.
ரெயிலில் ஏராளமான பயணிகள் இருந்தனர். ரெயில் தெலுங்கான மாநிலம் குன்றத்திமடுகு அருகே வந்தபோது, பி-2 ஏசி பெட்டியில் திடீரென புகை வந்தது. இதனை கண்ட பயணி ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தார்.
ராம்புரம் கிராமம் அருகே என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தினார். ரெயில் நின்றவுடன் அதில் இருந்த பயணிகள் உயிர் பயத்தில் கீழே இறங்கி அலறியடித்து ஓடினர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.இதையடுத்து ரெயில் என்ஜின் டிரைவர் மற்றும் போலீசார் புகை வந்த ரெயில் பெட்டியை சோதனை செய்தனர். அப்போது மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. தீயை அணைத்து தற்கலிகமாக சரி செய்யப்பட்டது. பின்னர் ராம்புரத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டோர்னக்கல் ரெயில் நிலையத்தில் 40 நிமிடம் ரெயில் நிறுத்தப்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட பெட்டியை ரெயிலிலிருந்து கழட்டிய பின், ரெயில் புறப்பட்டு சென்றது.
ரெயில் பெட்டியில் புகை வந்தவுடன் பயணி அபாய சங்கலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக தெரிவித்தனர்.
- கால்வாய்கள் தூர்வாரப்படவில்லை என்பது தவறான தகவல்.
- ரெயிலில் சிக்கியுள்ள பயணிகளை மீட்போம்.
தென் தமிழகத்தை புரட்டிப்போட்ட கனமழையால் ரெயிலில் சுமார் 500 பயணிகள் சிக்கி தவித்து வருகின்றனர். நேற்றிரவு 8.40 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி பயணிகளுடன் ரெயில் கிளம்பியது.
சுமார் 21 மணி நேரத்தை கடந்தும் நகர முடியாத நிலையில் ரெயிலுக்குள் பயணிகள் தவித்து வருகின்றனர்.
தண்டவாளம் முழுவதும் நீரில் மூழ்கியதால் ரெயில் ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரில் மீட்க முயற்சி நடந்து வந்தாலும் வானிலை காரணமாக பயணிகளை மீட்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாளையங்கோட்டை சென்றிருந்தார். அங்கு, மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
பிறகு, செய்தியாளர்களை சந்தித்து பேசிய உதயநிதி ஸ்டாலின் மேலும் கூறியதாவது:-
கனமழையால் 30 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 50 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளுக்கு அருகில் பொது மக்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.
தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட இடங்களிலும் அமைச்சர்கள் ஆய்வு செய்வார்கள்.நெல்லையில் தூர்வாரப்பட்ட கால்வாய்கள், அதிக மழையால் நிரம்பி உள்ளது. கால்வாய்கள் தூர்வாரப்படவில்லை என்பது தவறான தகவல்.
மழை வெள்ள பாதிப்பு குறித்து கணக்கெடுத்து வருகிறோம். அதன் பிறகு, நிவாரணம் குறித்து முதலமைச்சர் அறிவிப்பார்.
ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் சிக்கி தவிக்கும் பயணிகளுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரெயிலில் சிக்கியுள்ள பயணிகளை விமான படை உதவியுடன் விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- Airshow நடந்த தினத்தன்று சுமார் 4 லட்சம் பயணிகள் பயணம்.
- அரசினர் தோட்டம் மெட்ரோ நிறுத்தத்தில் இருந்த 59,776 பேர் பயணித்துள்ளதாக மெட்ரே நிர்வாகம் அறிவிப்பு.
சென்னை மெட்ரோ ரெயிலில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 90.83 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
அதிகபட்சமாக Airshow நடந்த தினத்தன்று சுமார் 4 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
குறிப்பாக, அரசினர் தோட்டம் மெட்ரோ நிறுத்தத்தில் இருந்த 59,776 பேர் பயணித்துள்ளதாக மெட்ரே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 90,83,996 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு குறிப்பிடப்ட்டுள்ளது.
- இளைஞர், இளம்பெண் என எமர்ஜென்சி ஜன்னல் வழியாக அவர் ஏற்றிவிடுட்டு அவர்களின் லக்கேஜ்களையும் உள்ளே போடுகிறார்.
- இந்த வீடியோ 2.5 மில்லியன் பார்வைகளை கடந்து கமெண்ட் செக்ஷனே களேபரமாக காணப்படுகிறது.
மக்கள் வாழும் சமூகம், உயர் வகுப்பு, நடுத்த மற்றும் கீழ் வகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளதுபோல் ரெயில்களும் பணம் உள்ளவர் அல்லாதவர்களுக்கு என இரண்டு முகங்களை கொண்டு செயல்படுகிறது. அதிலும் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் அது கண்கூடாக வெளிப்படுகிறது.
ஏசியுடன் மெத்தையில் படுத்துத் தூங்கி கண் விழிக்கும்போது சேர வேண்டிய இடம் வந்ததும் இறங்கி செல்வது ஒரு முகம் என்றால் அடித்து பிடித்து உள்ளே ஏறி, இடம் கிடைக்காமல் லக்கேஜ் வைக்கும் கம்பிகளிலும், கதவில் தொத்தியபடியும், பயோ டாய்லட் பாத்ரூமுக்கு உள்ளேயும் என கூட்டத்தோடு கூட்டமாக புதைந்துக்கொண்டு எப்படியாவது ஊர் போய் சேர்ந்தால் போதும் என்ற வெகு மக்கள் பயணிக்கும் முன்பதிவில்லா UNRESERVED பெட்டிகள் மற்றோரு முகமாகும்.
இதற்கு மத்தியில் சமீப காலமாக வந்தே பாரத், ஏசி பெட்டிகள் அதிகரிப்பு என குறிப்பிட்டவர்களின் மீது மற்றும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அரசியல் ரீதியிலான விமர்சனம் எழுந்துள்ளது. ரெயிலில் கதவு வழியாக ஏற வழியில்லாமல் எமர்ஜென்சி ஜென்னல் வழியாக ஏறும் யுக்தி முன்பதிவில்லா பெட்டிகளில் சில துடுக்குத்தனமான நபர்களால் கையாளப்படும் ஒன்றாகும்.
அந்த யுக்தியை ரெயில் நிலையத்தில் லக்கேஜ் தூக்கும் போர்ட்டர் கூலி ஊழியர் ஒருவர் பயன்படுத்தி லக்கேஜ்களை தூக்குவதுபோல் முன்பதிவில்லா பெட்டியில் பயணிகளை அலேக்காக உள்ளே ஏற்றிவிடும் வீடியோ இணையவாசிகள் இடையே ஹிட் அடித்து வருகிறது.
சிகப்பு யூனிபார்முடன் இளைஞர், இளம்பெண் என எமர்ஜென்சி ஜன்னல் வழியாக அவர் ஏற்றிவிடுட்டு அவர்களின் லக்கேஜ்களையும் உள்ளே போடுவது வீடியோவில் பதிவாகி உள்ளது. எக்ஸ் தளத்தில் இந்த வீடியோ 2.5 மில்லியன் பார்வைகளை கடந்து கமெண்ட் செக்ஷனே களேபரமாக காணப்படுகிறது.
பிரபல பாலிவுட் படம் கூலி நம்பர் 1 படத்துடன் ஒப்பிட்டு இணையவாசிகள் தங்கள் கமெண்ட்களை அள்ளி இறைத்து வருகின்றனர். இந்த சம்பவம் எங்கு எப்போது நடந்தது என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் தினம் தினம் ரெயில் நிலையங்களில் நடந்துகொண்டுதான் இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே.
- கடந்த ஜனவரி 2020 முதல் ஜூலை 2022 வரை பயணிகள் மறதியால் விட்டுச் சென்ற நகை மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.35 லட்சத்து 18 ஆயிரம் ஆகும். இதில் பெரும்பாலான பொருட்கள் உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது
- 2021-ல் 60 செல்போன்கள், 6 மடிக்கணினிகள், 75 ஆயிரம் மதிப்பிலான நகைகள் மற்றும் 71 இதர பொருட்கள் என மொத்தம் ரூ.15 லட்சத்தில் 59 ஆயிரத்து 831 மதிப்புள்ள பொருட்களை தவற விட்டு சென்றிருக்கிறார்கள்.
திருச்சி
திருச்சி ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்டு 150 ெரயில் நிலையங்கள் உள்ளன. இந்த ெரயில் நிலையங்களில் உள்ள ஓய்வறைகள் மற்றும் ெரயில்களில் செல்போன்கள் மற்றும் உடமைகளை தொலைப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ெரயில்வே பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜனவரி 2020 முதல் ஜூலை 2022 வரை பயணிகள் மறதியால் விட்டுச் சென்ற நகை மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.35 லட்சத்து 18 ஆயிரம் ஆகும். இதில் பெரும்பாலான பொருட்கள் உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எலக்ட்ரானிக் பொருட்களை பொருத்தமட்டில் குறிப்பாக செல்போன்கள், சார்ஜர்கள் அதிகமாக உள்ளன. பயணிகள் ெரயில் பெட்டிக்கு உள்ளேயும், ெரயில் நிலையங்களிலும் சார்ஜ் ஏற்றிவிட்டு பின்னர் மறந்து ெரயிலில் ஏறி சென்று விடுகிறார்கள்.
இவ்வாறு செல்போன்களை தவறவிடுவது ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 2020-ல் 17 செல்போன்கள், இரண்டு மடிக்கணினிகள், ரூ.6 லட்சத்து 55 ஆயிரம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் இதர பொருட்கள் என மொத்தம் ரூ.9 லட்சத்து 33 ஆயிரத்து 768 மதிப்பெண் பொருட்களை பயணிகள் ெரயில்கள் மற்றும் ெரயில் நிலையங்களில் தொலைத்தனர். குறிப்பாக இந்த காலகட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக சிறப்பு ரெயில்கள் மட்டுமே இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் 2021-ல் 60 செல்போன்கள், 6 மடிக்கணினிகள், 75 ஆயிரம் மதிப்பிலான நகைகள் மற்றும் 71 இதர பொருட்கள் என மொத்தம் ரூ.15 லட்சத்தில் 59 ஆயிரத்து 831 மதிப்புள்ள பொருட்களை தவற விட்டு சென்றிருக்கிறார்கள்.
நடப்பாண்டில் ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை மட்டுமே 61 செல்போன்களை தொலைத்திருக்கிறார்கள். மேலும் 13 மடிக்கணினிகள், ரூ.2 லட்சத்தி 31 ஆயிரம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் 68, இதர பொருட்கள் என மொத்தம் ரூ.19 லட்சத்து 58 ஆயிரத்து 725 மதிப்புள்ள பொருட்களை பயணிகள் தொலைத்துள்ளனர்.
உரிய ஆவணங்களுடன் உரிமையாளர்கள் வராத பட்சத்தில் அந்த பொருட்கள் கமர்சியல் பிரிவில் ஒப்படைக்கப்பட்டு ஏலம் விடப்படுகிறது. இதுபற்றி ெரயில்வே அலுவலர் ஒருவர் கூறுகையில், ெரயிலில் ஏறும் பயணிகள் தங்களது உடமைகளை இருக்கைக்கு அடியில் தள்ளி விடுகிறார்கள். பின்னர் இறங்கும்போது அவசரத்தில் ஏதாவது ஒரு லக்கேஜை தவறவிட்டு இறங்கி செல்கிறார்கள். சில நேரங்களில் தவறவிடும் பையில் நகைகள் கூட இருக்கும்.
இதில் உரிய ஆவணங்கள், சரியான தகவல்கள் இருந்தால் மட்டுமே நகைகளை ெரயில்வே பாதுகாப்பு படையினர் ஒப்படைப்பார்கள். பயணிகள் தங்களது லக்கேஜ்களின் உள்பக்கமும் வெளிப்பக்கமும் முகவரியை எழுதி வைத்திருந்தால் எளிதாக அவர்களின் பொருள்களை திரும்ப பெற்றுச் செல்லலாம்.
இருப்பினும் 99 சதவீத பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ெரயில் நிலையங்களில் தங்கள் உடமைகளை தவறவிடும் நபர்கள் உடனடியாக 139 என்ற அவசர எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினால் ெரயில்வே நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும் என ெரயில்வே பாதுகாப்பு படை மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.







