என் மலர்
நீங்கள் தேடியது "குளிர்சாதன வசதி"
- நீண்ட தூர பயணிகளின் வசதிக்காக இந்த நவீன வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
- இலவச வை-பை, குடிநீர் வசதி, பாலூட்டும் அறை வசதிகள் உள்ளன.
தாம்பரம் ரெயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக கட்டண குளிர்சாதன காத்திருப்பு அறை திறக்கப்பட்டுள்ளது.
தென்னக ரெயில்வேயின் முக்கிய சந்திப்பாக விளங்கும் தாம்பரம் ரெயில் நிலையத்தில், நீண்ட தூர பயணிகளின் வசதிக்காக இந்த நவீன வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
இது, முழுமையாக குளிர்சாதனம் செய்யப்பட்ட நவீனமான உள் அலங்காரம் கொண்ட அறையாகும். சொகுசான சோபா செட்கள் மற்றும் சாய்வு இருக்கைகள் கொண்டவை. பெண்கள் மற்றும் ஆண்களுக்கென தனித்தனியான நவீன கழிப்பறை வசதிகள்.
மொபைல் சார்ஜிங் பாயிண்டுகள், இலவச வை-பை, குடிநீர் வசதி, பாலூட்டும் அறை வசதிகள் உள்ளன.
24 மணி நேரமும் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கட்டண ஏசி காத்திருப்பு அறைகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படுகிறது.
அதன்படி, ஒரு மணி நேரத்திற்கு தலா ரூ.35 வசூலிக்கப்படுகிறது. இதற்கு முன் கூட்டியே பதிவு செய்யத் தேவையில்லை. நேரடியாகச் சென்று கட்டணம் செலுத்திப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
உறுதி செய்யப்பட்ட அல்லது RAC டிக்கெட் வைத்துள்ள பயணிகள் தங்களது பயண வகுப்பு எதுவாக இருந்தாலும், இந்தக் கட்டணத்தைச் செலுத்தி இங்குக் காத்திருக்கலாம் என ரெயில்வே நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
- வாரத்தில் 7 நாட்களும் அதிகாலை 5.15 மணிக்கு கும்பகோணம் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
- பயணிகள் www.tnstc.in என்ற இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலம் மட்டுமே முன்பதிவு செய்து கொள்ளலாம்.
தஞ்சாவூா்:
பயணிகள் மற்றும் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு ஏற்ப தமிழக அரசு சார்பில் கும்பகோணத்தில் இருந்து புறப்பட்டு ஒரே நாளில் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள நவக்கிரக தலங்களுக்கு ஒரே பஸ்சில் பயணம் செய்து எந்த ஒரு சிரமமும் இன்றி மீண்டும் கும்பகோணம் பஸ் நிலையத்தை வந்தடையும் வகையில் நவக்கிரக சிறப்பு சுற்றுலா பஸ் இயக்கம் கடந்த மாதம் 24-ந் தேதி முதல் தொடங்கப்பட்டு தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றதையடுத்து வயதானவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளுக்கு இணங்க குளிர்சாதன வசதியுடன் (ஏ.சி.வசதி) கூடிய மேலும் கூடுதலாக ஒரு சிறப்பு சுற்றுலா பஸ் கும்பகோணம் போக்குவரத்து கழகம் சார்பில் வருகிற 25-ந் தேதி முதல் வாரத்தில் 7 நாட்களும் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இந்த பஸ்சில் நபர் ஒருவருக்கு ரூ.1350 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வாரத்தில் 7 நாட்களும் அதிகாலை 5.15 மணிக்கு கும்பகோணம் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு நவகிரக தலங்களுக்கு சென்று இரவு 8 மணியளவில் மீண்டும் கும்பகோணம் பஸ் நிலையம் வந்தடையும்.
எனவே, இந்த பஸ்சில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் www.tnstc.in என்ற இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலம் மட்டுமே முன்பதிவு செய்து பயணச்சீட்டை பெற்றுக்கொள்ள முடியும். நேரடியாக பஸ்சில் பயணச் சீட்டு பெற்றுக்கொள்ள முடியாது. மேற்கண்ட தகவல் கும்பகோணம் போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்க ப்பட்டுள்ளது.






