என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காத்திருப்பு அறை"

    • பெண்கள் மற்றும் ஆண்களுக்கென தனித்தனியான நவீன கழிப்பறை வசதிகள் உள்ளன.
    • டிநீர் வசதி, மொபைல் சார்ஜிங் பாயிண்டுகள், இலவச வைபை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இடம்பெற்றுள்ளன.

    தாம்பரம்:

    தாம்பரம் ரெயில் நிலையம் 3-வது முனையமாக மாறிய பிறகு இங்கு தினமும் 2 லட்சத்து 30 ஆயிரம் பயணிகள் வந்து செல்கிறார்கள். மேலும் ஆயிரக்கணக்கான பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மூலம் தென் மாவட்டங்கள் மற்றும் வட மாநிலங்களுக்கு செல்கின்றனர்.

    இதையடுத்து பயணிகள் வசதிக்காக தாம்பரம் ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

    இதில் ஒரு பகுதியாக குளிர்சாதன காத்திருப்பு அறை திறக்கப்பட்டுள்ளது. இந்த காத்திருப்பு அறையை தாம்பரம் ரெயில் நிலைய பொதுமேலாளர் முகமது அப்துல் ரகுமான் திறந்து வைத்தார்.

    தாம்பரம் ரெயில் நிலையத்தின் மேற்கு நுழைவு பகுதியில் இந்த குளிர்சாதன காத்திருப்பு அறை அமைந்துள்ளது. இந்த காத்திருப்பு அறை ரூ.20 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது. இதில் ஒரே நேரத்தில் 80 பேருக்கு போதுமான இருக்கை வசதிகள் உள்ளன.

    இதன் உட்புறத்தில் மிகவும் சொகுசான சோபா இருக்கை வசதி, சாய்வு நாற்காலிகள் மற்றும் பொருட்கள் வைப்பதற்கான ரேக்குகள் ஆகியவை உள்ளன. மேலும் இங்கு பாலூட்டும் அறை வசதியும் உள்ளது. பெண்கள் மற்றும் ஆண்களுக்கென தனித்தனியான நவீன கழிப்பறை வசதிகள் உள்ளன.

    மேலும் குடிநீர் வசதி, மொபைல் சார்ஜிங் பாயிண்டுகள், இலவச வைபை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இடம்பெற்றுள்ளன. ரெயில் விவரங்களை காட்டும் டிஜிட்டல் காட்சி பலகை மற்றும் பொது அறிவிப்பு அமைப்பு ஆகிய வசதிகளும் உள்ளன. இந்த காத்திருப்பு அறை 24 மணி நேரமும் இயங்கும்.

    இந்த அறைக்கு ஒரு மணி நேரத்துக்கான கட்டணம் 35 ரூபாய். 5 முதல் 12 வயதுள்ள குழந்தைகளுக்கு ரூ.20 கட்டணம் ஆகும். 5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு கட்டணம் இல்லை. இதற்கான 5 ஆண்டுகால உரிமம் தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

    தாம்பரம் ரெயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக குளிர்சாதன வசதி கொண்ட நவீன காத்திருப்போர் அறையை தொடங்கி உள்ளோம். இதுபோன்று தமிழகத்தில் பயணிகள் வருகை அதிகம் உள்ள 100-க்கும் மேற்பட்ட ரெயில் நிலையங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் பயணிகள் காத்திருப்பு அறைகள் அமைக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளோம்.

    உறுதி செய்யப்பட்ட டிக்கெட் அல்லது ஆர்.ஏ.சி. டிக்கெட் வைத்துள்ள பயணிகள் தங்களது பயண வகுப்பு எதுவாக இருந்தாலும், ரூ.35 கட்டணத்தை செலுத்தி இந்த அறையை பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு முன் கூட்டியே பதிவு செய்ய தேவையில்லை. நேரடியாக சென்று கட்டணம் செலுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • நீண்ட தூர பயணிகளின் வசதிக்காக இந்த நவீன வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
    • இலவச வை-பை, குடிநீர் வசதி, பாலூட்டும் அறை வசதிகள் உள்ளன.

    தாம்பரம் ரெயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக கட்டண குளிர்சாதன காத்திருப்பு அறை திறக்கப்பட்டுள்ளது.

    தென்னக ரெயில்வேயின் முக்கிய சந்திப்பாக விளங்கும் தாம்பரம் ரெயில் நிலையத்தில், நீண்ட தூர பயணிகளின் வசதிக்காக இந்த நவீன வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

    இது, முழுமையாக குளிர்சாதனம் செய்யப்பட்ட நவீனமான உள் அலங்காரம் கொண்ட அறையாகும். சொகுசான சோபா செட்கள் மற்றும் சாய்வு இருக்கைகள் கொண்டவை. பெண்கள் மற்றும் ஆண்களுக்கென தனித்தனியான நவீன கழிப்பறை வசதிகள்.

    மொபைல் சார்ஜிங் பாயிண்டுகள், இலவச வை-பை, குடிநீர் வசதி, பாலூட்டும் அறை வசதிகள் உள்ளன.

    24 மணி நேரமும் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கட்டண ஏசி காத்திருப்பு அறைகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படுகிறது.

    அதன்படி, ஒரு மணி நேரத்திற்கு தலா ரூ.35 வசூலிக்கப்படுகிறது. இதற்கு முன் கூட்டியே பதிவு செய்யத் தேவையில்லை. நேரடியாகச் சென்று கட்டணம் செலுத்திப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    உறுதி செய்யப்பட்ட அல்லது RAC டிக்கெட் வைத்துள்ள பயணிகள் தங்களது பயண வகுப்பு எதுவாக இருந்தாலும், இந்தக் கட்டணத்தைச் செலுத்தி இங்குக் காத்திருக்கலாம் என ரெயில்வே நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிராவின் பால்கர் ரெயில்வே நிலைய காத்திருப்பு அறையில் கர்ப்பிணி பெண் இரட்டை குழந்தையை பெற்றெடுத்தார். #PalgharRailwayStation #Twins
    மும்பை:

    மகாரஷ்டிரா மாநிலத்தின் டஹானு நகர் நோக்கி சாயா சவ்ரா என்ற நிறைமாத கர்ப்பிணி தனது கணவர் மற்றும் மாமியாருடன் புறநகர் ரெயிலில் சென்று கொண்டிருந்தார்.

    ரெயில் பால்கர் ரெயில் நிலையத்தை நெருங்கியபோது சவ்ராவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, பால்கர் ரெயில் நிலையத்தில் சவ்ரா இறக்கப்பட்டார். அங்குள்ள காத்திருப்பு அறையில் அவர் தங்க வைக்கப்பட்டார். உடனடியாக வரவழைக்கப்பட்ட உள்ளூர் மருத்துவர்கள் உதவியுட சவ்ரா அழகான இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார்.

    அவருக்கு பிரசவம் பார்த்த டாக்டர்கள், தாயும், குழந்தைகளும் நலமாக உள்ளதாக தெரிவித்தனர். தொடர்ந்து, சவ்ரா உள்ளூர் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். #PalgharRailwayStation #Twins
    ×