என் மலர்
நீங்கள் தேடியது "Pregnant Lady"
- 5 மாத கர்ப்பிணி அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டதால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே ஆட்சிபுரத்தை சேர்ந்தவர் அழகுமுருகன். இவர் மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் டிரைவராக உள்ளார். இவரது மனைவி ராஜலட்சுமி(32). இவர்களுக்கு 2 பெண்குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது மீண்டும் ராஜலட்சுமி 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டதால் மனஉளைச்சலில் இருந்து வந்தார்.
இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைபார்த்ததும் அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின்பேரில் நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
2 பெண்குழந்தைகளை தவிக்கவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- தாய் மற்றும் குழந்தையை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர் .
- ஆம்புலன்சிலேயே பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
திருப்பூர் :
திருப்பூர் கொங்கு மெயின் ரோடு கொடிகம்பம் பகுதியை சேர்ந்தவர் ஏசுதாஸ். இவரது மனைவி சித்ரா. கர்ப்பிணியான இவர் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல முடிவு செய்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.ஆம்புலன்ஸ் வந்ததும் கர்ப்பிணி சித்ராவை ஏற்றிக்கொண்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி நோக்கி ஆம்புலன்ஸ் வேகமாக சென்றது.
வலி அதிகமானதால் அவருக்கு ஆம்புலன்சிலேயே மருத்துவ உதவியாளர் ஈஸ்வரி சிகிச்சை அளித்தார். அப்போது ஓடும் ஆம்புலன்சிலேயே சித்ராவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
பின்னர் தாய் மற்றும் குழந்தையை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர் .அங்கு இருவரும் நலமுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஆம்புலன்சிலேயே பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
- தினமும் 30-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் பரிசோதனைக்காக வருகின்றனர்.
- காத்திருப்பு அறை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 15 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.
நெல்லை:
பேட்டையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு மகப்பேறு மருத்துவம் மற்றும் பொது மருத்துவம் பார்க்கப்படுகிறது. தினமும் 30-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் பரிசோதனைக்காக வருகின்றனர்.
இவர்கள் உட்காருவதற்காக மருத்துவமனையில் போதிய இடவசதி இல்லாத தால் வெயிலில் உட்கார்ந்து இருக்கும் சூழ்நிலை ஏற்படுவதாக அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கர்ப்பிணிகள் மற்றும் பிற நோயாளிகள் உட்காருவதற்காக ரூ.20 லட்சம் செலவில் காத்திருப்பு அறை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 15 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.
தொடர்ந்து அஸ்திவாரம் போடுவதற்காக பெரிய குழிகள் தோண்டப்பட்டன.ஆனால் குழிகள் தோண்டப்பட்டு அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. பணிகள் எதுவும் நடைபெறவில்லை.
இதனால் கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகள் மருத்துவ மனைக்கு பரிசோ தனைக்காக மருத்துவரை பார்க்க செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக பணிகளை தொடங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அருணாச்சல பிரதேச கவர்னராக பி.டி. மிஸ்ரா பதவி வகித்து வருகிறார். இவர் முன்னாள் ராணுவ அதிகாரி ஆவார். தவாங் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்து இருந்தார். அப்போது நிகழ்ச்சியில் ஒரு கர்ப்பிணி பெண் கலந்து கொண்டார். அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த அந்த தொகுதி எம்.எல்.ஏ ஒரு கர்ப்பிணி பெண் பிரசவ வலியால் துடிப்பதாகவும் அவரை அவசரமாக இடாநகர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று எம்.எல்.ஏ கூறியுள்ளார்.
இதனையடுத்து கவர்னர் மிஸ்ரா அந்த பெண்ணையும், அவரது கணவரையும் தனது ஹெலிகாப்டரில் அழைத்து கொண்டு இடாநகர் நோக்கி சென்றார். தன்னுடன் வந்த 2 அதிகாரிகளை தவாங்க் நகரில் தங்க உத்தரவிட்டார். அவர்களை அழைத்து சென்ற ஹெலிகாப்டர், தேஜ்பூரில் எரிபொருள் நிரப்ப தரையிறக்கப்பட்டது. எரிப்பொருள் நிரப்பிய பின்னர் ஹெலிகாப்டரில் திடீரென தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இந்த நிலையில் அந்த கர்ப்பிணி பெண்ணிற்கு பிரசவலி அதிகமானது. இதனையடுத்து தேஜ்பூர் விமானப்படை அதிகாரிகளை தொடர்பு கொண்ட கவர்னர் உடனடியாக விமானப்படை ஹெலிகாப்டரை வரவழைத்தார். நிறைமாத கர்பிணியான அந்த பெண்ணையும், கணவரையும் இடா நகருக்கு ஹெலிகாப்டரில் அனுப்பி வைத்தார்.
ஹெலிகாப்டர் தரையிறங்கும் முன்பாகவே ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அந்த பெண்ணிற்க்கு மருத்துவமனையில் அழகான குழந்தை பிறந்தது.
அந்த பெண்ணிற்கு உரிய சிகிச்சை பற்றி கேட்டறிந்த கவர்னர் குழந்தை பெற்ற பெண்ணிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். பிரசவ வேதனையில் துடித்த பெண்ணுக்கு தக்க சமயத்தில் உதவி செய்ய கவர்னருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. #ArunachalPradesh #Governor #BrigMishra






