ஓடும் ஆம்புலன்சிேலயே பெண்ணுக்கு குழந்தை பிறந்தது

தாய் மற்றும் குழந்தையை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர் .ஆம்புலன்சிலேயே பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
 பிறந்த குழந்தையுடன் மருத்துவ உதவியாளரை படத்தில் காணலாம்.
 பிறந்த குழந்தையுடன் மருத்துவ உதவியாளரை படத்தில் காணலாம்.
Published on

திருப்பூர் :

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு கொடிகம்பம் பகுதியை சேர்ந்தவர் ஏசுதாஸ். இவரது மனைவி சித்ரா. கர்ப்பிணியான இவர் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் இன்று காலை அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல முடிவு செய்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.ஆம்புலன்ஸ் வந்ததும் கர்ப்பிணி சித்ராவை ஏற்றிக்கொண்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி நோக்கி ஆம்புலன்ஸ் வேகமாக சென்றது.

வலி அதிகமானதால் அவருக்கு ஆம்புலன்சிலேயே மருத்துவ உதவியாளர் ஈஸ்வரி சிகிச்சை அளித்தார். அப்போது ஓடும் ஆம்புலன்சிலேயே சித்ராவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

பின்னர் தாய் மற்றும் குழந்தையை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர் .அங்கு இருவரும் நலமுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஆம்புலன்சிலேயே பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com