நிலக்கோட்டை அருகே 5 மாத கர்ப்பிணி தற்கொலை

5 மாத கர்ப்பிணி அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டதால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார்.போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை அருகே ஆட்சிபுரத்தை சேர்ந்தவர் அழகுமுருகன். இவர் மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் டிரைவராக உள்ளார். இவரது மனைவி ராஜலட்சுமி(32). இவர்களுக்கு 2 பெண்குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது மீண்டும் ராஜலட்சுமி 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டதால் மனஉளைச்சலில் இருந்து வந்தார்.

இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைபார்த்ததும் அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின்பேரில் நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

2 பெண்குழந்தைகளை தவிக்கவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com