search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Waiting Hall"

    • கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பயணிகளுக்கான குளிரூட்டப்பட்ட காத்திருப்பார் அறை மூடப்பட்டிருந்தது.
    • இதையடுத்து குளிரூட்டப்பட்ட பயணிகள் காத்திருப்போர் அறை புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் ெரயிலுக்காக காத்திருப்போருக்கு சாதாரண அறை மற்றும் குளிரூட்டப்பட்ட காத்திருப்போர் அறை ஆகியவை உள்ளன.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பயணிகளுக்கான குளிரூட்டப்பட்ட காத்திருப்பார் அறை மூடப்பட்டிருந்தது.

    தற்போது கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து விட்டதால் அதனை திறக்க கோரி ெரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து குளிரூட்டப்பட்ட பயணிகள் காத்திருப்போர் அறை புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது.

    நெல்லை சந்திப்பு ரெயில் நிலைய மேலாளர் முருகேசன் முன்னிலையில் கூடங்குளம் மின்வாரிய ஓய்வு பெற்ற அதிகாரி முத்தையா திறந்து வைத்தார்.

    இதில் துணை மேலாளர் வெங்கடேசன், வணிக ஆய்வாளர் ஜெயக்குமார், ஒப்பந்ததாரர் பாலசுப்பிரமணியன், முன்னாள் ராணுவ வீரர் பரமசிவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • தினமும் 30-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் பரிசோதனைக்காக வருகின்றனர்.
    • காத்திருப்பு அறை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 15 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.

    நெல்லை:

    பேட்டையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு மகப்பேறு மருத்துவம் மற்றும் பொது மருத்துவம் பார்க்கப்படுகிறது. தினமும் 30-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் பரிசோதனைக்காக வருகின்றனர்.

    இவர்கள் உட்காருவதற்காக மருத்துவமனையில் போதிய இடவசதி இல்லாத தால் வெயிலில் உட்கார்ந்து இருக்கும் சூழ்நிலை ஏற்படுவதாக அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    கர்ப்பிணிகள் மற்றும் பிற நோயாளிகள் உட்காருவதற்காக ரூ.20 லட்சம் செலவில் காத்திருப்பு அறை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 15 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.

    தொடர்ந்து அஸ்திவாரம் போடுவதற்காக பெரிய குழிகள் தோண்டப்பட்டன.ஆனால் குழிகள் தோண்டப்பட்டு அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. பணிகள் எதுவும் நடைபெறவில்லை.

    இதனால் கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகள் மருத்துவ மனைக்கு பரிசோ தனைக்காக மருத்துவரை பார்க்க செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக பணிகளை தொடங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×