என் மலர்

  நீங்கள் தேடியது "open"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பயணிகளுக்கான குளிரூட்டப்பட்ட காத்திருப்பார் அறை மூடப்பட்டிருந்தது.
  • இதையடுத்து குளிரூட்டப்பட்ட பயணிகள் காத்திருப்போர் அறை புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது.

  நெல்லை:

  நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் ெரயிலுக்காக காத்திருப்போருக்கு சாதாரண அறை மற்றும் குளிரூட்டப்பட்ட காத்திருப்போர் அறை ஆகியவை உள்ளன.

  கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பயணிகளுக்கான குளிரூட்டப்பட்ட காத்திருப்பார் அறை மூடப்பட்டிருந்தது.

  தற்போது கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து விட்டதால் அதனை திறக்க கோரி ெரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து குளிரூட்டப்பட்ட பயணிகள் காத்திருப்போர் அறை புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது.

  நெல்லை சந்திப்பு ரெயில் நிலைய மேலாளர் முருகேசன் முன்னிலையில் கூடங்குளம் மின்வாரிய ஓய்வு பெற்ற அதிகாரி முத்தையா திறந்து வைத்தார்.

  இதில் துணை மேலாளர் வெங்கடேசன், வணிக ஆய்வாளர் ஜெயக்குமார், ஒப்பந்ததாரர் பாலசுப்பிரமணியன், முன்னாள் ராணுவ வீரர் பரமசிவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருப்பத்தூரில் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் திறக்கப்பட்டது.
  • மாவட்ட நீதிபதி சுமதி சாய் பிரியா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

  திருப்பத்தூர்

  சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இங்கு உரிமையியல் (சிவில்) வழக்குகள் ஏராளமாக தாக்கலாகி வந்தது.

  சிவில் வழக்குகளை தனியாக விசாரிக்க நீதிமன்றம் மற்றும் கூடுதல் நீதிபதிகள் இல்லாததால் வழக்குகளின் விசாரணை தாமதமாவதாக பொதுமக்களும் வக்கீல்களும் கூறி வந்தனா். எனவே உரிமையியல் வழக்குகளை விசாரிக்க தனியாக நீதிமன்றம் அமைக்க வேண்டும் என அரசுக்கு வக்கீல் சங்கத்தின் தலைவர் கணேசன், செயலாளர் முருகேசன், மற்றும் வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சென்னை ஐகோர்ட்டு, திருப்பத்தூரில் தனி நீதிபதியுடன் உரிமையியல் நீதிமன்றம் தொடங்க உத்தரவிட்டது.

  இதனையடுத்து திருப்பத்தூரில் உள்ள நீதிமன்ற வளாகத்தின் மேல் தளத்தில் புதிய உரிமையியல் நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட நீதிபதி சுமதி சாய் பிரியா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். கூடுதல் மாவட்ட நீதிபதி சத்யதாரா, திருப்பத்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் மும்தாஜ், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், வழக்கறிஞர் சங்கத் தலைவர் கணேசன், ரவி உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனா்.

  வழக்கறிஞர்கள் சங்க தலைவர் கணேசன் வரவேற்றார். தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஜி.சுதாகர், காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை, இளையான்குடி குற்றவியல் நடுவர் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதிகள், காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆத்மநாபன், அரசு வழக்கறிஞர்கள், திருப்பத்தூர் வழக்கறிஞர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குறிச்சான் பட்டியில் சென்று ரேஷன் பொருட்களை வாங்கி வந்தனர்.
  • முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் இதனால் பெரிதும் அவதி அடைந்தனர்.

  சுரண்டை:

  வீ.கே.புதூர் தாலுகா குறிச்சான்பட்டி பஞ்சாயத் தில் அமைந்த கரையாளனூர் பொது மக்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குறிச்சான் பட்டியில் சென்று ரேஷன் பொருட்களை வாங்கி வந்தனர். முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் இதனால் பெரிதும் அவதி அடைந்தனர்.

  இதுகுறித்து பழனி நாடார் எம்.எல்.ஏ. மற்றும் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இருவரின் முயற்சியின் பேரில், கரையாளனூரில் வியாழக்கிழமை தோறும் பகுதி நேர ரேஷன் கடை இயங்க அரசு அனுமதி அளித்து, அதற்கான தொடக்க விழா நடந்தது.


  தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட காங்கிரஸ் பொருளாளரும், ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலருமான முரளிராஜா, ஆலங்குளம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் அன்பழகன், ஒன்றிய குழு தலைவர் திவ்யா மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர் வீராணம் ஷேக் முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். குறிச்சான் பட்டி பஞ்சாயத்து தலைவர் மகர ஜோதி சரவணன் வரவேற்றார். தொடர்ந்து கரையாளனூர் கிராமத்தில் புதிய பகுதி நேர ரேஷன் கடையை பழனிநாடார் எம்.எல்ஏ. திறந்து வைத்து பொருட்களை வழங்கினார்.

  பகுதிநேர ரேஷன் கடை அமைக்க, கடை வழங்கிய கரையாளனூர் சண்முக வேலுவிற்கு அனைவரும் பொது மக்களின் சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டனர்.தொடர்ந்து பொது மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன.

  நிகழ்ச்சியில் கரையா ளனூர் முருகன்,வக்கீல் ராமச் சந்திரன், குறிச்சான்பட்டி தி.மு.க. செயலாளர் துரைசாமி, விவசாய அணி ஜெயராஜ், இளைஞர் அணி திருமலைக்குமார், காங்கிரஸ் நிர்வாகிகள் பால் என்ற சண்முகவேல், பிரபாகர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கரையாளனூர் சண்முகவேலு செய்து இருந்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கோடை விடுமுறைக்கு பின்னர் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.
  • மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் பூங்கொத்து, இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர்.

  ராமநாதபுரம்

  தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி வகுப்புகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவ-மாணவிகள் படித்து வந்தனர். அதன்பின்னர் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த ஆண்டு சில மாதங்கள் மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றது.

  கடந்த மே மாதம் 14-ந் தேதி தேர்வுகள் முடிந்து மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. விடுமுைற முடிந்து இன்று (13-ந் தேதி) பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டன. மேலும் மாணவ-மாணவிகள் அமரும் பெஞ்சுகள் மற்றும் டெஸ்க் பழுது பார்க்கும் பணியும் நடைபெற்றது.

  இந்த நிலையில் 2022-23 கல்வியாண்டு இன்று தொடங்கியுள்ளது. அதன்படி 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் மாணவ-மாணவிகள் சேர்க்கையும் நடைபெற்றது.

  இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதையொட்டி மாணவ-மாணவிகள் புத்தகபையை சுமந்து கொண்டு மகிழ்ச்சியுடன் பள்ளிகளுக்கு வந்தனர். மாணவர்களை மகிழ்விப்பதற்காக பல்வேறு பள்ளிகளில் வாழை மற்றும் பலூன் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன.

  நுழைவாயிலில் மலர் அலங்காரங்களும் செய்யப்பட்டிருந்தன. பள்ளிகளில் நுழைந்த மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள், ஆசிரியைகள் இனிப்பு மற்றும் பூங்கொத்து கொடுத்து இன்முகத்துடன் வரவேற்றனர். மாணவ-மாணவிகளும் மகிழ்ச்சியுடன் அவரவர் வகுப்புகளுக்கு சென்றனர்.

  ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,531 பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வருவதற்கு முன்பு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பள்ளிகளுக்கு வந்த மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் பூங்கொத்து, இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர்.

  இதேபோல் சிவகங்கை மாவட்டங்களிலும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. இதையொட்டி மாணவ-மாணவிகள் சீருடை அணிந்து வருகை தந்தனர். அவர்களை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

  1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளை பெற்றோர்கள் அழைத்து வந்தனர். மேலும் தனியார் பள்ளி வாகனங்களிலும் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்கு வருகை தந்தனர். பஸ் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் ஏராளமான மாணவ-மாணவிகள் வருகை தந்தனர்.

  இருசக்கர வாகனங்களிலும் மற்றும் சைக்கிள்களிலும் சில மாணவ-மாணவிகள் வந்தனர். அவர்கள் இன்று மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். முதல் நாளான இன்று மாணவ- மாணவிகளுக்கு நன்னெறி மற்றும் புத்துணர்வு பயிற்சி அளிக்கப்பட்டன.

  இதனால் மாணவ-மாணவிகள் வகுப்றைகளில் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். பல்வேறு பள்ளிகளில் பாடபுத்தகங்களும் வழங்கப்பட்டன. இன்று பள்ளிகள் தொடங்கியதை அடுத்து சாலைகளிலும் வாகன போக்குவரத்து அதிகளவில் காணப்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சட்டம், ஒழுங்கு பிரச்சினைக்காக அனைத்து வகை கடைகளும், இரவு 11 மணிக்கு மேல் மூடப்பட வேண்டும்.
  • பணி முடிந்துதாமதமாக வெளியேறும் தொழிலாளர், உணவு, சிற்றுண்டி கிடைக்காமல் அவதிப்பட்டனர்.

  திருப்பூர்,

  திருப்பூர் மாநகரம் சர்வதேச பின்னலாடை சந்தைகளில், அசைக்க முடியாத முக்கிய இடத்தில் இருக்கிறது. வந்தாரை வாழ வைக்கும் திருப்பூர் மாவட்டத்தில் 21 மாநிலங்களை சேர்ந்த 2.20 லட்சம் பேர் தொழில் நிமித்தமாக வசிப்பது, கொரோனா கால கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டது.

  தமிழகத்தின் 39 மாவட்டத்தை சேர்ந்த மக்களும் வசிக்கின்றனர்.தமிழகத்தின் தூங்கா நகரமாக இருப்பது மதுரை. தென்மாவட்டங்களை மாநிலத்தின் பிற மாவட்டங்களுடன் இணைக்கும் முக்கிய இடமாக இருப்பது மதுரை. பின்னலாடை ஏற்றுமதி வர்த்த்கமும், உள்நாட்டு பனியன் உற்பத்தியும் வேகமாக வளர்ச்சி பெற்ற போது திருப்பூர் நகரமும், தூங்கா நகரமாக மாறிக்கொண்டிருந்தது. ஊரடங்கு வந்த பிறகு, நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

  சட்டம், ஒழுங்கு பிரச்சினைக்காக அனைத்து வகை கடைகளும், இரவு 11 மணிக்கு மேல் மூடப்பட வேண்டும் என்பது போலீசாரின் உத்தரவு. அப்படியிருந்தும் 12 மணி வரை சில கடைகள் மறைமுகமாக இயங்கின. அதிகாலை, 4 மணிக்கு ஓட்டல், பேக்கரிகள் திறக்கப்படுகின்றன. இடையே நான்கு மணி நேரம் மட்டுமே மூடப்படுகிறது.திருப்பூரில் வசிக்கும் வெளி மாவட்ட தொழிலாளர், தற்காலிகமாக வாடகை அறையில் தங்கி, ஓட்டலில் சாப்பிடுகின்றனர்.

  பனியன் நிறுவனங்களில் 12 மணி வரை உற்பத்தி தொடர்ந்தால் அதுவரை பேக்கரி - டீ கடைகளின் தேவையும் இருக்கிறது. கடைகள் 11 மணிக்கு மூடப்படுவதால் பல வகையில் வெளிமாநில தொழிலாளர் பாதிக்கப்பட்டனர்.தமிழக அரசு மீண்டும் 24 மணி நேரமும் கடைகள் இயங்கலாம் என அனுமதி அளித்துள்ளது. தொழிலாளர் சமூக பாதுகாப்பு குறித்து தொழிலாளர் துறையும் விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் இத்தகைய அறிவிப்பு, தொழிலாளர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

  பணி முடிந்துதாமதமாக வெளியேறும் தொழிலாளர், உணவு, சிற்றுண்டி கிடைக்காமல் அவதிப்பட்டனர். அனைத்து கடைகளும்24 மணி நேரமும் திறந்திருக்கலாம் என அறிவிக்கப்பட்டாலும், ஓட்டல், சிற்றுண்டி விற்கும் தள்ளுவண்டிகள், நடமாடும் டீக்கடைகள், பேக்கரிகள் மட்டுமே அதிக அளவு திறந்திருக்க வாய்ப்புள்ளது.

  தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது, ஜவுளிக்கடைகளில் கூட்டம் அலைமோதும். பர்னிச்சர் கடைகளும் பரபரப்பாக காணப்படும். பூ மார்க்கெட், பழக்கடைகளும், பழமுதிர்நிலையங்களும் மூடப்படும் வரை கூட்டமாக இருக்கும். இனி இரவு முழுவதும் கடை இயங்கலாம் என்பதால், பண்டிகைகால நெருக்கடிகள் குறைய வாய்ப்புள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே உள்ள காந்தி பூங்கா மேம்படுத்தப்பட்டது. பின்னர் அதன் திறப்பு விழா நடைபெற்றது.
  புதுக்கோட்டை:

  புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே உள்ள காந்தி பூங்கா மேம்படுத்தப்பட்டது. பின்னர் அதன் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் வைரமுத்து முன்னிலை வகித்தார். இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு மேம்படுத்தப்பட்ட பூங்காவை திறந்து வைத்தார். பின்னர் அவர் பூங்காவில் அமைக்கப்பட்டு உள்ள உடற்பயிற்சி கருவிகளில் உடற்பயிற்சிகள் செய்தார். இதில் புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்பிரமணியன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  முன்னதாக புதுக்கோட்டை திருவப்பூர் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் கல்வி நிதியில் கட்டப்பட்டு உள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். இதில் மாவட்ட முதன்மை கல்விக் அதிகாரி வனஜா, மாவட்ட கல்வி அதிகாரி சாமி.சத்தியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து திருவப்பூரில் அமைக்கப்பட்டு உள்ள கால்நடை மருத்துவ கிளை நிலையத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்து பேசினார். இதில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 
  ×