search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் திறப்பு
    X

    கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் திறப்பு

    • திருப்பத்தூரில் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் திறக்கப்பட்டது.
    • மாவட்ட நீதிபதி சுமதி சாய் பிரியா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இங்கு உரிமையியல் (சிவில்) வழக்குகள் ஏராளமாக தாக்கலாகி வந்தது.

    சிவில் வழக்குகளை தனியாக விசாரிக்க நீதிமன்றம் மற்றும் கூடுதல் நீதிபதிகள் இல்லாததால் வழக்குகளின் விசாரணை தாமதமாவதாக பொதுமக்களும் வக்கீல்களும் கூறி வந்தனா். எனவே உரிமையியல் வழக்குகளை விசாரிக்க தனியாக நீதிமன்றம் அமைக்க வேண்டும் என அரசுக்கு வக்கீல் சங்கத்தின் தலைவர் கணேசன், செயலாளர் முருகேசன், மற்றும் வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சென்னை ஐகோர்ட்டு, திருப்பத்தூரில் தனி நீதிபதியுடன் உரிமையியல் நீதிமன்றம் தொடங்க உத்தரவிட்டது.

    இதனையடுத்து திருப்பத்தூரில் உள்ள நீதிமன்ற வளாகத்தின் மேல் தளத்தில் புதிய உரிமையியல் நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட நீதிபதி சுமதி சாய் பிரியா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். கூடுதல் மாவட்ட நீதிபதி சத்யதாரா, திருப்பத்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் மும்தாஜ், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், வழக்கறிஞர் சங்கத் தலைவர் கணேசன், ரவி உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனா்.

    வழக்கறிஞர்கள் சங்க தலைவர் கணேசன் வரவேற்றார். தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஜி.சுதாகர், காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை, இளையான்குடி குற்றவியல் நடுவர் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதிகள், காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆத்மநாபன், அரசு வழக்கறிஞர்கள், திருப்பத்தூர் வழக்கறிஞர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×