search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Ration"

  • பொது வினியோகத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தமிழ்நாடு அரசு படுதோல்விடைந்து விட்டது.
  • உளுத்தம் பருப்பு மீண்டும் நியாய விலைக்கடைகள் மூலம் வழங்கப்படும் என்று தேர்தலின் போது தி.மு.க. வாக்குறுதி அளித்தது.

  சென்னை:

  பா.ம.கா. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

  வெளிச்சந்தையில் துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றின் விலையேற்றத்தைத் தடுக்க வேண்டும், ஏழை மக்களுக்கு அவை கட்டுபடியாகும் விலையில் கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் தான் சிறப்பு பொதுவினியோகத் திட்டம் தொடங்கப்பட்டது.

  பருப்பு, பாமாயில் ஆகியவற்றை வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாகும் நிலையில், மக்களுக்கு அந்தப் பொருட்கள் இன்னும் வழங்கப்படாததன் மூலம் சிறப்பு பொது வினியோகத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தமிழ்நாடு அரசு படுதோல்விடைந்து விட்டது என்பது உறுதியாகியிருக்கிறது.


  தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், ஏற்கனவே நிறுத்தப்பட்ட உளுத்தம் பருப்பு மீண்டும் நியாய விலைக்கடைகள் மூலம் வழங்கப்படும் என்று தேர்தலின் போது தி.மு.க. வாக்குறுதி அளித்தது. ஆனால், இன்று வரை அந்தத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை.

  மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை உடனே வழங்க தமிழக அரசின் பொதுவழங்கல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.
  • அடுத்த மாதத்துடன் முடிவடையும் நிலையில் நீட்டிக்க மத்திய மந்திரி சபை ஒப்புதல்.

  கொரோனா வைரஸ் தொற்றின்போது நாடு தழுவிய ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போது ஏழை மக்கள் வாழ்வாதாரம் இன்றி சிரமப்பட்டார்கள்.

  இதனால் பிரதம மந்திரி கரிப் கல்யான் அன்ன யோஜனா என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, ஏழை மக்களுக்கு 5 கிலோ உணவு தானியம் வழங்கப்பட்டது. அதனோடு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கூடுதலாக ஐந்து கிலோ உணவு தானியங்கள் வழங்கப்பட்டது.

  கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் பிரதம மந்திரி கரிப் கல்யான் அன்ன யோஜனா திட்டம் பலமுறை நீட்டிப்பிற்குப்பின் முடிவடைந்தது. அதன்பின் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்கப்பட்டது.

  இந்த திட்டம் வருகிற டிசம்பர் 31-ந்தேதியுடன் முடிவடைகிறது.. இந்த நிலையில் தற்போது மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் ஐந்தாண்டு ஆண்டுகளுக்கு பயனாளிகளுக்கு வழங்கப்படும்.

  நேற்று பிரதமர் மந்திரி தலைமையில் மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது. அப்போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

  மேலும், கடந்த ஐந்தாண்டுக்கு 80 கோடி பயனாளிகளுக்கு மாதந்தோறும் 5 கிலோ உணவு தானியங்கள் வழங்க 11.8 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் எனத் தெரிவித்துள்ளார்.

  • ராமநாதபுரம் மாவட்டத்தில் 9 தாலுகாவில் ரேஷன் வினியோகம் குறித்த குறைதீர் முகாம் 14-ந் தேதி நடைபெறுகிறது.
  • நோய்வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகாரச்சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

  ராமநாதபுரம்

  தமிழக அரசின் ஆணைக் கிணங்க மாதந்தோறும் 2-வது சனிக்கிழமை மாவட் டத்தின் அனைத்து வட்டங் களிலும் ஒரு கிராமத்தில் சுழற்சி முறையில் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வரு கிறது. இந்த நிலையில் வருகிற 14-ந் தேதி கீழ்க்கா ணும் கிராமங்களில் குறை தீர் முகாம் நடத்தப்பட உள் ளது.

  ராமநாதபுரம் மாவட் டத்தில், ராமநாதபுரம் வட்டம் சக்கரக்கோட்டை கிராமம் (ரேசன்கடை), ராமேசுவரம் வட்டம் தங்கச்சிமடம் (ரேசன் கடை), திருவாடானை வட்டம் தோட்டா மங்களம் கிராமம் (ரேசன் கடை), பரமக்குடி வட்டம் விளத்தூர் கிராமம் (இ-சேவை மையக் கட்டி டம்) முதுகுளத்தூர் வட்டம் விளங்குளத்தூர் கிராமம் (ரேசன் கடை), கடலாடி வட்டம் மேலக்கிடாரம் கிராமம் (ஊராட்சிமன்ற பஞ்சாயத்து அலுவலகம்) கமுதி வட்டம் முஸ்டகுறிச்சி கிராமம்(ரேசன்கடை) கீழக்கரை வட்டம் - மல்லல் கிராமம் (ரேசன் கடை) ஆர்.எஸ்.மங்கலம் வட்டம் சாத் தனூர் கிராமம் (ரேசன் கடை) ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பம் செய்தல், குடும்ப அட்டைகளில் பிழைத்திருத்தம், புகைப் படம் பதிவேற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை நகல், குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப் படும். மேலும் ரேசன் கடை களில் பொருள்பெற வரு கை தர இயலாத மூத்த குடி மக்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட பயனாளி களுக்கு அங்கீகாரச்சான்று வழங்க நடவடிக்கை எடுக் கப்படும்.

  மேலும் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப் படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொது மக்கள் இம்முகாமில் தெரி வித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் படும். ராமநாதபுரம் மாவட் டத்திலுள்ள 9 வட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர் கள் எதிர் வரும் 14-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள இந்த குறைதீர் முகாமில் மனுக்களை அளித்து பயன் பெறலாம்.

  இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

  • தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.11.86 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது
  • நீலகிரி எம்.பி., ஆ.ராசா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்

  மேட்டுப்பாளையம்,

  மேட்டுப்பாளையம் அருகே வெள்ளியங்காடு ஊராட்சிக்குட்பட்ட சுண்டக்கரை பகுதியில் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. 240க்கும் மேற்பட்ட ரேஷன்கார்டுதாரர்கள் உள்ளனர். சுண்டக்கரை பகுதியில் உள்ள ரேஷன் கடை, வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. எனவே அதற்கு சொந்த கட்டிடம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

  நீலகிரி எம்.பி ஆ.ராசாவின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.11.86 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இதற்கான திறப்பு விழா நடந்தது. நீலகிரி எம்.பி., ஆ.ராசா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

  நிகழ்ச்சியில் தி.மு.க வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, தலைமைச்செயற்குழு உறுப்பினர்கள் டி.ஆர்.சண்முகசுந்தரம், அஷ்ரப்அலி, ஒன்றிய செயலாளர்கள் சுரேந்திரன், எஸ்.எம்.டி.கல்யாண சுந்தரம், மாவட்ட விவசாய அணி தலைவர் பத்திரசாமி, கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசு, மாவட்ட பிரதிநிதி மேடூர் கணேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார், ராமமூர்த்தி, வட்ட வழங்கல் அலுவலர் சங்கர்லால் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • நாமக்கல் மாவட்டத்தில் ரேசன் அரிசி கடத்தல் தொடர்பாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
  • 1,500 கிலோ ரேசன் அரிசி மற்றும் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

  நாமக்கல்:

  தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் ரேசன் அரிசி கடத்தல் தொடர்பாக போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் ரேசன் அரிசி கடத்தல் தொடர்பாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

  இந்த நிலையில் ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட ரஞ்சித்குமார் மற்றும் பன்னீர் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1,500 கிலோ ரேசன் அரிசி மற்றும் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

  இதுதொடர்பான வழக்கு நாமக்கல் 2-வது குற்றவியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கின் மீது தீர்ப்பளிக்கப்பட்டது.

  அந்த தீர்ப்பில் ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட இருவருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனை மற்றும் தலா ரூ. 500 அபராதம் விதித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

  • நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம், அமுதம் நியாய விலைக்கடையில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
  • கடைகள் சரியான நேரத்தில் திறக்கப்படுகிறதா என்றும், பொது விநியோக பொருட்கள் அனைத்தும் கிடைகிறதா என்றும் மாவட்ட கலெக்டர் கேட்டறிந்தார்.

  நாமக்கல்:

  நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம், அமுதம் நியாய விலைக்கடையில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொருட்களின் இருப்பு, விற்பனை செய்யப்பட்டது போக மீதமுள்ள இருப்பினை சரிபார்த்தார்.

  பின்னர் பொருட்கள் வாங்க வந்தவர்களிடம் கடைகள் சரியான நேரத்தில் திறக்கப்படுகிறதா என்றும், பொது விநியோக பொருட்கள் அனைத்தும் கிடைகிறதா என்றும் மாவட்ட கலெக்டர் கேட்டறிந்தார்.

  பின்னர், விற்பனையான பொருட்களின் தொகை விபரங்களை அதிநவீன விற்பனை முனைய கருவியினை (பாயிண்ட் சேல்ஸ் மிசின்) இயக்கி அதில் பதிவுகள் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்றும் சரிபார்த்தார்.

  மேலும், நியாய விலை கடையில் உள்ள குடோனில் இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி, சர்க்கரை, பருப்பு மூட்டைகளை நேரில் பார்வையிட்டு கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது சேந்தமங்கலம் வட்டாட்சியர் செந்தில், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

  • ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
  • வேறு எங்காவது ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என சோதனை நடத்தி வருகின்றனர்.

  தஞ்சாவூர்:,

  தஞ்சை மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

  இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த மதுக்கூர் அருகே கண்டியங்காடு பிள்ளையார் கோவில் அருகில் ஒரு பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது.

  அதன் பேரில் உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர்.

  அதில் 120 கிலோ ரேஷன் அரிசி, 500 கிலோ குருணை மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது.

  இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கியவர் அருகே உள்ள மதுக்கூர் அருகே உள்ள வேப்பங்குளத்தை சேர்ந்த செந்தில்குமார் (வயது 46) என்பது தெரிய வந்தது.

  இதனைத் தொடர்ந்து செந்தில்குமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

  மேலும் அவர் பதுக்கிய 620 கிலோ ரேஷன் அரிசி, குருணை மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

  தொடர்ந்து வேறு எங்காவது ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு ள்ளதா? என சோதனை நடத்தி வருகின்றனர். 

  • முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல் உள்ளிட்டவைகள் குறித்து பொதுமக்கள் மனு அளிக்கலாம்.
  • பயனாளர் உரிய ஆவணங்களை எடுத்து செல்ல வேண்டும்.

  நெல்லை:

  நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  நாளை (13-ந்தேதி) நடைபெறும் குறைதீர்க்கும் முகாமில் கீழ்க்கண்ட சேவைகளை மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். புதிதாக குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரி விண்ணப்பித்தல், குடும்ப அட்டையில் கைப்பேசி எண் பதிவு, மாற்றம் செய்தல், பொது விநியோக திட்ட கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்து புகார் அளித்தல், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார் அளித்தல். குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம் மற்றும் புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்க செல்லும் பயனாளர் உரிய ஆவணங்களுக்குரிய ஆதார் அட்டை, பிறப்பு, இறப்பு சான்று, குடியிருப்பு முகவரிக்கு ஆதாரமான ஆவணங்கள் ஆகியவற்றினை எடுத்து செல்ல வேண்டும். கைப்பேசி எண் பதிவு, மாற்றம் செய்வதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட கைபேசியினை கொண்டு செல்ல வேண்டும்.

  மேற்படி முகாம் மற்றும் பொது விநியோகத்திட்ட செயல்பாடுகள் குறித்த புகார்களுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக பொது விநியோகத்திட்ட கட்டுப்பாட்டு அறை எண். 9342471314-ல் தொடர்பு கொள்ளவும்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • எம்எல்ஏ ஸ்டாலின் குமார் திறந்து வைத்தார்.
  • பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று புதிய ரேஷன் கடை

  துறையூர்,

  திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட எட்டாவது வார்டு மற்றும் ஒன்பதாவது வார்டு பகுதி மக்கள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் ரேஷன் கடை மூலம் பொருட்கள் பெற்று வந்தனர். இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு சொந்தமாக புதிய ரேஷன் கடை அமைத்து தருமாறு துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமாரிடம் கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கையை ஏற்ற சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்து, கட்டிடப் பணிகள் முடிவுற்றது. இதனை தொடர்ந்து நேற்று புதிய ரேஷன் கடை திறக்கும் நிகழ்ச்சி சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதிய ரேஷன் கடையினை ரிப்பன் வெட்டி எம்எல்ஏ ஸ்டாலின் குமார் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் துறையூர் நகர்மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன், நகர்மன்ற துணைத் தலைவர் மெடிக்கல் முரளி, நகர்மன்ற உறுப்பினர்கள் இளையராஜா, சுதாகர், கார்த்திகேயன், மாவட்ட பிரதிநிதி மதியழகன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் கஸ்டம்ஸ் மகாலிங்கம், நகர துணை செயலாளர்கள் இளங்கோ, பிரபு, நகர இளைஞரணி அமைப்பாளர் சிலம்பரசன், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

  • காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெறும்.
  • பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் சார்ந்த கோரிக்கைகளை முகாம் வாயிலாக நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

  திருப்பூர் :

  திருப்பூர் மாவட்டத்தில், தாலுகா அளவிலான ரேஷன் குறைகேட்பு கூட்டம், நாளை 11ம் தேதி நடைபெற உள்ளது. மடத்துக்குளம் தாலுகா காரத்தொழுவு, மைவாடி நரசிங்காபுரம், உடுமலையில் தொட்டம்பட்டி, ஆகிய தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், குறைகேட்பு கூட்டம் நாளை, 11ம் தேதி நடைபெற உள்ளது.

  காலை 10:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை நடைபெறும் முகாமில், குடிமை பொருள் தாசில்தார்கள், வழங்கல் அலுவலர்கள், தனி வருவாய் ஆய்வாளர்கள் ரேஷன்கார்டுதாரர்களின் குறைகளை கேட்டறிய உள்ளனர்.

  ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், மொபைல் எண் பதிவு, மாற்றம் செய்தல், புது ரேஷன் கார்டு, நகல் அட்டை குறித்து பதிவு செய்தல், மின்னணு குடும்ப அட்டை சார்ந்த கோரிக்கைகளை முகாம் வாயிலாக நிவர்த்தி செய்து கொள்ளலாம், என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.