என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரெயிலில் கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
- சங்ககிரியில் இருந்து கேரளாவிற்கு ரெயிலில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தாசில்தார் ராஜேஷ்குமார் தலைமையில் அலுவலர்கள் நேற்று இரவு சங்ககிரி ரெயில் நிலையத்தில் சோதனை நடத்தினர்.
- ரேஷன் அரிசி கடத்த முயன்றவர்கள் அங்கிருந்து தலைமறைவாகினர். இதையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த 500 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சங்ககிரி:
சங்ககிரியில் இருந்து கேரளாவிற்கு ரெயிலில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தாசில்தார் ராஜேஷ்குமார் தலைமையில் அலுவலர்கள் நேற்று இரவு சங்ககிரி ரெயில் நிலையத்தில் சோதனை நடத்தினர். அப்போது ரெயில் நிலைய நடைமேடை பகுதியில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி இருப்பது தெரிந்தது. போலீசார் வருவதை பார்த்ததும் ரேஷன் அரிசி கடத்த முயன்றவர்கள் அங்கிருந்து தலைமறைவாகினர். இதையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த 500 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த ரேஷன்அரிசி மூட்டைகள் சங்ககிரி நுகர்பொருள் வாணிப கழக குடோனில் ஒப்படைக்கப்பட்டன. ரெயிலில் ரேஷன்அரிசி கடத்த முயன்ற சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






