என் மலர்tooltip icon

    இந்தியா

    பணக்கார நண்பர்களுடன் விலையுயர்ந்த காளான் சாப்பிடும் மோடி.. இலவச ரேஷனுக்கு அலைமோதும் மக்கள் - காங்கிரஸ்
    X

    பணக்கார நண்பர்களுடன் விலையுயர்ந்த காளான் சாப்பிடும் மோடி.. இலவச ரேஷனுக்கு அலைமோதும் மக்கள் - காங்கிரஸ்

    • மக்கள் ரேஷன் கடைகளில் அலைமோதும் வீடியோவை வெளியிட்டுள்ளது.
    • 100 கோடிக்கும் அதிகமான மக்கள் நிதி நெருக்கடியை எதிர்கொள்கின்றனர் என்பதை இது நிரூபிக்கிறது

    நாட்டு மக்கள் இலவச ரேஷனுக்காக வரிசையில் நின்று கஷ்டப்படும்போது, பிரதமர் நரேந்திர மோடியும் அவரது பணக்கார நண்பர்களும் விலையுயர்ந்த காளான்களை உண்பதாகக் காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.

    சத்தீஸ்கரில் மக்கள் ரேஷன் கடைகளில் அலைமோதும் வீடியோவை வெளியிட்டு காங்கிரஸ் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

    சத்தீஸ்கரின் காரியாபந்தில் உள்ள ஒரு ரேஷன் கடையின் வாயில் திறந்தவுடன், மக்கள் கூட்டம் உள்ளே நுழைய முண்டியடிக்கும் காட்சிகள் இந்த வீடியோவில் பதிவாகியுள்ளன. இது குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அனுராக் துவாரி என்பவர், "இவர்கள் நம் நாட்டு மக்கள். ஒரு நாளில் 20-22 பேருக்கு மட்டுமே ரேஷன் கிடைப்பதால், மூன்று மாத ரேஷனை ஒன்றாகப் பெற இவர்கள் வரிசையில் நிற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    இதை பகிர்ந்த காங்கிரஸ், "இன்றைய இந்தியாவில் பொதுமக்கள் இலவச ரேஷனுக்காகக் அலைமோதுகிறார்கள். 100 கோடிக்கும் அதிகமான மக்கள் நிதி நெருக்கடியை எதிர்கொள்கின்றனர் என்பதை இது நிரூபிக்கிறது" என்று தெரிவித்துள்ளது.

    முன்னதாக, இந்த ஆண்டு மார்ச் மாதம், மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி நாடாளுமன்றத்தில், பிரதமர் நரேந்திர மோடி 80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியங்களை வழங்குவதற்கான முயற்சியை மேற்கொண்டதாகவும், 'ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு' திட்டம் சாமானிய மக்களின் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×