என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வணிக நிறுவனம்"

    • நான்கு இந்துஜா சகோதரர்களில் இவர் இரண்டாமவர் ஆவார்.
    • தற்போது டாடா, பிர்லா, அம்பானி ஆகியோரின் குழுமங்களுடன் இந்துஜா குழுமமும் இந்தியாவின் முன்னணி வணிக குழுமங்களில் ஒன்றாக உள்ளது.

    இந்துஜா குழுமத்தின் தலைவரான கோபிசந்த் பி. இந்துஜா நேற்று லண்டனில் காலமானார். அவருக்கு வயது 85.

    இவர் 2023-ஆம் ஆண்டுதான் இந்துஜா குழுமத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார். நான்கு இந்துஜா சகோதரர்களில் இவர் இரண்டாமவர் ஆவார். மூத்த சகோதரரான ஸ்ரீசந்த் இந்துஜா 2023-ல் காலமானார்.

    இவர்களது தந்தை பரமானந்த் இந்துஜா இந்தியவின் மும்பை மற்றும் ஈரானின் தெஹ்ரான் இடையே வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மற்றும் இரும்புத் தாது ஆகியவற்றை ஏற்றுமதி செய்து விற்றதன் மூலம் வியாபார சாம்ராஜ்யத்தை உருவாக்கினார்.

    தற்போது டாடா, பிர்லா, அம்பானி ஆகியோரின் குழுமங்களுடன் இந்துஜா குழுமமும் இந்தியாவின் முன்னணி வணிக குழுமங்களில் ஒன்றாக உள்ளது.

    இந்துஜா சகோதரர்கள் 

     

    தற்போது ஆட்டோமொபைல், பேங்கிங், தொழில்நுட்பம்., ரியல் எஸ்டேட் உட்பட 11 துறைகளில் இக்குழுமம் வர்த்தகம் செய்கிறது.

    அசோக் லேலண்ட், இண்டஸ்இண்ட் வங்க, என்.எக்ஸ்.டி டிஜிட்டல் லிமிடெட் போன்றவை இக்குழுமத்தின் முக்கிய நிறுவனங்கள் ஆகும்.

    கோபிசந்த் இந்துஜா 1997-ல் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றார். சண்டே டைம்ஸின் 2025 பணக்காரர்கள் பட்டியலில், கோபிசந்த் இந்துஜாவின் குடும்பம் 32.3 பில்லியன் பவுண்டுகளுடன் பிரிட்டனின் பணக்காரக் குடும்பமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

    கோபிசந்த் இந்துஜாவுக்கு சுனிதா இந்துஜா என்ற மனைவியும் சஞ்சய் இந்துஜா, தீரஜ் இந்துஜா, ரீட்டா இந்துஜா ஆகிய பிள்ளைகளும் உள்ளனர்.

    • வணிக நிறுவனங்கள் 24 மணிநேரமும் திறந்து வைக்க அனுமதி அளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
    • மேற்கண்ட தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    தமிழக அரசு உத்தரவின்படி 24 மணி நேரமும் வாரத்தின் அனைத்து நாட்களும் திறந்து வைக்கும் நிறுவனங்கள் தங்களின் பணியாளர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை விடவும், அதன் விவரம் படிவம் 5-ல் வெளிக்காட்டி வைத்தும், பணியாளர்கள் வேலை நேரம் ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்குமிகாமலும், மிகைநேரம் பணி பார்க்கும் நேரத்தில் வேலை நேரம் 10 சதவீத மணி நேரத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

    வாரத்தில் மொத்தம் வேலை நேரம் 57 மணி நேரத்திற்கு மிகாமலும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் மேற்படி நிறுவனங்களில் பெண் பணியாளர்கள் இரவில் பணிபுரிய அவர்களின் சம்மத கடிதம் பெற்றும் அவர்களின்

    பாதுகாப்புக்குரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

    பெண் பணியாளரிடம் இருந்து பெறப்படும் புகார்களை விசாரணை செய்ய உள்ள விசாரணை கமிட்டி அமைத் தும் அவர்களை வேலை முடிந்தவுடன் வீட்டில் இறக்கிவிட போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும். அனுமதி இல்லை அனைத்து பணியாளர்க ளின் ஊதியம் மற்றும் மிகை ஊதியம் அனைத்தும் வங்கியில் மட்டுமே செலுத்தவேண் டும் என்றும் அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிபந்தனைகள் பின்பற்றாத 10 நபர்களுக்கு மேல் பணிபுரியும் நிறுவனங்கள் வாரத்தில் அனைத்து நாட் களும் 24 மணி நேரமும் கடைகளை திறந்து வைக்க அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் நிபந்தனைகளை மீறும் நிறுவனங்கள் மீது 1947-ம் வருட கடைகள் நிறுவனச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மேற்கண்ட தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்துள்ளார்.

    ×