சத்துணவு கூடங்கள் திறப்பு

உசிலம்பட்டி நாடார் சரசுவதி தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு கூடங்கள் திறப்பு நடந்தது. இதனை அய்யப்பன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
சத்துணவு கூடங்கள் திறப்பு
Published on

உசிலம்பட்டி

உசிலம்பட்டி நாடார் சரசுவதி தொடக்கப்பள்ளி, நாடார் சரசுவதி மேல்நிலைப் பள்ளியில் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்ட 2 சத்துணவு கூடங்களை அய்யப்பன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

தலைமை ஆசிரியர்கள் மதன்பிரபு, பரமசிவம் முன்னிலை வகித்தனர். ஓ.பி.எஸ். அணி அ.தி.மு.க. நிர்வாகிகள் சசிகுமார், பிரபு, உசிலம்பட்டி ஒன்றியம் ஜான்சன், செல்லம்பட்டி ஜெயக்குமார், போத்திராஜ், சேடப்பட்டி அய்யர் என்ற ராமகிருஷ்ணன், டி.கல்லுப்பட்டி கண்ணன், சரவணன் சவுந்தரபாண்டி, செல்வம், மீனவரணி ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com