search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "heavy flood"

    • கால்வாய்கள் தூர்வாரப்படவில்லை என்பது தவறான தகவல்.
    • ரெயிலில் சிக்கியுள்ள பயணிகளை மீட்போம்.

    தென் தமிழகத்தை புரட்டிப்போட்ட கனமழையால் ரெயிலில் சுமார் 500 பயணிகள் சிக்கி தவித்து வருகின்றனர். நேற்றிரவு 8.40 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி பயணிகளுடன் ரெயில் கிளம்பியது.

    சுமார் 21 மணி நேரத்தை கடந்தும் நகர முடியாத நிலையில் ரெயிலுக்குள் பயணிகள் தவித்து வருகின்றனர்.

    தண்டவாளம் முழுவதும் நீரில் மூழ்கியதால் ரெயில் ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரில் மீட்க முயற்சி நடந்து வந்தாலும் வானிலை காரணமாக பயணிகளை மீட்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாளையங்கோட்டை சென்றிருந்தார். அங்கு, மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

    பிறகு, செய்தியாளர்களை சந்தித்து பேசிய உதயநிதி ஸ்டாலின் மேலும் கூறியதாவது:-

    கனமழையால் 30 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 50 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.

    தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளுக்கு அருகில் பொது மக்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

    தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட இடங்களிலும் அமைச்சர்கள் ஆய்வு செய்வார்கள்.நெல்லையில் தூர்வாரப்பட்ட கால்வாய்கள், அதிக மழையால் நிரம்பி உள்ளது. கால்வாய்கள் தூர்வாரப்படவில்லை என்பது தவறான தகவல்.

    மழை வெள்ள பாதிப்பு குறித்து கணக்கெடுத்து வருகிறோம். அதன் பிறகு, நிவாரணம் குறித்து முதலமைச்சர் அறிவிப்பார்.

    ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் சிக்கி தவிக்கும் பயணிகளுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரெயிலில் சிக்கியுள்ள பயணிகளை விமான படை உதவியுடன் விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தல்.
    • இமாச்சலப் பிரதேசத்தில் இன்று முதல் கனமழையின் தீவிரம் குறைய வாய்ப்பு.

    வட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. குறிப்பாக இமாச்சல பிரதேசத்தில் பல மாவட்டங்கள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன.

    தொடர் மழை காரணமாக இமாச்சல பிரதேசத்தில் உள்ள முக்கிய ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இமாச்சல பிரதேசத்தின் பல மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், இமாச்சல பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா இடமான பர்வானூ என்ற பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மழை வெள்ளத்தில்அடித்து செல்லப்பட்டன. இதன் வீடியோ வைரலாகி பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

    கனமழையால் தெருக்கள் பொங்கி வழியும் நீர்வழிப்பாதைகளாக மாறிவிட்டன. பாலங்கள் அடித்துச் செல்லபட்டு, சாலைகள் செல்ல முடியாத நிலையில் உள்ளன.

    இதனால், அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

    நிலச்சரிவு மற்றும் பல இடங்களில் வெள்ளம் காரணமாக சண்டிகர் - மணாலி தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. சிம்லா-கின்னூர் சாலையும் சரிவுகள் மற்றும் பாறைகள் விழுவதால் வாகனப் போக்குவரத்து மூடப்பட்டுள்ளது.

    அரசு அறிக்கையின்படி, இழப்பு மதிப்பீடு நடந்து வருவதாகவும், அது ரூ.3,000-4000 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் முதல்வர் கூறினார்.

    இமாச்சலப் பிரதேசத்தில் இன்று முதல் கனமழையின் தீவிரம் குறைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    ×