என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய ரெயில்வே"

    • Watch Railway Cop Snatches Woman's Phone On Train To Teach Lesson Video Viral
    • போலீஸ் அதிகாரி என்பது தெரியவந்ததால் பெண் பெருமூச்சு.

    ரெயிலில் பயணம் செய்யும்போது, ரெயில்வே போலீசார் காவலுக்கு இருந்தாலும் பயணிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் சுதாகரிப்பாக இருக்க வேண்டும். எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஜன்னல் அருகே இருப்பவர்கள் தங்கச் செயின் அணிந்திருந்தால் கவனமாக இருக்க வேண்டும். செல்போனை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என ரெயில் அதிகாரிகள் வழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    இருந்தபோதிலும் சிலர் அஜாக்கிரதையாக இருக்கிறார்கள். அப்படி ஒரு பெண் அஜாக்கிரதையாக இருப்பதை கவனித்த ஆர்.பி.எஃப். அதிகாரி ரிது ராஜு சவுத்ரி என்பவர், ரியலாக பாடம் கற்பிக்க வரும்பினார்.

    அந்த பெண் போனில் மூழ்கியிருக்க, அதிகாரி ரிது அதை கவனித்து சற்றென்று பறித்துவிடுவார். இதனால் அந்த பெண் பயணி அதிர்ந்து வெளியில் பார்ப்பார்.

    அதன்பின் அந்த அதிகாரி அந்த பெண்ணிடம், கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்தார். இந்த வீடியோ வைரலாகி வெளியாகி, அதிகாரிக்கு பாராட்டு தெரிவித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • முன்பதிவு செய்த பின், தேதியை மாற்ற வேண்டுமென்றால், டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டும்.
    • டிக்கெட்டை ரத்து செய்வதற்கான தொகை பயணிகள் கட்டாயம் செலுத்த வேண்டிய நிலை தற்போது உள்ளது.

    ரெயில்களில் பயணம் செய்ய இந்திய மக்கள் 60 நாட்களுக்கு முன்னதாக டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். திடீரென பயணிகள் திட்டமிட்ட தேதியில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டால், டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இல்லை என்றால், பயணம் செய்ய முடியாத நிலை ஏற்படும். சில சமயங்களில் தவறுதலாக கூட தேதி மாற்றி டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

    இவர்கள் டிக்கெட் ரத்து செய்துதான், மாற்று தேதிக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும். வரும் ஜனவரியில் இருந்து, பயணிகள் டிக்கெட்டை ரத்து செய்யாமல் பயணத் தேதியை மாற்றிக் கொள்ளும் வசதியை இந்திய ரெயில்வே நிர்வாகம் அமல்படுத்த உள்ளது. இதை இந்திய ரெயில்வேத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

    எனினும், மாற்று தேதிக்கான டிக்கெட் உறுதி (Available) எனச் சொல்ல முடியாது. மாற்று தேதியில் டிக்கெட் இருந்தால் மட்டுமே மாற்ற முடியும். அத்துடன், மாற்று தேதிக்கான டிக்கெட் கட்டணம் கூடுதலாக இருந்தால், அந்த கூடுதல் தொகையை செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

    • மத்திய பிரதேச மாநிலத்தில் பாம்புடன் ஒருவர் ரெயிலில் ஏறியுள்ளார்.
    • திடீரென பாம்பை காட்டி பணம் வசூலிக்க தொடங்கியதால், பயணிகள பயத்தில் உறைந்தனர்.

    அகமதாபாத் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் மத்திய பிரதேச மாநிலம் வழியாக வந்துள்ளது. அப்போது மங்காலி (Mungaoli) என்ற ரெயில் நிலையத்தில் ஒருவர் ஏறியுள்ளார். ரெயில் புறப்பட்டதும், அவர் திடீரென மறைத்து வைத்திருந்த பாம்பை வெளியே எடுத்துள்ளார். இதனால் பயணிகள் பயத்தில் உறைந்துள்ளனர்.

    பாம்பை காட்டி பயணிகளிடம் பணம் கேட்டுள்ளார். அவர்களும் பயந்துபோய், பணம் கொடுத்துள்ளனர். இதை ஒரு பயணி வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வைரலான அதே நேரத்தில், பயணிகளை அச்சுறுத்தும் வகையில் நடந்த கொண்ட அந்த நபர் மீது ரெயில்வே கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக வீடியோ எடுத்த நபர், ரெயில்வேக்கும் புகார் அளித்துள்ளார். அதற்கு ரெயில்சேவா எக்ஸ் பக்கத்தில், ஆர்.பி.எஃப்.-க்கு உத்தரவிட மேலும், விரிவான விவரங்களை பகிரவும் எனவும் பதில் அளித்துள்ளது. அத்துடன் "உங்களுடைய பயண விவரங்கள் (PNR/ UTS no.) மற்றும் செல்போன் நம்பர் எங்களுக்கு தேவைப்படும். DM வழியாக முன்னுரிமை அளிக்கப்படும். உங்களுடைய புகாரை http://railmadad.indianrailways.gov.in இதன் மூலம் அனுப்பலாம் அல்லது விரைவாக தீர்வு பெற 139 நம்பருக்கு டயல் செய்யலாம்" எனத் தெரிவித்துள்ளது.

    • ரெயில் நிலையங்களில் விற்கும் தண்ணீர் பாட்டில் விலையை அதிரடியாக குறைத்து இந்தியன் ரெயில்வே அறிவித்துள்ளது.
    • 22.09.2025 முதல் நடைமுறைக்கு வர உள்ளதாகவும் இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.

    ரெயில் பயணங்களின் போது மக்களின் வசதிக்காக ரெயில் நிலையங்களிலும் ரெயில்களிலும் தண்ணீர் பாட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதில், ரெயில் நீர் பாட்டில் விலை ஒரு லிட்டருக்கு ரூ.15-க்கும் அரை லிட்டர் (500 ml) ரூ.10-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களில் விற்கும் தண்ணீர் பாட்டில் விலையை ரூ.1 குறைத்து இந்திய ரெயில்வே அறிவித்துள்ளது.

    அதன்படி ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ரெயில் நிலையங்களில் விற்கும் ரெயில் நீர் பாட்டில் மற்றும் மற்ற தண்ணீர் பாட்டில்கள் ஒரு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

    அதன்படி ஒரு லிட்டர் பாட்டில் விலை ரூ.15-ல் இருந்து ஒரு ரூபாய் குறைந்து ரூ. 14 -க்கும் அரை லிட்டர் (500 ml) பாட்டில் விலை ரூ.10-ல் இருந்து ரூ.9-க்கும் விற்கப்பட உள்ளது.

    மேலும் தண்ணீர் பாட்டில் விலையும் ஒரு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதுவும் ஒரு லிட்டர் பாட்டில் விலை ரூ.15-ல் இருந்து ஒரு ரூபாய் குறைந்து ரூ. 14 -க்கும் அரை லிட்டர் பாட்டில் விலை ரூ.10-ல் இருந்து ரூ.9-க்கும் விற்கப்பட உள்ளது.

    இது வரும் 22.09.2025 முதல் நடைமுறைக்கு வர உள்ளதாகவும் இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.

    • தனது 24 வயதில் இந்திய ரயில்வேயில் உதவி ஓட்டுநராக சுரேகா சேர்ந்தார்.
    • இன்று, இந்திய ரயில்வேயில் 1500 பெண் ஓட்டுநர்கள் உள்ளனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் சாத்தாரா மாவட்டத்தை சேர்தவர் சுரேகா யாதவ் (60 வயது)

    எலக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங்கில் டிப்ளமோ படிப்பை முடித்து, 1989 ஆம் ஆண்டு தனது 24 வயதில் இந்திய ரயில்வேயில் உதவி ஓட்டுநராக சுரேகா சேர்ந்தார்.

    இதன் மூலம் இந்தியாவில் மட்டுமின்றி ஆசியாவிலேயே ரெயில் ஓட்டுநராக நியமிக்கப்பட்ட முதல் பெண் என்ற பெருமையை சுரேகா யாதவ் பெற்றார்.

    இதன்பின் 1996 ஆம் ஆண்டு சரக்கு ரெயில் ஓட்டுநரான சுரேகா, 2000 ஆம் ஆண்டு முதல் பயணிகள் ரெயில்களை ஓட்டத் தொடங்கினார்.

    36 ஆண்டுகள் ரெயில்வேயில் பணியாற்றிய சுரேகா யாதவ் வரும் 30ம் தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறார்.

    ரெயில்வேயில் ஓட்டுநர்களாக மாறிய அனைத்து பெண்களுக்கும் சுரேகா யாதவின் வாழ்க்கை ஒரு வழிகாட்டியாக மாறியுள்ளது. இன்று, இந்திய ரயில்வேயில் 1500 பெண் ஓட்டுநர்கள் உள்ளனர்.

    பணியின் இறுதியாக பயணமாக மராட்டியத்தின் சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையத்தில் இருந்து தலைநகர் டெல்லியின் ஹச்ரத் நிஜாமுதின் ரெயில் நிலையம் இடையேயான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலை சுரேகா யாதவ் இயக்கினார்.

    அப்போது அவருக்கு ரெயில்வே சார்பில் பிரிவு உபசார நிகழ்ச்சி நடைபெற்றது. 

    • அக்டோபர் 13 முதல் 26ஆம் தேதி வரைக்குள் பயணம் செய்ய ரிட்டன் டிக்கெட் உடன் முன்பதிவு செய்தால் 20 சதவீதம் சலுகை .
    • நவம்பர் 17 ஆம் தேதி முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரைக்கும் இந்த சலுகை தொடரும்.

    இந்தியாவில் அக்டோபர் மாதம் முதல் தொடர்ந்து பண்டிகைகள் வந்து கொண்டிருக்கும். இதனால் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை பண்டிகை காலங்களாக கருதப்படும். இந்த காலக்கட்டத்தில் ஏராளமானோர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்புவார்கள்.

    ரெயில் பயணிகள் வசதி பெறும் வகையில், குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் ரிட்டன் பயணம் மேற்கொள்ளும் வகையில் டிக்கெட் எடுத்தால் அதற்கு (ரிட்டன் டிக்கெட்டிற்கு மட்டும்) 20 சதவீதம் சலுகை வழங்கப்படும் என ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளார்.

    அக்டோபர் 13 முதல் 26ஆம் தேதி வரைக்குள் பயணம் செய்ய ரிட்டன் டிக்கெட் உடன் முன்பதிவு செய்தால் 20 சதவீதம் சலுகை வழங்கப்படும். அதேபோல் நவம்பர் 17 ஆம் தேதி முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை ரிட்டன் டிக்கெட் உடன் முன்பதிவு செய்தால் 20 சதவீதம் சலுகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

    இதற்கான முன்வதி வருகிற 14ஆம் தேதி தொடங்கும். தற்போது உள்ள நடைமுறையின்படி 60 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்யும் வசதி என்ற அடிப்படையில் வருகிற 14ஆம் தேதி தொடங்குகிறது.

    வழக்கமான பயணத்திற்கான முன்பதிவு செய்யப்பட்ட பயணிகள் விவரம், ரெயிலில் எந்த மாற்றமும் இருக்க முடியாது. அட்வான்ஸ் ரிசர்வேசன் காலம் ரிட்டன் டிக்கெட் செய்வதற்காக 60 நாட்களுக்கு மேல் அவகாசம் வழங்கப்படாது. அந்த 60 நாட்களுக்குள் ரிட்டன் பயணமும் சேர்ந்தால் போன்று இருக்க வேண்டும்.

    • ரெயில் மணிக்கு சராசரியாக 40 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியதாகும்.
    • இந்த ரெயிலில் மொத்தம் 354 பெட்டிகள் உள்ளன. அவற்றை இயக்க 7 என்ஜின்கள் பயன்படுத்தப்பட்டன.

    கிழக்கு மத்திய ரெயில்வே நாட்டின் மிக நீளமான சரக்கு ரெயில் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் சோதனை ஓட்டம் நடத்தி புதிய சாதனை படைத்துள்ளது.

    இந்த ரெயிலுக்கு ருத்ராஸ்திரம் என்று பெயரிடப்பட்டுள்ளது. நாட்டின் மிக நீளமான ரெயில் செல்லும் வீடியோவை மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    டிடியு பிரிவில் உள்ள கஞ்ச் கவாஜா ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் சரக்கு ரெயில் புறப்பட்டது. இதன் நீளம் சுமார் 4½ கிலோமீட்டர்.

    இதுவரை இந்திய ரெயில்வே வரலாற்றில் இதுவே மிக நீளமான சரக்கு ரெயில் ஆகும்.

    கஞ்ச் கவாஜா ரெயில் நிலையத்தில் இருந்து கர்வா ரெயில் நிலையம் வரை மொத்தம் 200 கிலோமீட்டர் தூரத்தை ருத்ராஸ்திரம் ரெயில் 5 மணி நேரத்தில் கடந்ததாக கிழக்கு மத்திய ரெயில்வே ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    இந்த ரெயில் மணிக்கு சராசரியாக 40 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியதாகும்.

    இந்த ரெயிலில் மொத்தம் 354 பெட்டிகள் உள்ளன. அவற்றை இயக்க 7 என்ஜின்கள் பயன்படுத்தப்பட்டன.

    சரக்கு ரெயில்கள் தனித்தனியாக இயக்கப்பட்டால், அவை அனைத்திற்கும் 6 தனித்தனி வழித்தடங்கள் மற்றும் பணியாளர்களை ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கும்,

    ஆனால் ருத்ராஸ்திரம் அதிக பெட்டிகளுடன் இயக்கப்படுவது கணிசமான நேரத்தை மிச்சப்படுத்தி உள்ளது என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.



    • ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு 2 பைசா உயர்த்தப்பட உள்ளது.
    • இந்த கட்டண உயர்வு ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனக் கூறப்படுகிறது.

    இந்திய ரெயில்வே, ரெயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு 2 பைசாவும், சாதாரண வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு 1 பைசாவும் உயர்த்தப்பட உள்ளது.

    புறநகர் ரெயில்கள் மற்றும் 500 கிலோமீட்டருக்கு குறைவான தொலைவு பயணங்களுக்கு இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுகளுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், குறுகிய தூர பயணிகள் மற்றும் புறநகர் ரெயில் பயணிகள் இந்த உயர்வால் பாதிக்கப்பட மாட்டார்கள். இந்த கட்டண உயர்வு ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனக் கூறப்படுகிறது. 

    • நடப்பாண்டு சரக்கு ரெயில்கள் மூலம் ரூ.92,345 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
    • அக்டோபர் மாதத்தில் மட்டும் சரக்கு ரயில் வருவாய் 8% அதிகரிப்பு.

    மத்திய ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

    நடப்பாண்டு ஏப்ரல் மாதம் முதல், அக்டோபர் மாதம் வரையிலான 7 மாதக் காலகட்டத்தில், சரக்கு ரெயில்கள் மூலம் மொத்தம் 855.63 மெட்ரிக் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 786.2 மெட்ரிக் டன்னாக இது இருந்தது. இதனால், சரக்குகள் கையாளுதல் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 9% அதிகரித்துள்ளது.

    இதேபோல் நடப்பாண்டு அக்டோபர் மாதம் சரக்கு ரெயில்கள் மூலம் ஈட்டப்படும் வருவாய் ரூ.92,345 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு இதே அக்டோபர மாதம் வரை வருவாய் ரூ.78,921 கோடியாக இருந்தது. இதனால் சரக்கு ரெயில் வருவாய் 17% அதிகரித்துள்ளது.

    அதே போல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மட்டும் 117.34 மெட்ரிக் டன்னாக இருந்த சரக்குகள் கையாளுதல் இந்த அக்டோபர் மாதம் மட்டும் 118.94 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் அக்டோபர் மாதத்தில் மட்டும் சரக்கு ரயில் வருவாய் 8% அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பயணிகள் வருவாய் 61 சதவீதம் அதிகரித்து ரூ.63,300 கோடியை எட்டியுள்ளது.
    • ரெயில்வேயின் மூலதன முதலீடு ரூ.3,200 கோடியாக உயர்ந்துள்ளது.

    இந்திய ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

    2022-23 நிதியாண்டில் இந்திய ரெயில்வேக்கு ரூ2.40 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் கிட்டத்தட்ட ரூ.49,000 கோடி அதிகமாகும். கடந்த 2022-23-ம் ஆண்டில், சரக்கு வருவாய் ரூ. 1.62 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 15 சதவீதம் அதிகமாகும்.

    பயணிகள் வருவாய் 61 சதவீதம் அதிகரித்து ரூ.63,300 கோடியை எட்டியுள்ளது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஓய்வூதியச் செலவினங்களை இந்திய ரெயில்வேயால் சமாளிக்க முடிகிறது. வருவாய் மற்றும் செலவின மேலாண்மையை சரி செய்ததன் மூலம் ரெயில்வேயின் மூலதன முதலீடு ரூ.3,200 கோடியாக உயர்ந்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒடிசா ரெயில் விபத்து சம்பவம் ரெயில்வே துறையின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடந்துள்ளது.
    • உடனடியாக ரெயில்வே துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சந்திப்புக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திரியும் மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம், மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    பின்னர் கார்த்தி சிதம்பரம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒடிசா ரெயில் விபத்து சம்பவம் ரெயில்வே துறையின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடந்துள்ளது. ரெயில்வேயில் புதிய நியமனங்கள் செய்யப்படாமல் ஊழியர்கள் பற்றாக்குறையால் டெக்னிக்கல், பைலட் பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகளிலும் ஊழியர்கள் பணி செய்யும் நேரம் அதிகரித்துள்ளது.

    எனவே உடனடியாக ரெயில்வே துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் புல்லட் ரெயில் விட நினைக்கும் மத்திய அரசு முதலில் ரெயில்வே துறையில் ரெயில்களின் வேகம் அதிகரிப்புக்கு தகுந்தவாறு கட்டுமானங்களையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி இந்திய ரெயில்வேயின் தரத்தை உயர்த்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • ரெயில்களின் முழு ரேக்குகளும் எல்.எச்.பி. பெட்டிகளாக இருக்கும்.
    • ஜெர்மன் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட எல்.எச்.பி. பெட்டிகள், விபத்துக்குள்ளானால் உயிரிழப்பு வாய்ப்புகளை முழுமையாக குறைக்கிறது.

    புதுடெல்லி:

    பீகார், உத்தரபிரதேசம், ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், அசாம், அரியானா மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பலர் பிழைப்பு தேடி பெரு நகரங்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் ரெயில் பயணத்தையே விரும்புகின்றனர்.

    இவர்கள் வசதிக்காக குறைந்த கட்டணத்தில் சிறப்பு ரெயில்களை அறிமுகப்படுத்த இந்திய ரெயில்வே திட்டமிட்டு உள்ளது. தற்போது உள்ள ரெயில் கட்டணம் ஏழை, நடுத்தர மக்களுக்கு சற்று அதிகமானதாக கருதப்படுவதால் ரெயில் நிர்வாகம் இதுபற்றி ஆய்வு செய்தது.

    இதை தொடர்ந்து படுக்கை வசதிகளுடன் கூடிய பொதுப்பெட்டிகளுடன் புதிய ரெயில்கள் குறிப்பிட்ட மாநிலங்கள் மற்றும் பல்வேறு பெரு நகரங்களுக்கு இடையே அறிமுகப்படுத்தப்பட உள்ளது. எல்.ஹெச்.பி. பெட்டிகளுடன் உருவாக்கப்படும் இந்த ரெயில்களின் கட்டணமும் சிக்கனமாக இருக்கும். இந்த ரெயில்களின் முழு ரேக்குகளும் எல்.எச்.பி. பெட்டிகளாக இருக்கும்.

    ஜெர்மன் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட எல்.எச்.பி. பெட்டிகள், விபத்துக்குள்ளானால் உயிரிழப்பு வாய்ப்புகளை முழுமையாக குறைக்கிறது. இந்த சிறப்பு ரெயில்கள் ஓரிரு ஆண்டுகளில் அறிமுகப் படுத்தப்படும் என்று தெரிகிறது. இந்த ரெயில்களில் குறைந்தது 25 சிறப்பு பொது படுக்கை வசதி பெட்டிகள் இருக்கும் என்று இந்திய ரெயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ×