என் மலர்
இந்தியா

VIDEO: இந்திய ரெயில்வே புதிய சாதனை- 4½ கி.மீ. நீள சரக்கு ரெயில் அறிமுகம்
- ரெயில் மணிக்கு சராசரியாக 40 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியதாகும்.
- இந்த ரெயிலில் மொத்தம் 354 பெட்டிகள் உள்ளன. அவற்றை இயக்க 7 என்ஜின்கள் பயன்படுத்தப்பட்டன.
கிழக்கு மத்திய ரெயில்வே நாட்டின் மிக நீளமான சரக்கு ரெயில் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் சோதனை ஓட்டம் நடத்தி புதிய சாதனை படைத்துள்ளது.
இந்த ரெயிலுக்கு ருத்ராஸ்திரம் என்று பெயரிடப்பட்டுள்ளது. நாட்டின் மிக நீளமான ரெயில் செல்லும் வீடியோவை மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
டிடியு பிரிவில் உள்ள கஞ்ச் கவாஜா ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் சரக்கு ரெயில் புறப்பட்டது. இதன் நீளம் சுமார் 4½ கிலோமீட்டர்.
இதுவரை இந்திய ரெயில்வே வரலாற்றில் இதுவே மிக நீளமான சரக்கு ரெயில் ஆகும்.
கஞ்ச் கவாஜா ரெயில் நிலையத்தில் இருந்து கர்வா ரெயில் நிலையம் வரை மொத்தம் 200 கிலோமீட்டர் தூரத்தை ருத்ராஸ்திரம் ரெயில் 5 மணி நேரத்தில் கடந்ததாக கிழக்கு மத்திய ரெயில்வே ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த ரெயில் மணிக்கு சராசரியாக 40 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியதாகும்.
இந்த ரெயிலில் மொத்தம் 354 பெட்டிகள் உள்ளன. அவற்றை இயக்க 7 என்ஜின்கள் பயன்படுத்தப்பட்டன.
சரக்கு ரெயில்கள் தனித்தனியாக இயக்கப்பட்டால், அவை அனைத்திற்கும் 6 தனித்தனி வழித்தடங்கள் மற்றும் பணியாளர்களை ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கும்,
ஆனால் ருத்ராஸ்திரம் அதிக பெட்டிகளுடன் இயக்கப்படுவது கணிசமான நேரத்தை மிச்சப்படுத்தி உள்ளது என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.






