என் மலர்
நீங்கள் தேடியது "தண்ணீர் பாட்டில்"
- ரெயில் நிலையங்களில் விற்கும் தண்ணீர் பாட்டில் விலையை அதிரடியாக குறைத்து இந்தியன் ரெயில்வே அறிவித்துள்ளது.
- 22.09.2025 முதல் நடைமுறைக்கு வர உள்ளதாகவும் இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.
ரெயில் பயணங்களின் போது மக்களின் வசதிக்காக ரெயில் நிலையங்களிலும் ரெயில்களிலும் தண்ணீர் பாட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதில், ரெயில் நீர் பாட்டில் விலை ஒரு லிட்டருக்கு ரூ.15-க்கும் அரை லிட்டர் (500 ml) ரூ.10-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களில் விற்கும் தண்ணீர் பாட்டில் விலையை ரூ.1 குறைத்து இந்திய ரெயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ரெயில் நிலையங்களில் விற்கும் ரெயில் நீர் பாட்டில் மற்றும் மற்ற தண்ணீர் பாட்டில்கள் ஒரு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒரு லிட்டர் பாட்டில் விலை ரூ.15-ல் இருந்து ஒரு ரூபாய் குறைந்து ரூ. 14 -க்கும் அரை லிட்டர் (500 ml) பாட்டில் விலை ரூ.10-ல் இருந்து ரூ.9-க்கும் விற்கப்பட உள்ளது.
மேலும் தண்ணீர் பாட்டில் விலையும் ஒரு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதுவும் ஒரு லிட்டர் பாட்டில் விலை ரூ.15-ல் இருந்து ஒரு ரூபாய் குறைந்து ரூ. 14 -க்கும் அரை லிட்டர் பாட்டில் விலை ரூ.10-ல் இருந்து ரூ.9-க்கும் விற்கப்பட உள்ளது.
இது வரும் 22.09.2025 முதல் நடைமுறைக்கு வர உள்ளதாகவும் இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.
- மாவட்ட ஆட்சியருக்கு BISLERI தண்ணீர் பாட்டிலுக்கு பதிலாக BILSERI பாட்டிலை வழங்கிய உதவியாளர்
- போலி தயாரிப்புகள் எனக்கூறி சுமார் 2,600 BILSERI பாட்டில்கள் புல்டோசர் கொண்டு அழிப்பு
உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்ட ஆட்சியருக்கு BISLERI தண்ணீர் பாட்டிலுக்கு பதிலாக போலியான BILSERI பாட்டிலை அவரது உதவியாளர் வழங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாக்பத் மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்திற்கு சென்றபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது..
இதனையடுத்து, போலி தயாரிப்புகள் எனக்கூறி சுமார் 2,600 BILSERI பாட்டில்கள் புல்டோசர் கொண்டு அளித்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- வீட்டில் அடுப்பு பற்றவைக்க பாட்டிலில் வைக்கப்பட்டிருந்த டீசலை தண்ணீர் என நினைத்து குழந்தை மைதிலி குடித்தது.
- குழந்தை உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் குறிஞ்சிப்பாடி அருகே மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் வடலூர் நரிக்குறவர்கள் குடியிருப்பு பகுதியில், தண்ணீர் என நினைத்து பாட்டிலில் இருந்த டீசலைக் குடித்த ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடலூர் நரிக்குறவர் குடியிருப்பு பகுதியை சேரந்த சூர்யா- சினேகா தம்பதியின் 1.5 வயது குழந்தை மைதிலி.
வீட்டில் அடுப்பு பற்றவைக்க பாட்டிலில் வைக்கப்பட்டிருந்த டீசலை தண்ணீர் என நினைத்து குழந்தை மைதிலி குடித்தது.
குழந்தை உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் குறிஞ்சிப்பாடி அருகே மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டது.
மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தும் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
- மீண்டும் பயன்படுத்த முடியாத பிளாஸ்டிக்கை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ரெயில்வே தண்டவாளங்களை சுத்தமாக வைத்திருப்பது ரெயில்வேயின் பொறுப்பு.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் திருமண விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்த வேண்டாம் என்று கேரள ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.
பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்பான வழக்குகளில் கேரள ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச் கூறியிருப்பதாவது:-
திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்த வேண்டாம். அதற்கு பதிலாக கண்ணாடி தண்ணீர் பாட்டில்களை மாற்றி பயன்படுத்தலாம். மீண்டும் பயன்படுத்த முடியாத பிளாஸ்டிக்கை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் நிகழ்வுகளுக்கு பிளாஸ்டிக் பயன்படுத்த உரிமம் பெறுவது கட்டாயமாகும்.
ரெயில்வே தண்டவாளங்களை சுத்தமாக வைத்திருப்பது ரெயில்வேயின் பொறுப்பு. அவற்றில் கழிவுகள் கொட்டப்படுவதை அனுமதிக்கக்கூடாது. ரெயில் தண்டவாளங்களில் இருந்து கழிவுகளை முழுமையாக அகற்றுவதை ரெயில்வே துறை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு கேரள ஐகோர்ட்டு கூறியிருக்கிறது.
இந்த விவகாரத்தில் கேரள அரசு ஐகோர்ட்டில் கொடுத்துள்ள விளக்கத்தில், "நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் பயன்படுத்து வதற்கான உரிமங்களை வழங்கும் பொறுப்பு உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சிகளில் அரை லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்த தடை செய்யப் பட்டுள்ளது. மலைப்பாங்கான பகுதிகளில் பிளாஸ்டிக் தடை பரிசீலனையில் உள்ளது" என்று தெரிவித்துள்ளது.
- ரோட்டோரம் ஒரு தண்ணீர் பாட்டில் இருந்தது. அதனை பார்த்த அவர் அதனை எடுத்து குடித்தார்.
- திடீரென அவருக்கு தலை சுற்றல் ஏற்பட்டது. உடனே வசந்தியை அழைத்து தனக்கு உடல் நிலை முடியவில்லை என்றார்.
கோவை,
கோவை கிணத்துகடவை சேர்ந்தவர் வசந்தி (வயது 36). கூலி தொழிலாளி.
சம்பவத்தன்று இவர் தனது சித்தி மஞ்சுளா (48) என்பவருடன் சூலூர் பாப்பம்பட்டி பிரிவு பஸ் நிலையத்தில் விளம்பர நோட்டீசுகளை பொதுமக்களுக்கு விநியோகம் செய்து கொண்டு இருந்தார்.
அப்போது மஞ்சுளாவிற்கு தண்ணீர் தாகம் எடுத்தது. இதனால் தண்ணீர் கிடைக்குமா என அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தார். அங்கு ரோட்டோரம் ஒரு தண்ணீர் பாட்டில் இருந்தது. அதனை பார்த்த அவர் அதனை எடுத்து குடித்தார்.
பின்னர் தனது வேலையை செய்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவருக்கு தலை சுற்றல் ஏற்பட்டது. உடனே வசந்தியை அழைத்து தனக்கு உடல் நிலை முடியவில்லை என்றார்.
அவர் மஞ்சுளாவை அழைத்து கொண்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் அவர் குடித்த நீரில் விஷத்தன்மை இருந்தது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை அன்னூரை சேர்ந்தவர் நித்தியானந்தம் (30). டிரைவர். இவரது மனைவி கோகிலா (28). இவர்களுக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர்.
நித்தியானந்தத்திற்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கோகிலா கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பிரசவத்திற்கு தனது தாய் வீட்டுக்கு சென்றார்.
அதன் பின்னர் அவர் கணவர் வீட்டுக்கு மறுத்தார். இதனால் நித்தியானந்தம் மனவேதனையுடன் இருந்து வந்தார்.
சம்பவத்தன்று வாழ்க்கை யில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






