என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "OTT movies"

    லோகா இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோ படம் என்று கருதப்படுகிறது.

    மலையாள நாட்டுப்புற தொன்ம காதாபாத்திரமான 'கள்ளியங்காடு நீலி' ஐ இன்ஸ்பிரேஷனாக கொண்டு டொமினிக் அருண் ஃபேன்டசி-ஆக்ஷன் ஜானரில் இயக்கிய திரைப்படம் லோகா. இதுவே இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோ படம் என்று கருதப்படுகிறது.

    இந்த படத்தின் கல்யாணி பிரியதர்ஷன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நஸ்லேன், சாண்டி, சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். சாண்டியின் வில்லத்தனம் படத்திற்கு ஒரு புதிய சாயலை கொடுத்துள்ளது.

    ஓணம் பண்டிகையை ஒட்டி வெளியான இப்படம் உலகலவில் ரூ.300 கோடி வசூலை தாண்டி மலையாளத்தின் அதிக வசூல் படமாக மாறியது. இந்த படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாக உள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.

    இந்நிலையில், லோகா திரைப்படம் ஒடிடியில் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, லோகா திரைப்படம் வரும் 31ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    • ஓடிடியின் மூலம் பல தரப்பு மக்கள் படத்தை அவர்களின் சௌக்ரியத்தோடு பார்த்து வருகின்றனர்.
    • இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது என பார்க்கலாம்.

    வாரந்தோறும் பல திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன. மொழி வேறுபாடின்றி ஓடிடியின் மூலம் பல தரப்பு மக்கள் படத்தை அவர்களின் சௌக்ரியத்தோடு பார்த்து வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது என பார்க்கலாம்.

    "ஜின் தி பெட்"

    டி.ஆர்.பாலா இயக்கத்தில் முகேன் ராவ் நடித்துள்ள படம் 'ஜின் தி பெட்'. இதில் பவ்யா திரிகா, இமான் அண்ணாச்சி, பால சரவணன், வடிவுக்கரிசி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். திகில், ஆக்சன், நகைச்சுவை கலந்த இப்படம் நாளை சன் நெக்ஸ்ட் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

    "பிரின்ஸ் அண்ட் பேமிலி"

    பிண்டோ ஸ்டீபன் இயக்கத்தில் திலீப், ராணியா ராணா, தியான் ஸ்ரீனிவாசன், சித்திக் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'பிரின்ஸ் அண்ட் பேமிலி'. மலையாள நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் கடந்த மே 9ம் தேதி ரிலீஸ் ஆன நிலையில், தமிழ் டப்பிங்குடன் நாளை ஜீ 5 ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது.

    "கேரளா கிரைம் பைல்ஸ் சீசன் 2"

    அகமது கபீர் இயக்கியுள்ள மலையாள கிரைம் திரில்லர் வெப் தொடர் 'கேரளா கிரைம் பைல்ஸ்'. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. இதில் இந்திரன்ஸ், ஹரிஸ்ரீ அசோகன், நூரின் ஷெரீஃப், சஞ்சு சானிசென் மற்றும் ஜியோ பேபி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த தொடர் நாளை ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது.

    "டிடெக்டிவ் ஷெர்டில்"

    பாலிவுட்டில் ரவி சாப்ரியா இயக்கத்தில் தில்ஜித் தோசன்ஜ், சங்கி பாண்டே, டயானா பென்டி ஆகியோர் நடித்துள்ள படம் 'டிடெக்டிவ் ஷெர்டில்'. டிடெக்டிவ் ஷெர்டில் ஒரு மர்மமான கொலை வழக்கை மையமாகக் கொண்டது. இப்படம் நாளை ஜீ5 ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

    "கிரவுண்ட் ஜீரோ"

    கிரவுண்ட் ஜீரோ (Ground Zero) திரைப்படம் கடந்த ஏப்ரலம் மாதம் 25ம் தேதி வெளியான ஒரு இந்தி ஆக்ஷன்-த்ரில்லர் படமாகும். இது உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. தேஜஸ் பிரபா விஜய் தியோஸ்கர் இயக்கிய இப்படம், அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    "சிஸ்டர் மிட்நைட்"


    இயக்குனர் கரண் கந்தாரி இயக்கத்தில் ராதிகா ஆப்தே, அசோக் பதக் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான பாலிவுட் திரைப்படம் சிஸ்டர் மிட்நைட் (Sister Midnight). சிஸ்டர் மிட்நைட் ஒரு வினோதமான நகைச்சுவையுடன் கூடிய திகில் படமாகும். இப்படம், அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    "பைனல் டெஸ்டினேஷன் பிளட்லைன்ஸ்"


    பிரபல ஹாலிவுட் திகில் திரைப்படம் பைனல் டெஸ்டினேஷன். கடந்த மாதம் வெளியான இப்படம் நல்லவரவேற்பை பெற்றது. இதில் , பிரெக் பாசிங்கர், தியோ பிரியோன்ஸ், ரிச்சர்ட் ஹார்மன், குயின்டெசா ஸ்விண்டெல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் கடந்த 17-ந் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி.யில் வெளியானது.

    • ஹிப்ஹாப் தமிழா நடிப்பில் கடந்த மே மாதம் 24ம் தேதி வெளியான படம் பிடி சார்.
    • 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது அரண்மனை 4.

    தமிழ் திரையில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற மூன்று படங்கள் இன்று ஓடிடியில் வெளியானது.

    அந்த வகையில், மெளன குரு, மகாமுனி போன்ற படங்களை இயக்கிய சாந்தகுமார், இயக்கத்தில் வெளியான 'ரசவாதி தி அல்கெமிஸ்ட்' படம் ஒடிடியில் வெளியானது.

    படத்தின் கதாநாயகனாக அர்ஜூன்தாஸ், கதாநாயகியாக தன்யா ரவிச்சந்திரன் மற்றும் ரம்யா சுப்ரமணியன், ஜி.எம்.சுந்தர், சுஜித் சங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா, ரிஷிகாந்த் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர். கடந்த மே மாதம் 10 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படம் ஆஹா ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

    ஹிப்ஹாப் தமிழா நடிப்பில் கடந்த மே மாதம் 24ம் தேதி வெளியான படம் பிடி சார். வேல்ஸ் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை காத்திக் இயக்கினார். இந்த படம் திரையரங்கு வெளியீட்டில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இன்று அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியானது.

    மேலும், சுந்தர் சி இயக்கத்தில் உருவான அரண்மனை 4 கடந்த மே மாதம் 3ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. அந்த வெற்றியை தொடர்ந்து, அரண்மனை 4 இன்று டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

    • ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களை காண்பதற்காகவே தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளன.
    • எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைப் பார்க்லாம்.

    திரையரங்கில் வெளியாகும் திரைப்படங்களை தாண்டி, ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களை காண்பதற்காகவே தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளன.

    அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைப் பார்க்கலாம்.

    டெஸ்பிகபிள் மீ 4

    டெஸ்பிகபிள் மீ 4 அமெரிக்க அனிமேஷன் நகைச்சுவைத் திரைப்படமாகும். யுனிவர்சல் பிக்சர்ஸ் அண்ட் இலுமினேஷன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தை கிறிஸ் ரெனாட் இயக்கினார். 6 பாகங்களை கொண்ட இந்த படத்தின் 4-வது பாகம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்படம் நேற்று (05-11-2024) ஜியோ சினிமா ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

    கோழிப்பண்ணை செல்லதுரை

    இயக்குனர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் வெளியான படம் 'கோழிப்பண்ணை செல்லதுரை'. இந்த படம் கிராமத்துக் கதைக்களத்தில் அண்ணன் - தங்கை உறவைப் பேசும் படமாக உருவாகியுள்ளது. ஏகன், பிரிகிடா, ஐஸ்வர்யா தத்தா, தினேஷ் முத்தையா, சத்யா உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் நேற்று (05-11-2024) அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

    பிரசன்ன வதனம்

    அறிமுக இயக்குனர் அர்ஜுன் ஒய்.கே இயக்கத்தில் நடிகர் சுஹாஸின் நடிப்பில் வெளியான படம் 'பிரசன்ன வதனம்'. இது ஒரு மர்ம திரில்லர் திரைப்படம் ஆகும். திரையரங்குகளில் வெளியான இப்படம் தொடர்ந்து சிறந்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்படம் இன்று (06-11-2024) ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

    சிட்டாடல் ஹனி பன்னி

    சமந்தா மற்றும் வருண் தவான் நடித்துள்ள வெப் தொடர் 'சிட்டாடல் ஹனி பன்னி'. ஆக்சன் திரில்லர் நிறைந்த இந்த தொடரை இயக்குனர் ராஜ் மற்றும் டிகே இயக்கியுள்ளார். இது ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி உள்ளது. இந்த நிலையில், இந்த வெப் சீரிஸ் நாளை (07-11-2024) அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

    வேட்டையன்

    இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் 'வேட்டையன்'. இந்த படத்தில் பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்தும், என்கவுன்டரை எதிர்க்கும் வழக்கறிஞராக அமிதாப் பச்சனும் நடித்துள்ளனர். திரையரங்கில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் வருகிற 8-ந் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

    தேவரா

    கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவான படம் 'தேவரா பாகம்-1''. இதில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஆக்சன் கதைக்களத்தில் வெளியான இப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் இப்படம் வருகிற 8-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

    ஏ.ஆர்.ஏம்

    அறிமுக இயக்குனர் ஜித்தின் லால் இயக்கத்தில் மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டொவினோ தாமஸ் நடித்துள்ள படம் 'அஜயந்தே ரண்டம் மோஷனம்' (ஏ.ஆர்.எம்). இந்த படத்தில் டொவினோ தாமஸ் மூன்று விதமான தோற்றங்களில் நடித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் வருகிற 8-ந் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.


    • வடபழனி நெக்ஸஸ் விஜயா மாலில் நடைபெற்றது. அப்போது, JOOPOP HOME செயலி (app) அறிமுகப்படுத்தப்பட்டது.
    • இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் நடிகர் பாபி சிம்ஹா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    தமிழ் திரையுலகின் பிரபல டான்ஸ் மாஸ்டரான ஷெரிப் மாஸ்டர் நடனத்திற்காக பிரத்தியேகமாக "JOOPOP HOME" என்கிற இந்தியாவின் முதல் OTT தளத்தை துவங்கியுள்ளார்.

    இதற்கான விழா வடபழனி நெக்ஸஸ் விஜயா மாலில் நடைபெற்றது. அப்போது, JOOPOP HOME செயலி (app) அறிமுகப்படுத்தப்பட்டது.

    ஓடிடி ஆப் அறிமுக நிகழ்வில் புகழ்பெற்ற திரைப்பட கலைஞர்களான இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் நடிகர் பாபி சிம்ஹா ஆகியோருடன் ஷெரீப்பின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    JOOPOP HOME அறிமுக நிகழ்வில் கலந்து கொண்ட நட்சத்திரங்கள், ஷெரிப்பின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பைப் பற்றிய தங்கள் பார்வையைப் பகிர்ந்து கொண்டனர். 

    இதுகுறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கூறுகையில், " ஷெரிப் ஒரு நடன இயக்குநர் மட்டுமல்ல, அவர் ஒரு கதைசொல்லி. நாங்கள் இணைந்து பணியாற்றிய ஒவ்வொரு திரைப்படத்திலும் அவரது படைப்பாற்றலால் உயர்ந்து கொண்டே வருகிறது. JOOPOP HOME எனும் இந்த ஆப்  நடனத்தை அடுத்த படிக்கு கொண்டு  செல்வதற்கான அவரது உந்துதலுக்கு ஒரு சான்றாகும்" என்றார்.

    மேலும், டான்ஸ் மாஸ்டர்  ஷெரிப் கூறுகையில், "ஆரம்பத்தில் இருந்தே நடனம்தான் என் வாழ்க்கை. எனது நடனப் பள்ளியிலிருந்து தொடங்கி, 2009ல் போட்டி, இப்போது ஒரு திரைப்பட நடன இயக்குநர் என, நான் எப்போதும், அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.

    JOOPOP HOME என்பது சமூகத்திற்கு நான் ஆற்றும் பங்களிப்பாகும். நடனக் கலைஞர்கள் உலகளாவிய அரங்கில் பிரகாசிக்க ஒரு இடத்தை உருவாக்குவதற்கு என்னுடைய ஒரு சிறு முயற்சியாக இது இருக்கும்" என்றார்.

    ×