இந்த வார ஓடிடி-ல என்ன படம் பாக்கலாம்.. ?

ஹிப்ஹாப் தமிழா நடிப்பில் கடந்த மே மாதம் 24ம் தேதி வெளியான படம் பிடி சார்.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது அரண்மனை 4.
இந்த வார ஓடிடி-ல என்ன படம் பாக்கலாம்.. ?
Published on

தமிழ் திரையில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற மூன்று படங்கள் இன்று ஓடிடியில் வெளியானது.

அந்த வகையில், மெளன குரு, மகாமுனி போன்ற படங்களை இயக்கிய சாந்தகுமார், இயக்கத்தில் வெளியான 'ரசவாதி தி அல்கெமிஸ்ட்' படம் ஒடிடியில் வெளியானது.

படத்தின் கதாநாயகனாக அர்ஜூன்தாஸ், கதாநாயகியாக தன்யா ரவிச்சந்திரன் மற்றும் ரம்யா சுப்ரமணியன், ஜி.எம்.சுந்தர், சுஜித் சங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா, ரிஷிகாந்த் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர். கடந்த மே மாதம் 10 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படம் ஆஹா ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

ஹிப்ஹாப் தமிழா நடிப்பில் கடந்த மே மாதம் 24ம் தேதி வெளியான படம் பிடி சார். வேல்ஸ் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை காத்திக் இயக்கினார். இந்த படம் திரையரங்கு வெளியீட்டில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இன்று அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியானது.

மேலும், சுந்தர் சி இயக்கத்தில் உருவான அரண்மனை 4 கடந்த மே மாதம் 3ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. அந்த வெற்றியை தொடர்ந்து, அரண்மனை 4 இன்று டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com