போர் தொழில் இயக்குநருடன் மீண்டும் இணையும் அசோக் செல்வன்

அசோக் செல்வன் மீண்டும் போர் தொழில் இயக்குனரான விக்னேஷ் ராஜாவுடன் இணையவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.போர் தொழில் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
போர் தொழில் இயக்குநருடன் மீண்டும் இணையும் அசோக் செல்வன்
Published on

போர் தொழில் திரைப்படம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 9-ஆம் தேதி சரத்குமார், அசோக் செல்வன் நடிப்பில் வெளியானது. பிரகாஷ் எழுத்தில் இந்த படத்தை விக்னேஷ் ராஜா இயக்கினார்.ஜேக்ஸ் பிஜாய் இப்படத்திற்கு இசையமைத்தார் . நடிகர் சரத்குமாருக்கு இந்த படம் மிக பெரிய புகழைப் பெற்றுக் கொடுத்தது. அதேவேளை, தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து மிகவும் நேர்த்தியான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து கொண்டு இருப்பவர் அசோக் செல்வன். நித்தம் ஒரு வானம், ஓ மை கடவுளே,சபா நாயகன் , ப்ளூ ஸ்டார் ஆகிய சிறந்த படங்களில் நடித்து ஒரு முன்னணி கதாநாயகனாக வளர்ந்துக் கொண்டு வருகிறார். இந்நிலையில் அசோக் செல்வன் மீண்டும் போர் தொழில் இயக்குனரான விக்னேஷ் ராஜாவுடன் இணையவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது, போர் தொழில் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. விரைவில் அதிகாரப் பூர்வமான தகவல் படகுழுவினரிடம் இருந்து வெளியிடப்படும்.

X

Maalai Malar
www.maalaimalar.com