மாரி செல்வராஜுடன் இணையும் கார்த்தி

ப்ரின்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மாரி செல்வராஜ் படம் இயக்கவிருக்கிறார். தற்பொழுது கார்த்தியின் 26வது படம் நலன் குமாரசாமியும் , 27 ஆவது படத்தை '96' படம் இயக்கிய ப்ரேம் குமார் இயக்கவுள்ளனர்.
மாரி செல்வராஜுடன் இணையும் கார்த்தி
Published on

சமீபத்தில் பிறந்தாள் கொண்டாடிய மாரி செல்வராஜை வாழ்த்தி பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சமூக வலையத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

ப்ரின்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மாரி செல்வராஜ் படம் இயக்கவிருக்கிறார். அதில், கார்த்தி கதாநாயகனாக நடிக்க இருப்பதாக கூறியுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு 2025ம் ஆண்டு தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளனர். இன்னும் இப்படத்தில் யார் நடிக்க போகிறார்கள் என்ற தகவல்களை பின்னர் அறிவிப்பதாக கூறியுள்ளனர்.

தற்பொழுது கார்த்தியின் 26வது படம் நலன் குமாரசாமியும் , 27 ஆவது படத்தை '96' படம் இயக்கிய ப்ரேம் குமார் இயக்கவுள்ளனர். தொடர்ந்து, பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்க இருக்கிறார். கைதி 2, சர்தார்2 போன்ற படத்திலும் நடிக்க இருக்கிறார்.

கார்த்தியை வைத்து முன்னணி இயக்குநர்கள் படம் இயக்க இருப்பதால், ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தை தொடர்ந்து அடுத்தாக துருவ் விக்ரம் வைத்து பா. ரஞ்சித் தயாரிப்பில் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com