என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "writer"

    • எங்கள் அணியிலிருக்கும் ஒருவருக்கு “சாகித்ய பால புரஸ்கார் 2025” விருது அறிவிப்பு.
    • மாத இதழ்களின் வெற்றிக்கு பங்களித்து வருபவர்தான் எழுத்தாளர் சரவணன்.

    எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு 2025ம் ஆண்டுக்கான 'பால சாகித்ய புரஸ்கார் விருது' அறிவிக்கப்பட்டுள்ளது.

    அவர் எழுதிய 'ஒற்றைச் சிறகு ஓவியா' என்ற நாவலுக்காக ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகையுடன் விழும் வழங்கப்படுகிறது.

    இந்நிலையில், எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    எங்கள் அணியிலிருக்கும் ஒருவருக்கு "சாகித்ய பால புரஸ்கார் 2025" விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    "ஒற்றைச் சிறகு ஓவியா" என்ற சிறார் நாவலுக்காக எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் இவ்விருது பெறவிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க திராவிட மாடல் அரசு அமைந்தது முதல் நமது பள்ளிக் கல்வித்துறையால் மாணவர்களுக்காக வெளியிடப்படும் தேன்சிட்டு, ஊஞ்சல் ஆகிய மாத இதழ்களின் வெற்றிக்கு பங்களித்து வருபவர்தான் எழுத்தாளர் திரு.விஷ்ணுபுரம் சரவணன்.

    அறிவியல் - முற்போக்கு சிந்தனைகளை குழந்தைகளிடம் விதைக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரரான அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். குழந்தைகளுக்கான அவரது எழுத்துப்பணி உயிர்ப்போடு தொடரட்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • எல்லாரும் புகழ்ந்து தள்ளிய இப்படத்தை "எனக்கு பிடிக்கவே இல்லை .. எரிச்சலூட்டும் படமாக இருந்தது" என்று எழுத்தாளர் ஜெயமோகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
    • "மஞ்சும்மல் பாய்ஸ்" படத்தை எடுத்த படக் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோபமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    சமீபத்தில் வெளியாகிய மஞ்சும்மல் பாய்ஸ் படம் மக்களிடையே பெரிய வரவேற்பு பெற்றது. உலகளவில் பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷனில் ரூ. 100 கோடியை தாண்டியது. தமிழ்நாடு வசூலில் ரூ.15 கோடியை தாண்டியது.

    வெகுஜன மக்களால் இத்திரைப்படம் மிகவும் கொண்டாடப்பட்டது. நடிகர் கமல், விக்ரம், தனுஷ், உதயநிதி ஸ்டாலின், சித்தார்த் போன்ற பல முன்னணி பிரபலங்களால் பாராட்டு பெற்றது.

    இப்படத்தின் இயக்குநர் சிதம்பரம் அடுத்து துனுஷை வைத்து படம் இயக்குவதற்கான பேச்சுவார்த்தை நடப்பதாக தவல்கள் வெளியானது.

    எல்லாரும் புகழ்ந்து தள்ளிய இப்படத்தை "எனக்கு பிடிக்கவே இல்லை .. எரிச்சலூட்டும் படமாக இருந்தது" என்று எழுத்தாளர் ஜெயமோகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து மேலும் அவர்," தென்னகம் முழுக்க உள்ள சுற்றுலா இடங்களுக்கு வரும் கேரளத்துப் பொறுக்கிகளிடம் அநாகரீக செயல் உள்ளது. சுற்றுலா மையங்கள் மட்டுமல்ல அடர்காடுகளுக்குள் கூட வந்துவிடுவார்கள்.

    குடிகுடிகுடி அவ்வளவுதான். வாந்தி எடுப்பது, சலம்புவது, விழுந்து கிடப்பது, அத்துமீறுவது, வேறெதிலும் ஆர்வமில்லை. அடிப்படை அறிவு கிடையாது. எந்தப் பொது நாகரீகமும் கிடையாது" என்று கூறியுள்ளார்.

    மேலும்," மலையாள சினிமா இக்கால சமூதாயத்தை கெடுக்கிறது எனவும், அடுத்து வரும் தலைமுறைகளை ஜாலியாக இருப்பது என்றால் அது குடியும் கும்மாலமும்மாக இருப்பது தான் என போதிக்கிறது" என அவர் விமர்சித்துள்ளார்.

    கேரளத்தின் நலம் நாடும் ஓர் அரசு இருந்தால் "மஞ்சும்மல் பாய்ஸ்" படத்தை எடுத்த படக் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோபமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    எழுத்தாளர் ஜெயமோகனின் இந்த விமர்சனம் சமூக வலை தளங்களில் ஒரு அதிர்வலையை உண்டாக்கியுள்ளது. பலர் ஜெயமோகன் கூறியது சரிதான் என்றும், பலர் அவர் கூறுயதை மறுத்தும் விவாதித்துக் கொண்டு இருக்கின்றனர்.




     




     


    • 'டிஸ்கவரி சினிமாஸ்' மூ.வேடியப்பன் இப்படத்தை தயாரிக்கிறார்.
    • படத்தின் டீசரை நாளை மாலை 6 மணிக்கு இயக்குனர் லிங்குசாமி அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிடவுள்ளார்.

    எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்குநராக அறிமுகமாகியுள்ள வடக்கன் படத்தின் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியானது.

    வெண்ணிலா கபடி குழு, எம்டன் மகன், நான் மகான் அல்ல, பாண்டிய நாடு உள்ளிட்ட பல படங்களுக்கு வசனமும், அழகர் சாமியின் குதிரை படத்திற்கு கதை, வசனமும் எழுதிய எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

    'டிஸ்கவரி சினிமாஸ்' மூ.வேடியப்பன் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் குங்கும ராஜ் நாயகனாகவும், வைரமாலா நாயகியாகவும் நடித்துள்ளனர். இருவருமே இப்படஹ்ட்தின் மூலம் தான் அறிமுகமாகிறார்கள்.கர்நாடக இசைக் கலைஞர் எஸ்.ஜே.ஜனனி இப்படத்திற்கு இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, நாகூரன் படத்தொகுப்பு செய்கிறார்.

    இந்நிலையில் படத்தின் டீசரை நாளை மாலை 6 மணிக்கு இயக்குனர் லிங்குசாமி அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிடவுள்ளார். தமிழ்நாட்டில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களை மையமாக வைத்து காமெடியான கதைக்களத்தில் அமைந்து இருக்கிறது வடக்கன் திரைப்படம்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிரதமர் ராபர்ட் பிகோ மீது ஒருவர் துப்பாக்கியால் சுட்டார்.
    • துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    பிரேக்:

    மத்திய ஐரோப்பிய நாடான சுலோவேக்கி யாவின் பிரதமர் ராபர்ட் பிகோ நேற்று ஹன்ட்லோவா நகரில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு வெளியே வந்தார். அவர் அங்கு திரண்டிருந்த பொதுமக்களிடம் பேசி கொண்டிருந்தார்.

    அப்போது பிரதமர் ராபர்ட் பிகோ மீது ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். அந்த நபர் 5 முறை சுட்டார். இதில் உடலில் குண்டு பாய்ந்த ராபர்ட் பிகோ சுருண்டு விழுந்தார். உடனே துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் மடக்கி பிடித்தனர். படுகாயம் அடைந்த பிரதமர் ராபர்ட் பிகோவை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவருக்கு வயிறு மற்றும் மூட்டு பகுதியில் குண்டு பாய்ந்து இருந்தது.

    இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும் அவர் அபாய கட்டத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே பிரதமர் ராபர்ட் பிகோ ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாகவும், அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    இதுகுறித்து துணைப் பிரதமர் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் டோமஸ் தாராபார் கூறும்போது, `இந்த சம்பவத்தால் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அதிர்ஷ்டவசமாக அறுவை சிகிச்சை நன்றாக இருந்தது. இந்த நேரத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் இல்லை. நிச்சயமாக அவர் உயிர் பிழைத்து விடுவார்' என்று நினைக்கிறேன் என்றார்.

    இந்த நிலையில் பிரதமர் ராபர்ட் பிகோவை துப்பாக்கியால் சுட்ட நபர் குறித்த அடையாளம் தெரிய வந்தது. அவர் 71 வயதான எழுத்தாளர் என்றும், அவர் துஹா என்ற இலக்கியக் கழகத்தின் நிறுவனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. லெவிஸ் நகரைச் சேர்ந்த அவர் ஸ்லோவாக் எழுத்தாளர்களின் சங்கத்தில் உறுப்பினராக உள்ளார். மூன்று கவிதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    இதற்கிடையே உள்துறை மந்திரி கூறும்போது, `பிரதமர் மீதான படுகொலை முயற்சியின் பின்னணியில் தெளிவான அரசியல் உள்நோக்கம் இருப்பது ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது' என்றார்.

    • புத்தகங்களைப் போன்ற சிறந்த வழிகாட்டி எதுவும் இல்லை.
    • சிறந்த வாசிப்பாளனால் மட்டுமே சிறந்த எழுத்தாளானாக முடியும்.

    குழந்தைப் பருவத்தில் வாசிக்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்தி விட்டாலே போதும் அவர்கள் வளர வளர படிக்கும் ஆர்வம் தானாகவே வரும்.

    புத்தகங்களை படிக்கும் குழந்தைகள் இயல்பாகவே அறிவுத் திறனையும், கற்பனை ஆற்றலையும், நினைவாற்றலையும் பெற்று விடுகின்றனர். இத்தகைய ஆற்றலால் பள்ளிப் பாடங்கள் படித்தல் கூட எளிதாக வசப்பட்டு விடுகிறது.

    படிக்கும் போதே மகிழ்ச்சியைத் தருவது புத்தகங்கள் என்பது மறுக்க இயலாத உண்மை. புத்தகங்களைப் படிக்கும் குழந்தைகள் அதில் வரும் பாத்திரங்களை மனதில் காட்சிப் படுத்தும் போதே கற்பனைத் திறன் விரிவடைகிறது.

    மனம் சோர்ந்திருக்கும் போது ஊக்கத்தை தருவதும் புத்தகங்கள் தான். அறம் சார்ந்த சிந்தனைகளையும் சமூகம் சார்ந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முயல்வதும் புத்தகங்கள் தான்.

    ஒரு குழந்தையை நேர்மையான வழியில் நடக்க வைப்பதற்கும், சிறந்த சமூக செயற்பாட்டாளானாக அவனை உருவாக்குவதிலும் புத்தகங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன.

    புத்தகங்களைப் போன்ற சிறந்த வழிகாட்டி எதுவும் இல்லை. நல்ல நண்பனாக நம்முடன் பயணிப்பவை புத்தகங்கள். நம் சிந்தனையைத் துாண்டவும், சிந்தனையை புதுப்பிக்கவும் உதவுவது புத்தகங்கள்.

    நம் மனதை உழுது, அதில் நல்ல பண்புகளை விதைப்பது புத்தகங்கள். சிறந்த வாசிப்பாளனால் மட்டுமே சிறந்த எழுத்தாளானாக முடியும்.

    எனவே பெற்றோர்கள் புத்தகங்களை வாசிக்கும் குழந்தைகளை சின்ன சின்ன பரிசுகள் கொடுத்து ஊக்கப்படுத்துங்கள்.

    படித்த புத்தகத்தில் உள்ள செய்திகள் பற்றி கலந்துரையாடுங்கள். குழந்தைகளின் பிறந்த நாளில் புத்தகங்களை பரிசளியுங்கள். கதைகளை படிக்கும் குழந்தைகளை பின்னர் அந்த கதையை கூறச் செய்யலாம்.

    கதை சொல்லிகளாக இருந்த பாட்டிகள் விட்டுச் சென்ற வெற்றிடத்தை குழந்தைகளைக் கொண்டு நிரப்புங்கள். பின்னாளில் அவர்களை சிறந்த கதை சொல்லிகளாக உருவாக்கும் நல் வாய்ப்பை புத்தகங்கள் வழங்குகின்றன.

    முதலில் பெற்றோர் முன்னுதாரணமாக இருந்து புத்தகங்களை வாசிக்க வேண்டும். குழந்தைகளுக்கும் அப்பழக்கம் இயல்பாக மாறிவிடும்.

    தேடலை உருவாக்கி அவர்களின் சிந்தனைகளைத் துாண்டிவிடும். புத்தகங்களைப் படிக்கும் போது அவை நம்மை அந்த காலத்திற்கே கடத்திச் செல்லும். இயற்கை காட்சிகளை கண்முன் கொண்டு வந்து நிறுத்தும். வரலாற்றுக் காலத்தின் சுவடுகளில் அவர்களை பதிய விடும்.

    • இப்படத்தில் குங்கும ராஜ் நாயகனாகவும், வைரமாலா நாயகியாகவும் அறிமுகமாகிறார்கள்.
    • கர்நாடக இசைக் கலைஞர் எஸ்.ஜே.ஜனனி இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

    'வடக்கன்' திரைப்படத்தின் பெயரை தணிக்கை அதிகாரிகள் தடை செய்ததால், தற்போது அப்படத்தின் பெயர் 'ரயில்' என மாற்றப்பட்டுள்ளது

    எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்குநராக அறிமுகமாகவுள்ள இப்படத்தை டிஸ்கவரி சினிமாஸ் தயாரிக்கிறது.

    வெண்ணிலா கபடி குழு, எம்டன் மகன், நான் மகான் அல்ல, பாண்டிய நாடு உள்ளிட்ட பல படங்களுக்கு வசனமும், அழகர் சாமியின் குதிரை படத்திற்கு கதை, வசனமும் எழுதிய எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

    இப்படத்தில் குங்கும ராஜ் நாயகனாகவும், வைரமாலா நாயகியாகவும் அறிமுகமாகிறார்கள். கர்நாடக இசைக் கலைஞர் எஸ்.ஜே.ஜனனி இப்படத்திற்கு இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, நாகூரன் படத்தொகுப்பு செய்கிறார். இப்படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

    தமிழ்நாட்டில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களை மையமாக வைத்து காமெடியான கதைக்களத்தில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மர்மமும் அமானுஷ்யமும் நிறைந்த புனைவுகளை எழுதுவதில் தேர்ந்தவர்.
    • வரலாற்றுக் காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைத்துச் சுவாரசியமான முறையில் புதினங்களைப் புனைவதில் வல்லவர்.

    பிரபல எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் (65) மதுரையில் உள்ள தன் இல்லத்தில் குளியலறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரையுலகமும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

    மர்மமும் அமானுஷ்யமும் நிறைந்த புனைவுகளை எழுதுவதில் தேர்ந்தவரான இந்திரா சௌந்தர்ராஜன் நூற்றுக்கணக்கான நூல்களைப் படைத்தவர்.

    வரலாற்றுக் காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைத்துச் சுவாரசியமான முறையில் புதினங்களைப் புனைவதில் வல்லவர். வெற்றிகரமான பல தொலைக்காட்சித் தொடர்களிலும் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் பங்காற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அவரை இழந்து அவரது வாடும் குடும்பத்தினருக்கும் வாசகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • "திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908" ஆய்வு நூலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ஆ.இரா.வேங்கடாசலபதி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.

    வரலாற்று ஆய்வாளரும் எழுத்தாளருமான ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதிய "திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908" ஆய்வு நூலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆ.இரா.வேங்கடாசலபதி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (MIDS) பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.

    • வலது கண் பார்வையை இழந்த ருஷ்டியின் ஒரு கையும் செயல்பாட்டை இழந்தது.
    • 'தி சாத்தானிக் வெர்சஸ்' நாவலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    ஆங்கில எழுத்தாளர் சல்மான் ருஷ்டி(27) மீது கத்தியால் சரமாரி தாக்குதல் நடத்திய ஹாடி மாத்தரை(27)குற்றவாளி என நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

     32 ஆண்டுகள் சிறை தண்டனையை மாத்தர் எதிர்கொள்கிறார். ஏப்ரல் 23 ஆம் தேதியில் இருந்து அவருக்கான தண்டனை விதிக்கப்படுகிறது. விசாரணையின்போது மாத்தர்  எதுவும் பேச மறுத்துவிட்டார்.

    விசாரணை முழுவதும், நீதிமன்றத்திற்குள் நுழையும் போதும் வெளியேறும் போதும் அவர் "சுதந்திர பாலஸ்தீனம்" என்று மட்டுமே கூறினார்.

    இந்தியாவில் பிறந்த பிரிட்டிஷ் - அமெரிக்க எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, கடந்த 2022 ஆகஸ்ட் 12 ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள சௌடௌகுவா கல்வி நிறுவனத்தில் நடந்த ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

    அப்போது மேடையில் எரிய ஹாடி மாத்தர், சல்மான் ருஷ்டியை வெறும் 27 நொடிகளில் 12 முறை சரமாரியாகக் கத்தியால் குத்தினார்.

    சம்பத்தின்பின் ருஷ்டி ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு 6 வார சிகிச்சைக்கு பின் படிப்படியாக குணமானார்.

    இந்த தாக்குதலில் ருஷ்டியின் தலை, கழுத்து, இடது உள்ளங்கை, கல்லீரல், குடல் உள்பட உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி தனது வலது கண் பார்வையை இழந்த ருஷ்டியின் ஒரு கையும் செயல்பாட்டை இழந்தது.

     

    ஹாடி மாதர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1988 ஆம் ஆண்டு சல்மான் ருஷ்டி வெளியிட்ட 'தி சாத்தானிக் வெர்சஸ்' நாவலுக்கு இஸ்லாமிய மதவாதிகளிடையே கடும் எதிர்ப்பு இருந்து வந்தது. அவர் பல கொலை மிரட்டல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

    இதன் தொடர்ச்சியாக இந்த தாக்குதல் அரங்கேறியது என்று கூறப்படுகிறது. இந்த நாவலில் சல்மான் ருஷ்டி நபிகள் நாயகத்தின் வாழ்க்கையின் சில பகுதிகளை கற்பனையாக சித்தரித்துள்ளதே எதிர்ப்புக்கு காரணமாகும். 

    • சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் வசுந்தரா நடிப்பில் தென்மேற்கு பருவகாற்று திரைப்படம் வெளியானது
    • அடுத்ததாக சுனில் இயக்கும் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

    2010 ஆம் ஆண்டு சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் வசுந்தரா இருவரும் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது தென்மேற்கு பருவக்காற்று. இப்படத்திற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வசுந்தரா வென்றார்.

    இதைத் தொடர்ந்து போராளி, துணிக துணிக,தலைக்கூத்தல், கண்ணை நம்பாதே போன்ற திரைப்படத்தில் நடித்து மக்கள் மனதில் பதிந்தார், கடைசியாக சூர்யா நடித்த கங்குவா திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். அடுத்ததாக சுனில் இயக்கும் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

    இந்த நிலையில் வசுந்தரா நடிகை அவதாரத்தில் இருந்து எழுத்தாளர் அவதாரம் எடுத்துள்ளார். தற்பொழுது தி அக்கியூஸ்ட் என்ற கிரைம் நாவலை எழுதியுள்ளார். அடுக்குமாடியில் நடந்த மர்மமான கொலையை பற்றி மையமாக வைத்து இந்த கிரைம் நாவல் எழுதப்பட்டுள்ளது.

    வசுந்தரா எழுதிய (The Accused) நாவலை வாங்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    வங்காளதேசத்தை சேர்ந்தவர் பிரபல எழுத்தாளர் ஷாஜகான் பாச்சுவை மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 நபர்கள் சுட்டுக் கொலை செய்தனர். #Bangladesh #ShahzahanBachchu
    டாக்கா:

    வங்காளதேசத்தை சேர்ந்தவர் பிரபல எழுத்தாளர் ஷாஜகான் பாச்சு (வயது 60). இவர் பிஷாகா புராக்காசோனி என்ற பதிப்பகத்தையும் நடத்தி வருகிறார். மதசார்பற்ற கொள்கைகள் பற்றி துணிச்சலுடன் தனது கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.

    இவர் நேற்று முன்தினம் தனது பூர்வீக கிராமமான ககால்டியில் இருந்தார். அங்கு அவர் நோன்பு திறப்புக்கு முன்பாக ஒரு மருந்துக்கடைக்கு, தனது நண்பர்களை சந்திப்பதற்காக சென்று இருந்தார்.

    அப்போது அங்கே 2 மோட்டார் சைக்கிள்களில் 5 நபர்கள் வந்தனர். அவர்கள் ஷாஜகான் பாச்சு இருந்து கொண்டிருந்த மருந்துக்கடையின் மீது கச்சா வெடிகுண்டுகளை வீசினார்கள். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

    அதைத் தொடர்ந்து அவர்கள் மருந்துக்கடையில் இருந்த ஷாஜகான் பாச்சுவை தரதரவென்று வெளியே இழுத்து வந்தனர். அவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுத்தள்ளிவிட்டு அங்கு இருந்து தப்பினர்.

    இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணம் ஆனார்.

    இந்த சம்பவத்துக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. மதசார்பற்ற கொள்கைக்கு அவர் ஆதரவாக பேசி வந்ததால் பல முறை அவருக்கு மத அடிப்படைவாத அமைப்புகளிடம் இருந்து கொலை மிரட்டல்கள் வந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    சம்பவம் குறித்து தகவல் அறிந்த பயங்கரவாத தடுப்பு போலீஸ் படையினர் அங்கு விரைந்து, ஷாஜகான் பாச்சு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சுட்டுக்கொல்லப்பட்ட ஷாஜகான் பாச்சு, வங்காளதேச கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ஆவார்.

    வங்காளதேசத்தில் மதசார்பின்மைக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்கள், எழுதுகிறவர்கள், வலைத்தள பதிவாளர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்கதை ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.  #Bangladesh #ShahzahanBachchu #tamilnews 
    ×