search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    நரகாசூரன் வழக்கமான ஒரு படமாக இருக்காது - சந்தீப் கிஷன்
    X

    நரகாசூரன் வழக்கமான ஒரு படமாக இருக்காது - சந்தீப் கிஷன்

    கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், ஸ்ரேயா, ஆத்மிகா நடித்துள்ள நரகாசூரன் படம் ஒரு வழக்கமான படமாக இருக்காது என்று சந்தீப் கிஷன் கூறியுள்ளார். #Naragasooran #SundeepKishan
    சந்தீப் கி‌ஷன் நடிப்பில் நரகாசூரன் படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. அவரிடம் பேசியதில் இருந்து...

    பாடல்கள், சண்டை என்று வழக்கமான படமாக இருக்காது. இந்த படம் பார்த்த அனுபவமே வேறு மாதிரியாக இருக்கும். படத்தை தியேட்டரில் பார்த்தால் மட்டும் தான் அந்த அனுபவம் கிடைக்கும். எனக்கு மட்டுமல்ல அரவிந்த்சாமி, ஸ்ரேயா, ஆத்மிகா என அனைவருக்குமே முக்கிய படமாக இருக்கும். நல்ல படத்தை பார்த்த திருப்தி கிடைக்கும்.

    தமிழில் 4 படங்கள் தான் நடித்துள்ளேன். ரசிகர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த தான் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுக்கிறேன். அஜித், விஜய் படத்துக்கும் எனக்கும் ஒரே விலை டிக்கெட் தான். என்னை போன்ற வளரும் நடிகர்கள் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். நான் பிறந்தது வளர்ந்தது, படித்தது எல்லாமே சென்னையில் தான். வாய்ப்பு தேடும்போது தமிழ், தெலுங்கு, இந்தி என எல்லா மொழிகளிலுமே தேடினேன். தெலுங்கில் கிளிக் ஆனது. ஐதராபாத் சென்றால் தமிழ் பையனாக பார்க்கிறார்கள். சென்னை வந்தால் தெலுங்கு நடிகராக பார்க்கிறார்கள். என்னை ஏற்றுக் கொள்வார்கள் என்று காத்திருக்கிறேன்.

    தெலுங்கில் பெரிய போட்டி இருக்குமே... எப்படி ஜெயித்தீர்கள்?

    எனக்கு அப்படி தெரியவில்லை. நாம் நேர்மையாக இருந்து கடினமாக உழைத்தால் அதற்கான பலன் கண்டிப்பாக கிடைக்கும். எனக்கு பிறகு வந்தவர்கள் தான் விஜய்சேதுபதியும், சிவகார்த்திகேயனும். ஆனால் எனக்கு முன்பு இருந்தே அவர்கள் தங்கள் கடின உழைப்பை கொட்டியிருக்கிறார்கள். அதுதான் அவர்களின் வெற்றிக்கு காரணம். சினிமாவில் நேரம் முக்கியம்.



    தெலுங்கில் இந்தி இயக்குனர் ஒருவர் இயக்கத்தில் நடிக்கிறேன். தமன்னா எனக்கு ஜோடியாக நடிக்கிறார். திருடன் போலீஸ் இயக்குனர் கார்த்திக் ராஜு இயக்கத்தில் ஒரு படம் சென்று கொண்டிருக்கிறது. ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு படங்கள் என்று கட்டுப்பாடு வைத்துள்ளேன்.

    அதிகமாக நண்பர்கள் இல்லாமல் தனியாக இருக்கிறீர்களே?

    எனக்கு மது பழக்கம் இல்லை. அதனால் பார்ட்டிகளில் என்னை பார்க்க முடியாது. விஷால் என் உடன் பிறக்காத அண்ணன். சித்தார்த், விஷ்ணு என சில நண்பர்கள் இருக்கிறார்கள். வரு சரத்குமார், ராகுல் ரவீந்தர், தமன்னா, ரெஜினா என்று நண்பர்கள் பட்டியல் கொஞ்சம் நீளும் என்றார். #Naragasooran #SundeepKishan

    Next Story
    ×